காதலே நீ கானலா புத்தகம்

0
1871

மது ஹேப்பி… கொரோனாவினால் தான் இந்த கால தாமதம்.அதை புரிந்து கொண்டு காத்திருந்த வாசகர்களுக்கும், பிரியா நிலையம் ராஜசேகர் சாருக்கும் என்னுடைய வந்தனங்கள்.

சரி கதையைப் பத்தி குட்டியா சொல்லட்டுமா?

மனநிலை பாதிக்கப்பட்டு,பின்நாளில் சரியான பெண் நாயகி பொழில் அரசி, அவளின் ஒரே சொந்தமான அவளின் அப்பா நேரில் கூட வராமல் போனிலேயே வாழ்த்த அவளது திருமணம் நடைபெறுகிறது நம்ம ஹீரோ விக்கிரமாதித்யன் கூட…கல்யாணம் முடிஞ்சதும் அவள் மனதில் ஆயிரம் கேள்விகள், குழப்பங்கள்…

அழுத்தக்கார கணவனிடம் எப்பொழுதும் அமைதி மட்டுமே பதிலாக கிடைக்கிறது. வீட்டு வேலைக்காரர்கள் கூட அவளை பைத்தியம் என்று ஒதுக்கும் நிலை…திருமணம் முடிந்த அன்றே அவளது தந்தையின் மரண செய்தி வந்து சேர… அவள் தடுமாறுகிறாள்.

புகுந்த வீட்டில் எல்லாரும் அவளை ஒதுக்க… கட்டிய கணவனோ காதலையும், அன்பையும் வாறி வழங்கினாலும் அவளின் கடந்த காலத்தை மட்டும் அவள் தெரிந்து கொள்ள விடாமல் தடுக்கிறான்.அவளின் அருமைத் தந்தை ஒரு கொலைக் குற்றவாளி என்ற விபரம் எப்படியோ அவளுக்குத் தெரிய வர … உண்மையை தெரிந்து கொள்ள வேண்டி அவள் நிறைய தகிடுதத்தங்கள் செய்கிறாள்.

அவளே இப்படி என்றால் ஹீரோ சார் சும்மா இருப்பாரா? அவர் அவள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் நொடிப்பொழுதில் ஒன்றுமே இல்லாமல் செய்து விடுகிறார்.திருமணம் ஆனதில் இருந்தே அரசியின் ஒவ்வொரு பழக்க வழக்கமும் ஹீரோ விரல் நுனியில் வைத்திருப்பார்.அரசி அவரை அழைக்கும் ‘விக்கிரமா’ தனி ஸ்பெஷல் வேற…

சொந்த தம்பியே ஹீரோவை கொலைகாரன் என்று சொல்ல… அரசி மேலும் குழம்புகிறாள்.கணவனின் காதல் நிறைந்த முகத்திற்கு பின்னே மறைந்திருக்கும் அந்த பயங்கரம் என்ன?

அரசியின் தந்தை கொன்றது யாரை? எதனால் அதை எல்லாம் அவளிடம் இருந்து மறைக்கின்றான்?தம்பியே அவனைப் பற்றி அவ்வாறு சொல்வதற்கு என்ன காரணம்?இந்த அத்தனை கேள்விகளுக்கும் பொழிலரசிக்கு விடை தெரிந்ததா என்பதை அறிய காதலே நீ கானலா புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

Priyanilayam

51,Gowdiamuttroad ,

near ponnusamy hotel,

Royapettah,

Chennai

Phone number: 9444462284

http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BE…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here