காதலே தவமாய்

0
358

” என்ன டி ..என்ன பண்ணலான்னு இருக்க ?? ” என்று கேட்ட சுபியை

” இதுல பண்றதுக்கு என்ன இருக்கு ……. எப்படி நடக்குமோ நடக்கட்டும் …ஆனா ….நான் எங்க அப்பா அம்மாவ மீறி கண்டிப்பா எதுவும் பண்ண மாட்டேன் ….இன்னும் 1 வருஷத்துக்கு…..” என்றாள் சக்தி ….
” என்னடி ..இப்படி சொல்ற ???” என்று வினவினாள் …

” இங்க பாரு டா ……சும்மா லவ் பண்றன் லவ் பண்றனு சொல்லிட்டு….. நான் வினய் வேண்டான்னு சொல்லலையே ………நான் ஆரம்பத்துலயே சொன்ன மாதிரி எங்க வீட்டுல என் காதலுக்கு ஒத்துப்பாங்க ….ஆனா அவங்களுக்கும் திடிர்னு என்ன பன்ணுன்னு ஒரு தடுமாற்றம் இருக்காதா ?? “

உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லிருக்கன் ….என்ன பொறுத்தவரைக்கும் காதல் ஒரு தவம் …..அந்த தவத்தை கடைசி வரைக்கும் காப்பாத்துறவங்களுக்கு மட்டும்தான் அதுக்கான சந்தோசம் கிடைக்கும் ..

” காதல்னா முதல்ல நம்பிக்கை நிறைய அன்பு இது எல்லாத்துக்கும் மேல மத்தவரோட கனவுகளுக்கு மதிப்பு கொடுக்கணும் …அவங்கள இன்னும் ஒருபடி அவங்க கனவுநோக்கி மேல கொண்டுபோகணும் ..கொண்டுபோக முடிலனாலும் அவங்க கனவை அடைய உதவியா இருக்கனும் ..இது மட்டும் காதல் னு சொல்ல வரல …ஆனா காதலுக்கு இதுதான் அடித்தளமா இருக்குனு நான் நம்புறேன் ….

” இன்னும் எளிமையா சொல்லணுனா உங்க வீட்டுல இருக்கவங்கள உன்னால ஒத்துக்கவைக்க முடியும்னா நீ காதலிக்கலாம் ……அப்புறம் இன்னொரு விஷயம் …ஒரு பொண்ணு அவங்க வீட்டுல காதலை சொல்றதுக்கும் பையன் அவங்க வீட்டுல காதலை சொல்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு …..நம்ம இந்த சமூகத்தை இதுக்கு குறை சொல்ல முடியாது ..ஏன்னா 2 பேருக்கும் அவங்க அவர்களுக்கான உரிமை ஓரளவுக்கு கிடைச்சுருக்குனு நான் நம்புறேன் ..பெத்தவங்க பெண் காதலுக்கு தடை சொல்றதுக்கு காரணம் இன்னொன்னும் இருக்கு …..”

” கல்யாணதுக்கு பிறகு அந்த பொண்ணு அவ கணவன் வீட தன்னோட வீடா வாழனும் …நம்ம பொண்ணு அந்த இடத்துல நல்லா வாழுவா அப்படிங்கிற நம்பிக்கை அவங்களுக்கு வரனும் …அந்த நம்பிக்கை வந்தா மட்டும் தான் ஒரு பொண்ண அவங்க கல்யாணம் பண்ணிகொடுக்கறாங்க ….”

” காதலிக்குறவங்க எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கனுன்னு தான் ஆசை படுறாங்க …..அதாவது …இன்னொரு குடும்பத்துல இருக்க பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தா நல்லா இருக்குனு நெனைக்கிறாங்க …அது எப்படின்னா ….ஒரு இடத்துல இருக்க செடியை இன்னொரு இடத்துக்கு கொண்டுபோய் அது வளரணுன்னு நினைக்கிறாங்க ….அதே மாதிரி தான் கல்யாணமும் ….அந்த பொண்ணு போற இடத்துல நல்லா இருக்க நெனைக்கிறவங்க ,…அவ இவ்ளோ நாளா இருந்துட்டு வர இடத்துல எப்படி இருக்களோ அப்டித்தான் இங்கேயும் இருப்பாங்க அப்படிங்கிற நிதர்சணம் புரிய மாட்டிங்குது .”

“அதுக்காக நீ வினய் அண்ணாவை விட்டு பிரிஞ்சிடுறேனு சொல்றியா ???” என்று உச்சகட்ட கோபத்தில் கத்தினாள் சுபி ….

” எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரிய மாட்டிங்குது..உடனே எப்படி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கொடுப்பாங்க … எனக்கு அவரு சூழ்நிலையும் புரியுது… அவங்க வீட்டுல இப்போ கல்யாணம் பன்ணுன்னு சொல்றாங்க ..அதுக்கு அவரு என்ன பண்ண முடியும்??? ” அதுனால தான் நான் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கலனு சொன்னேன் …ஆனா ஒரு விஷயத்த புரிஞ்சிக்கோ …வினய் உயிரே போனாலும் என்னை தவிர எந்த பெண்ணையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான் ………..என்னைக்கு இருந்தாலும் அவனுக்கு நான் தான் மனைவி ..”

” இத எப்படி நீ இவ்ளோ உறுதியா சொல்ற ???என்றாள் சுபி ….

” அதுதான் நான் அவர்மேல் வெச்சிருக்க நம்பிக்கை …அந்த நம்பிக்கை தான் என் காதல் …என்றுசொல்லி சென்ற சக்தியை பார்த்த சுபி …”கடவுளே ..எப்படியாவது இவ நம்பிக்கையை நிறைவேத்திடு ” என்று வேண்டிக்கொண்டு உறங்க சென்றாள் …..

6 மாதத்திற்கு பிறகு –

” சரியான அடம் பிடிக்கிற பொண்ணு டி நீ …” என்றான் வினய் …..

” ஏன் …நான் உங்களை என்ன செஞ்சேன் ??? ” என்று கேட்டாள் சக்தி

” நினைச்ச மாதிரியே நாளைக்கு கல்யாணம் ……அதுதான் சொன்னேன் ….”

அடுத்த நாள் வினய் மங்கள நாண் பூட்ட ….இருவரின் பெற்றோர் ஆசியுடன் இனிதே நடந்தேறியது அவர்கள் செய்த தவத்தின் பரிசு …………………

” நேத்து தனிமையிலே போச்சி யாரும் துணை இல்ல……..

யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல ……

உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே ……..

குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல….. !!!!! “

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here