வணக்கம் நட்புக்களே!!! இதோ அடுத்த அத்யாயம் பதிவு பண்ணிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க நட்பூஸ்… போன அத்யாயத்துக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி!!!
காதலை தேடி – 12
காலை கதிரவன் யாருக்கும் காத்திராமல் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது.
தோழிகள் இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருக்க இருவரின் மாற்றத்தை கவனிக்கவில்லை.
தன் கையில் திருமண அழைப்பிதழுடன் வந்த ருத்ராவை பார்த்த கிருஷ் “ருத்ரா!!! அடிப்பாவி எங்ககிட்டயே மறைச்சிட்டியே? நீயெல்லாம் ஒரு தோழியா?”
“கிருஷ் தலையில எங்கயாவது அடிபட்டுச்சா? என்ன திடிர்னு பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்க?”
என்னது பைத்தியமா? ஏன் சொல்லமாட்ட? பைத்தியம் கூட சகவாசம் வச்சுக்கிட்டா நானும் பைத்தியமாகாம வைத்தியரா ஆகமுடியும்.
“ஏய்! இப்போ எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க?”
“முதல்ல நா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு”.
“என்னனு கேட்டு தொலை”.
“எப்போ உனக்கு கல்யாணம் நிச்சயமாச்சு?”
“என்னது? கல்யாணமா? நான் எப்போ சொன்னேன்?”
“அப்போ கையில என்னது கல்யாண பத்திரிகை?”
“கல்யாண பத்திரிகை வச்சிருந்தா எனக்கு தான் கல்யாணமா?”
“சும்மா கொளுத்தி போட வேண்டியதுதான். உனக்கு கல்யாணம்னு தெரிஞ்சா உன்னை சைட் அடிக்கிற நாலு பேரோட பார்வை என்மேல விழும்ல அதுக்கு தான்”.
“அட கிராதாகி!!! கூடவே ஒரு துரோகியா வச்சுக்கிட்டு இவ்ளோ நாள் சுத்திருக்கேனே. இது தீபக் தங்கச்சியோட கல்யாண பத்திரிகை”.
“ஆமா வந்ததுலேயிருந்து நாம இரண்டு பேருதான் பேசிட்டு இருக்கோம். இவங்க இரண்டு பேருக்கு என்னாச்சு?”
“நானும் காலையில இருந்து அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கேன். மது என்னமோ எதையோ பறிகொடுத்தவ மாதிரி இருக்கா. காவ்யா வந்ததுல இருந்து எதையோ நினைச்சு சிரிச்சுட்டு இருக்கா. மது கிட்ட கேட்ட ஒண்ணுமில்லைனு சொல்றா. காவ்யாகிட்ட கேட்ட சிரிச்சே கொல்ற”.
“ஓ!!! இதுக்கு தான் பைத்தியம் கூட சகவாசம்னு சொன்னியா?”
இவர்கள் பேசுவது காதில் விழுந்தாலும் மதுரா எதிலும் கலந்து கொள்ளவில்லை. காவ்யாவோ வானத்தில் மிதந்து கொண்டிருந்தாள். வண்டியில் எப்படி வீட்டிலிருந்து அலுவலகம் வந்தாள் என்றால் அவளுக்கே அது தெரியாது.
சூடான தண்ணீரை ஒரு கோப்பையில் பிடித்து வந்த ருத்ரா, காவ்யாவின் கையில் வைக்க “ஸ்ஸ்.. எரும மாடே.. ஏண்டி கைல சூடு தண்ணீரை வைக்குற? கண்ணு தெரியல?”
“மேடம்.. உங்களுக்கு தான் இங்க இருக்க எங்களை கண்ணு தெரியல…” என்னை விஷயம்? காலைல இருந்து எதையோ நினைச்சு சிரிச்சிட்டே இருக்கியாம்?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை… அதுசரி மதுரா ஏன் இப்படி இருக்க?”
“நீங்க தான் அவள வண்டியில கூட்டிட்டு வந்திங்க. கூட இருக்கவ ஏன் இப்படி இருக்கானு கூட கேட்காம அப்படி எந்த உலகத்துல பறந்துட்டு இருக்கீங்க?”
ருத்ரா கேட்டவுடன் தான் காவ்யாவிற்கு நிகழ்காலம் நினைவிற்கு வர தன் தவறை நினைத்து குற்றயுணர்ச்சியுடன் அவர்களை பார்க்க கிருஷ்ணா தான் “சரி விடு ருத்ரா. இவளை அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல மதுரா ஏன் இப்படி இருக்கானு கேட்போம்”.
“மதுரா என்னாச்சு? ஏன் இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை ருத்ரா. வீட்ல அம்மாகூட கொஞ்சம் சண்டை. அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு”.
“எங்களுக்கு நீ இந்தளவுக்கு தான் உன் மனசில இடம் கொடுத்திருக்கியா? எங்ககிட்டேயே பொய் சொல்றியா? எங்க கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு நாங்க அந்நியமா போய்ட்டோமா?”
“அப்படியெல்லாம் இல்லை ருத்ரா. நான் தான் சொன்னேனே. அம்மா கூட….”
தன் இருக்கையில் இருந்து சடாரென எழுந்த ருத்ரா, “இனிமே உன்கிட்ட உன்னோட தனிப்பட்ட விஷயம் எதுவும் கேட்கமாட்டேன்” என அங்கிருந்து நகர்ந்தவளின் கையை பிடித்த மதுராவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிய தோழிகள் மூவருக்கும் என்ன செய்வது என தெரியாமல் அமைதியாக இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து தன் நிலைக்கு வந்த மதுரா தோழிகளிடம் அருளை பற்றி அனைத்தையும் கூறி முடித்தாள்.
காவ்யாவும், கிருஷ்ணாவும் அவள் சொல்வதை கேட்டு பேச்சு வராமல் திகைத்து இருக்க, ருத்ரா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
தன் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென பருகிய காவ்யா அதிரிச்சியில் இருந்து சற்று வெளியே வந்தாள்.
மதுராவை பார்த்தா காவ்யாவின் விழிகளில் ஆச்சர்யமா? இல்லை கோபமா? என ருத்ராவால் பிரித்தறிய முடியவில்லை.
“மதுரா, எனக்கு அவனோட முகம் கூட நினைவில்லைடி. நாம எல்லாம் ஒண்ணா தானே இருந்தோம். எங்களுக்கு தெரியாமல் எப்படி?” என கிருஷ்ணா கேட்க மதுரா மௌனமாக அமர்ந்திருந்தாள்.
அவனுக்கு கல்யாணம் ஆகலனு உனக்கு எப்படி தெரியும்? அப்படியே கல்யாணம் ஆகாதவனா இருந்தாலும் அவனை பத்தி உனக்கு என்ன தெரியும்? ஒருவேளை அவன் கெட்டவனா இருந்து உன்னை ஏதாவது பண்ணியிருந்தா என்னை செய்துருப்ப? அவனை பத்தி எதுவுமே தெரியாம எப்படி இந்த ஒரு மாசம் அவன் கூட பழகின? என காவ்யா சரமாரியாக கேள்விகளை கேட்க மதுராவிடம் மீண்டும் மௌனம்.
மதுரா இவர்களிடம் இருந்து மறைத்ததும் இதற்காக தானே. இவர்களின் எந்த கேள்விகளுக்கும் அவளிடம் விடையில்லை.
இவர்களின் உரையாடலில் இதுவரை குறிக்கிடாத ருத்ரா “சரி மது. நீ அவன காதலிச்ச. அவன் கிட்ட அதை சொல்லிட்ட. அவனும் மறுத்துட்டான். அதுக்கேன் இப்படி வாழ்க்கையே முடிஞ்ச மாதிரி இருக்க?”
எனக்கு தெரியல ருத்ரா. என்னோட காதலை அருளுக்கு தெரியப்படுத்திட்டா மட்டும் போதும்னு தான் நினைச்சேன். ஆனா இப்போ அது நிறைவேறாம போகும்னு நினைச்சா மனசு வலிக்குது.
மதுரா இந்த விஷயத்தை காவ்யாவிடமும் கிருஷ்ணாவிடமும் மறைத்ததை இருவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ருத்ரா மட்டுமே மதுராவிடம் பேசிக்கொண்டிருக்க மற்ற இருவரும் அமைதியாக இருந்தனர். பேசிமுடித்துவிட்டு மற்ற இரு தோழிகளும் ஏதாவது சொல்வார்கள் என இருவரையும் மதுரா பார்க்க, இருவரும் அமைதியாக தங்கள் இருக்கையை விட்டு எழுந்து சென்றனர். தோழிகளின் இந்த செயலால் செய்வதறியாது இருந்த மதுராவை ருத்ரா தான் ஆறுதல் சொல்லி அழைத்து சென்றாள்.
காவ்யாவும், கிருஷ்ணாவும் மதுராவுடன் பேசி ஒரு வாரமாயிற்று. இந்த ஒருவாரமாக மதுராவும், காவ்யாவும் ஒன்றாக வண்டியில் வந்தாலும் காவ்யா, மதுராவுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அலுவலகத்திலும் இருவரும் பேசாதது மதுராவை மிகவும் வருத்தப்படுத்த ருத்ரா, இருவரிடமும் சென்று பேசினாள்.
“நீங்க ரெண்டு பேரும் இப்படி மதுரா கிட்ட பேசாமல் இருந்தால் எல்லாம் சரியாகிடுமா?”
“என்ன பேச சொல்ற ருத்ரா? கல்லூரியில இருந்து நாங்க பழகுறோம். எந்த விஷயத்தையும் நாங்க அவகிட்ட மறைச்சது இல்லை. ஆனா எவ்வளவு பெரிய விஷயத்தை எங்க கிட்ட இருந்து சொல்லாமல் மறைச்சிருக்கா? எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?”
“மதுரா உங்க கிட்ட இருந்து மறைச்சது தப்பு தான் காவ்யா. அதுக்காக அவளுக்கு ஆறுதலா இருக்க வேண்டிய நாமே இப்படி அவகிட்ட பேசாம இருந்தா அவளோட நிலைமையை யோசிச்சீங்களா?”
“அவ காதலிக்கிற விஷயத்தை எங்களுக்கு முன்னாடியே சொல்லியிருந்தா நாங்க அவளுக்கு ஏதாவது உதவி செய்திருப்போம். அவளும் இப்படி அவனை இரண்டு வருஷமா நினைச்சிட்டு கஷ்டப்பட்டிருக்க தேவையில்லை. இவ்வளவு தான் அவ எங்க மேல வச்சிருக்க நம்பிக்கைன்னு நினைக்கும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு ருத்ரா”.
“நீங்க சொல்றது எல்லாமே சரி தான் கிருஷ்ணா. ஆனா சண்டை போட இது நேரமில்லை. நீங்க இரண்டு பேரும் முதல்ல அவகிட்ட வந்து பேசுங்க”.
“எங்களை எப்படி பேச சொல்ற ருத்ரா? அவளுக்கு மட்டும் தான் வலியா? காதல் தோல்வி மட்டும் தான் வலியா? எங்களுக்கு வலி இல்லையா? அவளுக்கு எங்க நட்பு மேல நம்பிக்கை இல்லைனு நினைச்சா எவ்வளவு வலிக்குது தெரியுமா என கிருஷ்ணா கூற, இப்போ நீங்க இரண்டு பேரும் பேசப்போறீங்களா? இல்லையா? என ருத்ரா கேட்டுக் கொண்டிருக்க மதுரா அங்கே வந்து நின்றாள்”.
அவளை பார்த்தவுடன் மற்ற இருவரும் அங்கிருந்து நகர, கிருஷ்ணாவின் கையை பிடித்து மதுரா நிறுத்த அவளை முறைத்தவாறு இருவரும் நின்றனர்.
“என்னை மன்னிச்சுடுங்க என அவர்களை பார்த்து கேட்க இருவரும் ஒன்றும் சொல்லாமல் நின்றனர். உங்க கிட்ட மறைக்கனும்னு எந்த எண்ணமும் இல்லை. உங்க கிட்ட சொன்னா, நீங்க கேக்குற கேள்விக்கு எந்த பதிலும் என்கிட்டே இல்லை. அதனால தான் மறைச்சேன் என மதுரா கண்ணீருடன் கூற “பளார்” என அவள் கன்னத்தில் அறைந்தாள் காவ்யா”.
தேடல் தொடரும்….
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…