வணக்கம் தோழிகளே!!!
நான் தேவமதி. இது என்னுடைய இரண்டாவது கதை. நீண்ட இடைவெளிக்கு பின் எழுதுகிறேன்.
இந்த கதை நான்கு தோழிகளையும், அவர்களின் காதலையும் மையப்படுத்தி கொஞ்சம் நிஜமும் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து தரவிருக்கிறேன்.
கதையின் போக்கில் இவர்களை பற்றியும், இவர்களின் காதலின் தேடலையும், தேடலின் வெற்றி, தோல்வியையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் அனைவரின் ஆதரவை எதிர்பார்த்து என் கதையை பதிவிடுகிறேன். ஏதேனும் பிழையோ அல்லது தவறோ இருப்பின் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.
காதலை தேடி….
எரும மாடே! இப்போ நீ வரப்போறீயா இல்லையா? – காவ்யா
ஒரு அஞ்சு நிமிசம். இந்த மெயில் மட்டும் அனுப்பிட்டு வரேன். இல்லனா கிளையன்ட் செத்தே போயிடுவான்ற ரேஞ்சுக்கு பேசுவான்டி அந்த கொசு (அவங்க TL) – மதுரா
அம்மா தாயே! நீ மெயில் அனுப்பினாலும் சரி. இல்ல அந்த கிளையன்ட்ட நேர்லேயே போய் நலம் விசாரிச்சாலும் சரி. நீ பொறுமையா கேஃபிடரியா (cafeteria) வந்து சேரு. எனக்கு தலை வலிக்குது. எங்க இருந்து தான் நமக்கு மட்டும் இந்த மாதிரி வந்து சேருதுங்களோ என தன் ஆருயிர் தோழியை திட்டி கொண்டே கேஃபிடரியாவில் ஒரு காபி எடுத்துக் கொண்டு அமர்ந்தாள் காவ்யா.
ஹாய் டி. என்ன நீ மட்டும் இருக்க. எங்க மது என்றபடி அவளின் டேபிளில் இருந்த காபியையும் கூடவே காவ்யாவின் முறைப்பையும் பெற்றுக்கொண்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்தாள் ருத்ரா.
பக்கிங்களா எங்க இருந்து எனக்குன்னு வந்து சேர்ந்தீங்க? என சரமாரியாய் காவ்யா ருத்ராவை திட்டி கொண்டிருக்க, விடுடி இந்தா என அவளுக்கும் சேர்த்து ஒரு கப்பை நீட்டினாள் கிருஷ்ணா.
நண்பேண்டா என அவளை ஒரு மெச்சுதல் பார்வையை பார்த்தபடி அவளிடம் வாங்கி கொண்டு அவர்களின் அரட்டையை தொடர மதுராவும் வந்து சங்கத்தில் ஐக்கியமாக அங்கே அவர்களின் அரட்டை தொடர்ந்தது.
மதுரா, காவ்யா, கிருஷ்ணா மூவரும் ஒரே கல்லூரியில் பொறியியல் படித்தவர்கள். ருத்ரா இவர்களுடன் அலுவலகத்தில் சேறும் பொழுது ஒரே பேட்ச். இப்பொழுது நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர்.
இவர்களின் அரட்டையை கலைக்கும் விதமாக மதுராவின் செல்பேசி சிணுங்கியது.
சொல்லுங்க மா. இன்னைக்கு சாயங்காலமா? எத்தனை மணிக்கு? இப்படி திடிர்னு சொன்னா எப்படி மா? சரி. வரேன் என செல்லை அணைத்தாள். என்ன டி அம்மா போன் பண்ணிருக்காங்க. என்ன விஷயம்? – கிருஷ்ணா.
ப்ச் ஒன்னும் இல்ல. அம்மா சீக்கிரம் வீட்டுக்கு வர சொன்னாங்க. சாயங்காலம் மாப்பிள்ளை வீட்டிலருந்து வரங்களாம்.
ஹே சூப்பர் டி. அப்போ நம்ம குருப்லயே உனக்கு தான் முதல்ல கல்யாணம். ருத்ரா, மது கல்யாணத்துக்கு நம்ம மூணு பேரும் ஓரே மாதிரி புடவை கட்டலாம் என மற்ற மூவரும் கலகலத்து கொண்டிருக்க மதுரா மட்டும் அமைதியாக இருந்தாள். மதுராவின் அமைதியை காவ்யாவை தவிர மற்ற இருவர் கவனிக்கவில்லை.
தேடல் தொடரும்…