காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 12

பகுதி 12

கேஷவின் அலுவலகம்.

காலை முதல் மாலை வரை இழுத்தடித்த அனைத்து முக்கிய வேலைகளையும் கருமமே கண்ணாய் கொண்டு ஆர்டர்களின் வரவு மற்றும் ஏற்றுமதி ஆனது என அத்தனையும் லேப்டாப்களில் சரிபார்த்தவனின் கண்களுக்கு மேலும் பேக்டரியில் இருக்கும் சிக்கல் கண்கூடாய் தெரிய ஆரம்பித்தது…

தொழிற்சாலையில் மொத்தம் எட்டு பிரிவுகளில் இயங்கிக்கொண்டிருக்கும் புரோடக்ஷனில் இந்த 5 புரொடக்ஷனில் மட்டும் உற்பத்தியில் ஏன் இத்தனை மாறுபாடுகள் மேலும் அடிக்கடி மிஷினரியில் ஏற்படும் காரணம் இல்லாத பழுது என எல்லாவற்றிலும் தாமதம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேலையில் கதவை தட்டிக்கொண்டு கார்த்திக் உள்ளே வர

“வா கார்த்திக் உன்னையே வர சொல்லலாம்ன்னு இருந்தேன்… நீயே வந்துட்ட!!”…

“அப்படியா!.. என்ன விஷயம் கேஷவ்?…எனிதிங் இம்பார்ட்டன்ட்?…”

“ம் இம்மபார்ட்டன்ட் தான்… என்றவன் சற்று இடைவெளி விட்டு பட் நீ ஏதோ சொல்லவந்துருக்க போல… என்ன கார்த்திக் சொல்லு” என்று ஊககினான்.

“ஆமா கேஷவ் நம்ம 4th யூனிட்ல ஒரு மிஷின் ரிப்பேர். புரோடக்ஷன் அப்படியே நிக்குது இன்னும் 3 டேஸ்ல ஆர்டர் அனுப்பிச்சே ஆகனும் “.

“யோசனையோடே சரி நம்ம கம்பெனி சர்வீஸ் மேன வர சொல்ல வேண்டியதுதானே கார்த்திக்” என்றான் கேஷவ்.

“அதை நான் முன்னமே செய்துட்டேன். பட் இன்னும் சரி செய்ய முடியல கேஷவ். புது மிஷின் தான்… என்ன பிராப்ளம்னே அவனால கண்டுபிடிக்க முடியல!!!! மிஷின் ஜாம் ஆகி நிக்குது. என்ன பண்றதுன்னே புரியல…” என்றபடி கார்த்திக் தலையில் கைவைத்து முடியை அழுந்த தள்ள

வெய்ட் ,வெய்ட் நீ ஏன் இப்படி டென்ஷன் ஆகுற?? வெளிய இருந்து வேற ஆளுக்கு இன்பார்ம் பண்ணி மெக்கனிக்க கூட்டிட்டு வரவேண்டியது தானே…” என்றபடி எழுந்துக்கொள்ள

‘இப்போ 75 பர்சன்ட் ஆர்டர் தான்டா முடிஞ்சி இருக்கு. இன்னும் 25 பர்சன்ட் இருக்குடா, இதுவரைக்கும் எப்பவும் சொன்ன நேரத்துல ஆர்டர எபப்டியாவது அனுப்பிடுவோம் இப்போ மிஷினரி கம்ளைட்னால அந்த ஒரு யூனிட்ல மொத்த வேலையும் ஸ்டாப் ஆகிடும் எத்தனை நாள்ல ரெடியாகுமுன்னு உத்தேசமா சொல்ல முடியல” என்று படபடப்பாய் கூறினான் கார்த்திக்.

“நானும் உங்கிட்ட இந்த பிராப்ளத்தை பத்தி தான் பேசனும்ன்னு இருந்தேன். இந்த மாசத்துல மட்டும் 4 முறை மிஷினரி பிராப்ளம் வந்து இருக்கு அதை எடுத்துட்டு வேற மிஷின் இறக்கலாம் ல ஏன் ரிப்பேர் பண்ணிகிட்டே டைம் வேஸ்ட் பண்ணனும்.” என்றான்.

“அந்த மிஷின் நம்பர் ஒன் குவாலிட்டி டா… அதை பிக்ஸ் பண்ணி 6 மந்த் தான் ஆகுது அதுல எப்படி இதுபோல பிராப்ளம் வருதுன்னு புரியல டா” என்று புரியாத பாவனையில் கார்த்திக் கூற

“சரி வா என்ன தான் பிரச்சனைன்னு போய் பார்க்கலாம்”. என்று கேஷவ் கூற இருவரும் அந்த புரோடக்ஷன் யூனிட்க்கு சென்றனர்.

4 ம் யூனிட்டில் வேலைகள் நிற்க தொழிலாளர்கள் ஆங்காங்கே நின்றபடி சலசலத்து கொண்டிருக்க முதலாலியைக் கண்டதும் அமைதியாகி அவர்களுக்கு வழிவிட்டு விலகி நின்றனர்.

மெஷினை பார்ததுக்கொண்டிருந்த மெக்கானிக்கிடம் “என்ன ஆச்சி மோகன் என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிச்சிட்டிங்களா?” என்று கேஷவ் மெக்கானிக்கிடம் கேட்க

“பார்த்துகிட்டு இருக்கேன் சார் இந்த முறை மெஷின்ல பிரச்சனை பெரிய அளவில் இருக்கும்ன்னு நினைக்கிறேன்”.

“எப்படி சொல்றிங்க?” என்று கேஷவ் மறுபடி கேள்வி எழுப்ப

“இந்த மிஷின் ரெண்டு மூன்று முறை ரிப்பேர் ஆகி இருக்கு சார். அது எல்லாம் சின்ன சின்ன பிராப்ளம் ஆனா இதுல என்ன பிரச்சனைன்னே கண்டுபிடிக்க முடியல இனி மதர் போர்டு தான் செக் பண்ணனும் சார் அதுல என்னன்னு தெரிஞ்சிடும்”. என்று கூற

“ஓகே டோன்ட் வேஸ்ட் ஆப் டைம். இமிடியட்டா செக் பண்ணுங்க”.என்று கனபொழுதில் கூற

துரித வேகத்தில் மெக்கானிக் அந்த மிஷினை சரிபார்க்க தொடங்கிவிட்டார். கார்த்திக்கும் கேஷவுடன் நின்று கொண்டிருந்தான். கிட்டதட்ட ஒரு மணி நேரம் போராடி என்ன பிரச்சனை என்று அறிந்து கொண்ட மெக்கானிக் “சார்” என்று கிட்டதட்ட அலறியே விட்டான்.

அவன் அலறிய வேகத்தில் பரபரப்பாய் மெக்கானிக் அருகே சன்ற கார்த்திக் “என்ன மோகன் பிரச்சனை என்னன்னு கண்டுபிடிச்சாச்சா ?”. என்று ஆர்வரமாய் கேட்க

பதட்டமாய் இருந்த மெக்கனிக்கின் முகம் பார்த்த கேஷவ் ‘என்ன மோகன் ஏதாவது” என்று ஆரம்பிக்கும் முன்னறே

“சார் மதர் போர்ட் டோட்டல் டேமேஜ் சார் எண்ண பண்ணாலும் இப்போதைக்கு இதை சரி செய்ய முடியாது” என்று கூறியவன். ‘மிஷின் புதுசு என்பதால்இதை மட்டும் தனியா வரவழைக்க முடியும் ஆனா அதிலும் ஒரு பிரச்சனை இருக்கு.” என்றவுடன் இருவரும் இதுவேறயா என்பது போல் பார்க்க மேலும் மெக்கானிகே தொடரந்தான். “மதர் போர்ட் ரெடி பண்ணி வரவழைக்க கிட்டதட்ட பத்து நாள் ஆகும்”. என்று மெக்கானிக் மோகன் கூறவும் என்ன செய்வது என்று தெரியாமல் கேஷவும் கார்த்திக்கும் விழிபிதிங்கி நிலைபுரியாமல் நின்றிருக்க கேஷவிற்க்கு புதியதாய் ஒரு யோசனை தோன்றியது “இந்த மிஷினோட வாரண்டி எத்தனை வருஷத்துக்கு இருக்கு கார்த்திக்?”. என்று சட்டென்று கேட்க

“3 இயர் வாரண்டி இருக்கு கேஷவ் பட் அதை வச்சி இப்ப கிளைன்பண்ணா கூட” என்று கூற வந்தவனை தனது பேச்சால் தடுத்து நிறுத்தியவன் “காரத்திக் நீ சொல்வது போல தான் இந்த மிஷினை மாற்றவேண்டும் என்றால் அதோட புரோசிஜர் எல்லாம் ரெடி பண்ண 2டேஸ் போகும். ஆனா நமக்கு 3நாள்ல ஆர்டரை முடிச்சி டிஸ்போஸ் பண்ணி இருக்கனும், என்ன பண்ணா இப்போ மிஷினை ரன் பண்ண முடியும்?”. என்று மெக்கானிக்கை பார்த்து கேட்க

“சார் அது ரொம்ப ரிஸ்க் சார்”. என்று பதற

செயல்படுத்தியே தீரவேண்டும் என்று முனைப்புடன் இருந்தவன் வேற எந்த காரணத்தையும் ஏற்காது தீர்கமான முடிவுடன் ரீஸ்க் எடுத்தே ஆகவேண்டும் என்ன செய்தால் இப்போ மிஷின் வொர்க் ஆகும் என்று தன் குரலிலேயே அழுத்தம் தெரிவித்து கூற

” மதர் போர்ட ரீமுவ் பண்ணிட்டு சப்பளைய பைபாஸ் பண்ணி டைரக்டா மிஷினை ரன் பண்ணணும் சார் இதுல”… என இழுக்க

இழுத்து வைத்த கோபத்தோடு “இதுல உனக்கு ஏதாவது பிரச்சனையா?” என்றவுடன் முதலாலியின் கோபத்தை பாரத்தவன் “இல்ல சார் எனக்கு எதுவும் இல்லை… மிஷின் டேமேஜ் ஆக வாய்ப்பு இருக்கு,”என்று மென்று விழிங்கி கூற “மிஷினுக்கு மட்டும் தானே வொர்க்கர்ஸ் …. வொர்க்கர்ஸ்க்கு எதுவும் பிரச்சனை இல்லையே” என்று கேட்டான்

“இல்லை சார் வொர்க்கர்ஸ்க்கு எந்த பிரச்சனையும் இல்லை…” என்றவுடன் “பின் ஏன் தாமதிக்ககறிங்க குயிக் ஃபார்ட்ஸ்ட்”. என்று மின்னல் வேகத்தில் கட்டளைகள் பறக்க

இதை கேட்ட கார்த்திக் “கேஷவ் நாம டீலர் கிட்ட பேசலாம் டா, இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து பண்ணணுமா?”.

“கண்டிப்பா எடுக்கனும் கார்த்திக்… நான் எப்பவும் கொடுத்த தேதில ஆர்டர் சப்ளை பண்ணதாதான் இருக்கனும். இந்த இண்டஸ்டீரியில நம்ம பத்தி ஒரு சொல் தவறா வந்துவிட கூடாது, இது எங்க அண்ணணோட கடின உழைப்பாலும், நேர்மையாலும் உருவானது அவனோட பஞ்சுவாலிட்டி யாரலையும் கெட்டதா இருக்க கூடாது”.என்று உறுதியாக கூறினான்.

“கேஷவ் எதுக்கும் ஜெய்கிட்ட ஒரு வார்த்தை” என்றவனை தன் பார்வையால் அடக்கியவன். மெக்கானிக்குடன் தானும் சேர்ந்து துரிதமாக வேலைகளை செயல்படுத்த துவங்கினான்.

தொழிலாளர்களுக்கு தகுந்த எச்சரிக்கைகளை கொடுத்தவன் எப்படி இதில் இருந்து தப்புவது என்பதுவரை கூறினான். இரவு பகல் என இரண்டு ஷிப்டுகள் மாறி மாறி தொழிலாளர்கள் இரு பிரிவுகள் வேலை பார்க்க புரோடக்ஷன் அளவும் உயர்ந்தது டிஸ்பேச் செய்யவேண்டிய அளவு உற்பத்தியை காட்டவும் செய்தனர். இயந்திரத்தை இயங்குவதில் ஆபத்து இருந்ததால் அதை தானே இயங்குவதாக கூறி மெக்கானிக் மோகனுடன் இருந்தவன் அதை திறம்பட இயக்கவும் செய்தான் கேஷவ். இதற்க்கிடையில் அன்னையிடம் இருந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க அதை ஏற்காமல் வேலையில் கவனமாய் இருக்க கார்த்திக்கை அழைத்து பேசினார் ஆதிநாரயணி.

“மா கொஞ்சம் வேலை போயிக்கிட்டு இருக்கு எப்ப முடியும்ன்னு தெரியல…. அது முடிஞ்சதும் அவனே உஙகளுக்கு கால் பண்ணுவான்மா”. என்று அணைத்துவிட்டான்.

இரு நாட்களாக வேலையில் மூழ்கியவன் உள்ளூரில் இருந்தும் வீட்டிற்கு கூட செல்லாமல் பேக்டீரியிலேயே இருந்து வேலை பார்த்து ஆர்டர்களை வெளியே அனுப்பியபிறகே வீட்டிற்க்கு கிளம்பினான்.

விடியற்காலை 5 மணிக்கு அழைப்பு மணி ஒலிக்க கதவை திறந்த நாரயணிக்கு ஒரே திகைப்பு தலை முதல் கால் வரை பார்வையிட இரு நாட்களாய் சவரம் செய்யாமல் துளிர் விட்ட தாடி… கலைந்த கேசம்… கசங்கிய சட்டை … என கேஷவை பார்த்ததும் தாயின் மனம் சுணங்கியது வாடிய மகனை பார்த்ததும் வாஞ்சையுடன் “வாட கண்ணா…. வா…. ஏன்டா இப்படி உடல போட்டு வருத்திக்கிற” என்று மனந்தாங்களாக கேட்க

அன்னையை இருக்கமாக அனைத்தவன் “அம்மா பீளிஸ் எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும். பர்ஸ்ட் காபி, தென் தூக்கம், அதுவரை என்னை எதுவும் கேட்காதிங்க” என்று இறைஞ்சுதலாக கூறியவன் அன்னையை சமயலறை பக்கம் அனுப்பிவிட்டு சோர்ந்து போய் சோபாவில் அமர்ந்தான்……

கேஷவின் வாடிவம் மனதை போட்டு வருத்த விருவருவென காபியை கலந்து மகனுக்கு கொடுக்க அன்னையின் சூடான காபி புது தெம்பு தந்தது. அன்னையை இளகுவாக்கும் சின்ன சிரிப்புடன் “மா 2 ஹவர்ஸ் கழிச்சி எழுப்பி விடுங்க” என்றவன் எழுந்துக்கொள்ள

“என்ன கேஷவ் 2 நாள் கழிச்சி இபபோதான் வீட்டுக்கு வந்து இருக்க இரண்டு மணி நேரம் கழிச்சி எழுப்பி விடனுமா?” என்று மகனிடம் கெஞ்சுதளாக கேட்டவர் “பசி தூக்கம் இதெல்லாம் மனுசனுக்கு ரொம்ப முக்கியம் கண்ணா… நீ இப்படி ஓய்வே இல்லாம உழைச்சா எப்படி உடம்பு என்னத்துக்கு ஆகும். வயிறு பாரு ஒட்டி போய் இருக்கு சாப்பிட்டியா இல்லையா?”. என்று ஒரு அன்னையாய் பரிதவிக்க

“மா… ” என்று அன்னை செல்லமாய் முறைத்தன் நா சாப்பிடாமல இல்லையே டீ பிஸ்கட் ஜூஸ்ன்னு குடிச்சிட்டு தான் இருந்தேன்”.என்று கூறி அவரின் கோபத்திற்கு தூபம் போட்டு ஏற்றிவிட்டான்.

மகனின் கூற்றை கேட்டதும் “போதுமா டீயும் பிஸ்கட்டும்” என்று எள்ளளாக கேட்டவர். “நான் என்ன சொன்னேன், அவன் என்ன செய்து வைச்சிருக்கான்… வரட்டும் அந்த கார்த்திக் பய” என்று அவனை திட்ட

அய்யோ மா….. நீ கார்த்திக்கை எதுவும் சொல்லிடாத நான் சாப்பிடாம இருந்ததுக்கு அவன் என்ன பண்ணுவான்.” என்று சிரித்து தாயை சமாளித்தவன் “பொறுப்பே வேண்டாம்ன்னு சொன்னேன் யாரும் கேக்கல நீதான் பாக்கனுமுன்னு கொடுத்தாச்சி இப்போ ஏன்டா இதை பாக்குரன்னு கேட்டா என்ன சொல்றது… வேலை வந்துட்டா நான் இப்படித்தான். வயிற்றுக்காக என்னுடைய பொறுப்பை விடமாட்டேன். சோ டோன்ட் நோ மோர் ஆர்கியூமெட் பீளீஸ் மா” என்று தாயின் தாடையை பிடித்து ஆட்டியவன் “என் செல்ல குட்டில இப்போ என்னை 2 அவர்ஸ் கழிச்சி எழுப்பி விடுவியாம் பிளிஸ் டியர்” என்று கொஞ்ச தாயின் கோபமும் இல்லாமல் போனது.

மகன் அறைக்கு சென்றதும் நாரயணியும் தோட்டத்திற்க்கு பூக்களை பறிக்க சென்றுவிட காலை நேர நடைபயிற்ச்சிக்கு கிளம்பிய ராஜராமனை வாசலில் நின்ற கேஷவின் கார் வரவேற்று நின்றது. மகனின் பொருட்டு அறிய மனைவியை தேடியவர் அவரை தோட்டத்தில் காண

“ஆதி….. கேஷவ் வந்துட்டானா?” என்று அவரிடம் வந்தார்.

பூக்கூடையுடன் திரும்பிய நாரயணி “வந்துட்டாங்க மேல இருக்கான்”.

“எப்போ வந்தான்”.

‘காலைல ஒரு 5 ,5.30 இருக்கும். பாவங்க புள்ள பாக்கவே ரொம்ப வாடி போய் இருந்தான்.சரியான தூக்கம் பசி இல்லாம ரெண்டு நாள்ல ஆளே மாறிட்டாங்க” என்று மனசஞ்சலத்துடன் கணவரிடம் மகனை பற்றி கூறியவர்

“பொறுப்பே இல்ல இல்லன்னு சொல்லிட்டு இருந்திங்க பாருங்க என் புள்ளையோட பொறுப்பை என்று கணவரிடன் மகனை பற்றி பெருமை பொங்க கூற ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவர். மனைவியின் குத்தல் சொற்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் “அவனை எழுப்பாதே நல்லா தூங்கட்டும். அவனும் வொர்க்க்ஸோட சேர்ந்து வேலை பார்ததிருக்கான்….. அவனுக்கு பிடிச்சத சமைச்சி கொடு” என்றவர் நான போயிட்டு வறேன். “கல்யாணத்துக்கு கிளம்பி இரு”என்று நடை பயிற்ச்சிக்கு சென்றுவிட்டார்.
…………………………………………………………..

“ராஜு இங்க பாருங்க இந்த புடவை ஒகேவா, இல்ல இதை கட்டிக்கட்டுமா ?”என்று ஷீலா கணவனிடம் ஆலோசனை கேட்டபடி கைகளில் புடவையை ஏந்தி நின்று கொண்டிருந்தாள்.

கண்ணாடி முன் தலை வாரி கொண்டு இருந்தவன் மனைவியின் கேள்வியில் “எது வேணும்னாலும் கட்டு ஆனா சீக்கிரமா கிளம்பு காலைல கல்யாணத்துக்கு கிளம்ப சொன்னா ஈவினிங் ரிசப்ஷனுக்குதான் போக போறோம்னு தோனுது” என்று நக்கல் கலந்த குரலில் கூற

ராஜுவின் முதுகில் ஒன்று வைத்தவள் ரொம்பத்தான் நக்கல் போங்க போய் வெளியே இருங்க நான் புடவை மாத்தனும் என்று அவனிடம் வெளியே கையை காட்டினாள்.

“யெய் இதுயெல்லாம் டூ மச் டீ கட்டின புருசன் முன்னாடி புடவை கட்டினா என்ன ரொம்பதான் பண்ணிக்கிற” என்று இவனும் அவளிடம் வம்பு வளக்க

குரலில் கோபத்தை வரவழைக்க நினைத்தாலும் வெக்கமே வெகுவாய் ஆக்கிரமித்து இருக்க ஆசைதான் மூஞ்சை பாரு போங்க போய் வெளியே இருங்க என்று வெக்கசிரிப்புடன் கூறிமுடித்தாள்.

அவளின் வெக்க சிவப்பில் மேலும் கிறங்கியவன் ஏன்டி என் மூகத்துக்கு என்னடி குறை என்று மேலும் முன்னேறி பக்கத்தில் வர

“அவனின் முன்னேறலில் சர்வமும் அடங்க நாமே இடங்கொடுத்துட்டோம் எனற அவஸ்தையில் அஹ்ஹா….. ஒதுங்க இடங்குடுத்தா மடத்த பிடிப்பங்களாம் எங்க அப்பத்தா ஒரு பழமொழி சொல்லும் அது மாதிரி இருக்கு உங்க வேலை போங்க என்று அவனை தள்ளி விட்டவளை காதலாய் பார்த்தவன்

ம்…. என்று கதை கேட்பவன் போல் ஒரு அடி முன்னால் வந்து நீ இன்னும் அதுக்கு கூட இடங்குடுக்கல என்று குற்றம் சாட்ட

அதன் உண்மையின் பின்னனியில் தெளிந்தவள் “மொத்தல்ல உங்களை உள்ள விட்டதே தப்பு” என்று அவனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக வெளியே அனுப்பி விட அந்தநேரம் பார்த்து ராஜீவின் தாய் வெளியில் இருந்து உள்ளே வரவும் சரியாய் இருந்தது. அவனை பாரத்ததும் ஒரு வெற்று பார்வையுடன் அவனை கடந்து உள்ளே செல்ல தாயின் பாராமுகம் மனதை வாட்டினாலும் செய்த செயல் வீரியம் புரிய அமைதியாய் இருந்தான்.

ராஜுவின் மனதினை அறிந்ததாலோ என்னவோ அவனை வெகுநேரம் சோதிக்காமல் அவனுடைய மனையாள் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள். அலங்காரம் செய்த அம்மன் சிலையாய் அம்சமாய் இருந்தவளை பார்க்க பார்க்க மனம் நிறைந்து போக ‘எனக்காக அவளுடைய பெற்றவர்களையே விட்டுட்டு வந்தா அவளுக்காக இது என்ன இதுக்கு மேலயும் தாங்கலாம் எனக்கு அந்த திடம் இருக்கு நிச்சயம் எங்க ரெண்டுபேரையும் எல்லாரும் ஏத்துக்குர காலம் வரும்’என்ற நம்பிக்கையோடு தன் மனையாலின் கரம்பிடித்து அழைத்து சென்றான்.

“இருங்க அத்தைக்கிட்ட சொல்லிட்டு வந்துறேன்”.

நீ சொன்னவுடனே போயிட்டு வா மருமகளேன்னு சொல்லபோறாங்களா!! பேசாம வா” என்று தடுக்க

“அவங்க பெரியவங்க அவங்கள மீறி நாம எவ்வளவு பெரிய விஷயத்தை செய்திருக்கோம். விடுங்க அவங்க மனசு மாறும் அதுவரை காத்திருப்போம்”. என்று அவனை சாமாதனம் செய்தவள் அமுதாவை காண சென்றாள்.

வீட்டின் பின் கட்டில் வேலையாய் இருந்த ராஜீவின் தாய் அமுதாவிடம் “அத்தை” என்று அழைக்க

செய்த வேலையே கண்ணாய் இருக்க ஒரு வார்த்தை பேசாமல் மௌனமாய் இருந்தார். எந்த எதிர்வினையும் இல்லாமல் போகவே மறுபடியும் “அத்த நான் ஹாட்பேக்ல் டிபன் செய்து எடுத்து வைச்சி இருக்கேன். சாப்பிடுங்க நான் மதியம் போல வந்திடுவேன்”. என்றாள் அவரிடம் அதற்கும் பதில் இல்லாமல் போக கண்கள் குளமாக “வரேன் அத்தை” என்று வெளியே சென்றுவிட்டதும் அவள் சென்ற திக்கையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவரை இளைய மகன் பார்த்து “மா இன்னுமா அண்ணிமேல கோபமா இருக்க?” என்ற கேள்விக்கு அவனை கோபத்துடன் ஏறிட்டவர் “உனக்கு காலேஜிக்கு டைம் ஆகலையா?” என்ற கேள்வி எழுப்ப “ஏதாவது அவங்கள பத்தி கேட்ட உடனே என் வாய அடைக்கிற மாதிரி எதிர்கேள்வி கேக்குறது… கிளம்புற, கிளம்புற, கிளம்பிக்கிட்டே இருக்கேன்”. என்று வைகைபுயல் வடிவேலுவின் சாயலில் கூறியபடி வீட்டிற்க்குள் சென்றுவிட்டான்.


முருகர் கோவில்

காந்தா போற்றி முருகா போற்றி என்று L.R . ஈஸ்வரி காந்த குரலில் பாட சர்வ அலங்காரத்துடன் என் அய்யன் கந்தன் விற்றிருந்த சுப்பிரமணி சுவாமி திருக்க்கோவிலில் கல்யாணம் நடைபெற அதை தொடர்ந்து திருமணவரவேற்பை திருமண மண்டபத்தில் வைத்துக்கொள்ளலாம் என முடிவாகியிருந்தபடியால் கல்யாண வேலைகள் பரபரப்புடன் நடைபெற்று கொண்டிருந்தது.

அம்மனி அந்தால இருக்க தேங்காயில நல்லா மஞ்சள அள்ளி பூசத்தா… இதோ இந்த தட்ட மேல எடுத்து வைங்க.. அமணிய வரிசை வைச்சி அழைச்சிட்டு வாரனும்ல என்று ஒரு முதிய பெண்மணி மணப்பந்தலில் வேலை வாங்க

இளவயது பெண்மணிகள் ஆளுக்கு ஒரு வரிசை தட்டுடன் சென்று மப்பெண்ணை கோவிலுக்குள் அழைத்து வந்து அமர வைக்க தங்க விக்ரகமாக இருந்தவளை தளிர் பச்சை பட்டுத்தி கண்களில் அஞ்சனம் எழுதி, தாமரை இதழ்களை ஒத்த மென்மையாய் இருந்த செவிமடல்களில் அலங்கரித்த ஜிமிக்கி நாணத்தில் சிவந்த கன்னங்களை உரச செவ்விதழ்களில் குறுநகை மலர்ந்து மெல்ல நடைகொண்டு தலை தாழ்த்தி இருந்தவளை பார்வையால் அளவெடுத்தவன் இவள் மொத்த வதனமும் தனக்கே என்ற கர்வம் தோன்ற அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். இருவருக்குமான கூரை பட்டு கொடுக்க அதை அணிந்து வர சென்றனர். உறவினர்கள் புடை சூழ சென்ற கவி புடவை அணிந்து கொண்டு வர மாலை அணிவித்து அவளை மனையில் அமரவைத்தனர்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Madhumathi Bharath

Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

Share
Published by
Madhumathi Bharath

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago