வணக்கம் நண்பர்களே!!!! காதலை தேடி அடுத்த பதிவு போட்டுட்டேன்… எல்லாரும் படிச்சிட்டு அப்படியே சிரமம் பார்க்காம உங்க பொன்னான கருத்துக்களை சொல்லிட்டு போங்க செல்லங்களா….
காதலை தேடி – 13
என்னை மன்னிச்சுடுங்க என இருவரையும் நோக்கி மதுரா கூற “உன்னோட மன்னிப்பை தூக்கி குப்பைல போடு. நாங்க தான் நீ எங்களோட உயிர் தோழினு நினைச்சிட்டு இருக்கோம். நீ எங்களை அப்படி நினைச்சிருந்தா எங்ககிட்ட இருந்து மறைக்கணும்னு தோணிருக்குமா?” என காவ்யா சரமாரியாக கேள்வி கேட்க மதுரா என்ன சொல்வதென தெரியாமல் மற்ற இருவரையும் பார்த்தாள்.
“சரி விடு காவ்யா. என்ன தான் இருந்தாலும் தோழியா போய்ட்டா. இந்த ஒரு தடவ மன்னிச்சுடலாம் என கிருஷ்ணா கூற காவ்யா அமைதியாக இருந்தாள். சரி வாங்க ஒரு டீ அடிச்சுட்டு வரலாம் என ருத்ரா சூழ்நிலையை மாற்ற அதை புரிந்த கிருஷ்ணாவும், “ஆமா காவி. இந்த மதுகிட்ட சண்டைபோட்டு தொண்டை வறண்டு போயிடுச்சு. வாங்க போகலாம்”.
தன் வலிகளை மறைத்துக்கொண்டு மதுரா தோழிகளிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்தாள். அவளின் வலியை புரிந்து கொண்டு தோழிகளும் மேலும் எதுவும் துருவாமல் இருந்தனர்.
தன் தேர்வினை முடித்த வினோத் அதன் முடிவுகளுக்கு காத்து கொண்டிருந்தான்.
“அம்மா எங்க பாலாவை காணோம்?” – காவ்யா
“அவனும் சுகுமாரும் இந்த ஆங்கில வருஷப்பிறப்புக்கு ஏதோ போட்டிலாம் வைக்க போறானுங்களாம். அதுக்காக வினோத் கூட சேர்ந்து பேசிட்டு இருக்கான்”.
“ம்ம்.. சரி மா. நானும் மாடிக்கு போறேன்”.
“என்ன சுகு. என்னென்ன போட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டிங்களா?”
ம்ம்.. எல்லாம் பண்ணியாச்சு கா.. நானும் பாலாவும் தான் எல்லா போட்டிக்கும் தயார் பண்ணிட்டு இருக்கோம்.
“ஹே வினோத்.. நீயும் இவங்க கூட சேர்ந்துட்டியா?”
“ஆமா காவ்யா. எனக்கு பரீட்சை முடிஞ்சுடுச்சு. தேர்வு முடிவு வரவரைக்கும் நானும் சும்மா தானே இருக்கேன்”.
“சரி பரீட்சை எப்படி எழுதியிருக்க?”
“நல்ல எழுதியிருக்கேன். இந்த தடவை கண்டிப்பா தேர்வாகிடுவேன். அடுத்த கட்ட தேர்வுக்கு தயாராகனும்.”
இருட்டும் வரை இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். என்ன பேசினர் என கேட்டால் இருவருக்கும் தெரியாது. ஆனால் இருவரும் இந்த தனிமையை இழக்க விரும்பவில்லை.
வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் முப்பத்தியொன்று. இரவு ஆடல் பாடல்களுடன் மற்ற போட்டியும் நடைபெற்று கொண்டிருக்க அந்த தெருவில் உள்ள அனைவரும் பங்கேற்றனர். கூச்சலும் விசில் சத்தமும் பறந்து கொண்டிருக்க மணி பதினொன்று. இளசுகள் பட்டாளம் வருடப்பிறப்பை வரவேற்க உற்சாகமாக ஆடி பாடிக் கொண்டுருந்தனர். போட்டிகளை சுகுமாரும், பாலாவும் நடத்தி கொண்டிருந்தனர். போட்டிகளின் முடிவில் வென்றவர்களுக்கு பரிசு கொடுக்க கூட்டம் கலைய ஆரம்பித்தது.
பெரியவர்கள் அனைவரும் கலைந்து செல்ல இளசுகள் மட்டுமே மிஞ்சி இருந்தனர். காவ்யாவும் கிளம்ப “அக்கா என்ன அதுக்குள்ள கிளம்பிட்ட?”
“தூக்கம் வருதுடா. நீங்க கொண்டாடுங்க. நா கிளம்புறேன்”.
“அக்கா இன்னும் ஒரு அரை மணி நேரம் இரு கா. கேக் வெட்டலாம்னு இருக்கோம்” என சுகுமார் சொல்ல கூடியிருந்த சிறுவர்களும் கத்த காவ்யா சரியென ஒப்புக்கொண்டாள். மணி பன்னிரெண்டை காட்டியவுடன் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த கேக்கை சிறுவர்களை வைத்து வெட்டி கொண்டாடினர்.
கொண்டாட்டங்கள் முடிந்து வீட்டுக்கு வந்த காவ்யாவை “காலைல சீக்கிரம் எழுந்து கோலம் போடு. எப்போவும் தூங்குற மாதிரி தூங்கிடாத. அப்படியே சரோஜா ஆன்டி வீட்டுக்கும் கோலம் போட்டுடு. அவங்களுக்கு மூட்டு வலி”.
“மா நீயே போடுமா. எனக்கு இப்போவே தூக்கம் வருது. ஏண்டி ஒரு நாள் தான. கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருக்க கூடாதா?”
“காலைல சீக்கிரம் எழுந்துக்க முடியாது மா. வேணும்னா இப்போவே கோலம் போட்டுட்டு தூங்குறேன்”.
சரி வா. நானும் உனக்கு உதவி செய்றேன். காவ்யா கோலம் போட்டு வண்ணம் கொடுக்க ஆரம்பிக்க சுகு, பாலா, வினோத் வந்து சேர்ந்தனர்.
அவர்கள் மூவரையும் பார்த்த வசந்தா, அவர்களை உதவுமாறு சென்றுவிட வினோத்தை தவிர மற்ற இருவரும் காவ்யாவிற்கு உதவி செய்தனர். அவர்கள் வீட்டில் போட்டு முடித்தவுடன் வினோத் வீட்டில் போட ஆரம்பிக்க, “அக்கா நீ கோலத்துக்கு வண்ணம் கொடுக்கும் போது எங்களை கூப்பிடு” என சொல்லி இருவரும் அங்கே நின்றிருந்த மற்றொரு நண்பனிடம் சென்று பேசி கொண்டிருக்க, காவ்யா கோலம் போட்டு வண்ணம் கொடுக்க பலமுறை கூப்பிட்டும் இருவரும் பேச்சு சுவாரஸ்யத்தில் வரவில்லை. அதுவரை ஒரு ஓரமாக அமர்ந்து அவளை பார்த்து கொண்டிருந்த வினோத் அவளுக்கு உதவி செய்ய வந்தான்.
“அந்த நள்ளிரவு நேரத்தில் தனக்கு பிடித்தவருடன் இருக்கும் நேரத்தை இருவரும் ரசித்து கொண்டிருந்தனர். பேச்சுக்கள் இன்றி இருந்த மௌனமே இருவருக்கும் போதுமானதாக இருந்தது”.
“இரவின் தனிமை நிலவின் குளுமை மனதிற்கு பிடித்தவளின் மௌனம் என வினோத்திற்குள் சொல்ல முடியாத உணர்வை கொடுக்க அவன் தனக்குள் எடுத்த முடிவு கொஞ்சகொஞ்சமாய் மாற ஆரம்பித்தது”.
மௌனத்தை முதலில் கலைத்த வினோத் அவளிடம் விளையாட எண்ணி , “காவ்யா, நீ கொஞ்ச நாள் முன்னாடி கேட்டியே நான் காதலிக்கிற பொண்ணு யாருனு?
“நா அந்த பொண்ணுக்கிட்ட என்னோட காதலை சொல்லிட்டேன்”. ஏதோ கனவுலகில் இருந்து விழித்தவளை போன்று அவனை ஏறிட்டு பார்த்தாள்.
“என்ன சொன்ன? மறுபடியும் சொல்லு?”
“நான் காதலிக்கிற பொண்ணுகிட்ட என்னோட காதலை சொல்லிட்டேன்னு சொன்னேன்”. இவர்கள் பேசிகொண்டிருக்கும் போது சுகுவும், பாலாவும் வந்துவிட வினோத்தால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை.
காவ்யா கலங்கிய விழிகளை மறைத்து கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டாள். அவளிடம் விளையாட நினைத்த வினோத்திற்கு அவளின் கலங்கிய விழிகளே மீண்டும் கண்முன் வர அவனால் தூங்க முடியவில்லை. கைபேசியை எடுத்து அவளுக்கு மெசேஜ் அனுப்ப அதற்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
எப்படியும் அவள் தூங்கியிருக்க மாட்டாள் என்பது நிச்சயம். தேவையில்லாமல் அவளை அழவைத்துவிட்டோம் என கலங்கி என்ன செய்வது என தெரியாமல் இருந்தவன் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக
“உன்னை சீண்டி விளையாட எண்ணி
கடைசியில் உன் கண்ணீரால் தோற்றேனடி..
என் நெருங்கிய தோழியாய் இதுவரை இருந்த நீ..
என் உயிராய் என் வாழ்க்கை பயணத்தில் வருவாயா?
காவ்யமானவளே!!! என் வாழ்க்கையை காவியமாக்கிட என்னுடன் கை கோர்ப்பாயா?”
என அவளுக்கு கவிதை மூலம் தன் காதலை சொன்னான் அந்த விநோதமானவன்.
தேடல் தொடரும்….
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…