காதலில் உள்ளங்கள் பந்தாடுதே – 11

மாலை சூரியன் தன் உலாவினை நிறுத்தியதை உணர்த்தும் விதம் வெளிச்சம் மங்கி இருள் சூழந்து வர தன் அறையில் இருக்கும் வீணையை வாசித்துக் கொண்டிருந்தாள் தியா.

கானல் ஆகுமோ
காரிகை கனவு
தாகம் தீர்க்குமோ
கோடையின் நிலவு

தொலைவிலே வெளிச்சம்…ம்ம்…
தனிமையில் உருகும் அனிச்சம்
கனவு தான் இதுவும்
கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
தினம் வருதே அச்சம்

எனும் பாடல் வரிகளை தியாவின் விரல் அசைவில் வீணையின் தந்திகளில் இருந்து இசையாய் வெளிப்பட அறைக்குள் நுழைந்த கவி ஸ்வரங்களில் லயித்து அப்படியே கதிரையில் கண்மூடி சாய்ந்துக்கொண்டாள்…. சமுத்திரத்திற்க்கு நிகராய் ஆர்பரிக்கும் மனதிற்கு தென்றலாய் சாமரம் வீசியது … பாடல் முடிந்ததும் கண்திறந்த தியா எதிரில் இருந்த கவியின் அமைதியான முகத்தை கண்டதும் “என்ன கவி வந்த சுவடே இல்லாம அப்படியே உட்கார்ந்திட்ட” என்றதும் தன்னிலை பெற்றவள் “மனசு ரொம்ப அமைதியா ஆகிடுச்சி தியா… ஏதோ மனசு போட்டு பிசையுற மாதிரி இருந்துச்சி ஆனா இப்போ கொஞ்சம் தெளிவா இருக்கு” என்று கூற

“ம்…. ஆமா கவி, ஆழமான வரிகள் பாறையா இறுகிய இதயத்தை கூட லேசாக்கிடும்”. என்றவள் ‘ஆனா சித்து பாறையும் இல்ல அவனுக்கு என் மனசு புரியவும் இல்ல ‘ சித்துவின் நினைவில் மனதினில் கூறிக்கொண்டவள் அப்படியே நின்றிருந்தாள். “தியா… ஏய் தியா…” என்று கவி அவளின் தோளை தொட்டு உலுக்கியதும் தான் நிகழ் உலகத்திற்க்கு வந்தாள்

“ஹங்… என்ன கவி “

“தியா…. நீ ஏன் அடிக்கடி பிரீஸ் ஆகிடுற” என்று கேட்க

” என்ன சொல்ற கவி நான் பிரிஸ் ஆகிடுறேனா என்று அவளையே எதிர் கேள்வி கேட்டவள் நான் எப்பவும் போலதான் இருக்கேன்” என்று அவளை சமாளித்து “சரி என்னை கேட்கறது இருக்கட்டும் இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு கல்யாணத்துக்கு நீ ஏதாவது ஐடியா யோசிச்சி வைச்சி இருக்கியா?? என்ன செய்ய போற??” என்றவள் “ஸ்..” என்று நாக்கை கடித்து “சாரி என்ன செய்ய போறோம் கவி?”… எனக்கு ஒரு உருப்படியான ஐடியாவும் கிடைக்கல உனக்கு ஏதாவது தோனுச்சா?” என்றாள்

அதை கேட்டதும் தன் இயல்பில் இருந்து மாறிய கவி ஒரு வெற்று பார்வையுடன் “இவ்வளவு ஏற்பாடு பண்ணிட்டாங்க தியா”….

அவளையே பார்த்திருந்த தியா “ம்…. இவ்வளவு ஏற்பாடு பண்ணிட்டாங்கதான் அதுக்கு என்ன செய்ய முடியும் கவி”

மிகுந்த தயக்கத்திற்க்கு பிறகு “இந்த கல்யாணத்தை பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்துட்டேன் தியா…’ என்று ஒரு வழியாக கூறி முடித்தாள் கவி

கவி கூறியதில் அதிர்ச்சி ஆனவள் “என்ன சொல்ற கவி நிஜமாவா” என்றாள் ஆச்சர்ய குரலில்.

” உண்மையாதான் சொல்றேன் தியா… நல்லா யோசிச்சிதான் முடிவு எடுத்திருக்கேன்… ஆரம்பத்துல இருந்து இந்த கல்யாணத்தில எனக்கு துளியும் விருப்பம் இல்ல அதேபோலதான் இப்பவும் இருக்கு… இருந்தாலும் நம்ம அப்பாவுக்காக இதை ஏத்துக்கலாம்ன்னு இருக்கேன்… எவ்வளவு சந்தோஷமா ஒவ்வொரு வேலையும் செய்யறாரு என்னால அவருக்கு மன கஷ்டமோ… இல்லை பொருள் நஷ்டமோ… வரக்கூடாது… அதுல நான் உறுதியா இருக்கேன்”.

“கவி உன் ஆசை கனவு எல்லாத்தையும் இதுல போட்டு புதைச்சிடாதே உனக்கு பிடிக்கலான நீ அப்பாகிட்ட தைரியமா சொல்லு… உன்னை புரிஞ்சிக்குவாரு அவர சாட்டிஸ்ஃபைட் பண்ண உன்னோட வாழ்க்கைய சாக்ரிஃபைஸ் பண்ணிக்காத… இது உடனே முடிஞ்சி போற விஷயம் கிடையாது அவரோடதான் நீ வாழ்க்கை முழுசும் இருக்கபோற எங்களுக்காக பாக்காத உன் மனசு சொல்றபடி கேளு” என்று தமைக்கைகாக பேச

“இது அவருக்காக மட்டும் இல்ல எனக்கவும் தான்…. இவர வேண்டாமுன்னு சொன்னா இவர போல வேற ஒரு பையன நிச்சயம் கொண்டு வந்து நிறுத்துவாங்க… இப்போதைக்கு என் கல்யாணத்தை நடத்திடனுமுன்னு அப்பா அம்மா நினைக்கிறாங்க அது நடக்கறபடியே நடக்கட்டும். அதான் அடிக்கடி சொல்லுவியே மாப்பளகிட்ட பேசு பேசுன்னு இதை பத்தியும் பேசிட்டு இந்த லைப்ல செட்டிலாக எனக்கு கொஞ்சம் டைமும் கேட்கபோறேன் தியா”

“கவி நான் வேனும்னா அப்பா அம்மா கிட்ட பேசவா”

“இல்ல தியா வேண்டாம்… இனி எதுவும் மாறபோறது இல்ல விடு” என்று தியாவை சமாதனபடுத்த கூறிவிட

“நீ இதுக்கு மனபூர்வமா சம்மதம் சொல்றியா கவி?… உன்னால இந்த லைஃப்ப ஏத்துக்கமுடியுமா?”

“ம் முயற்சி பண்ணாறேன் கவி எதுவுமே எடுத்தவுடனே மனசுக்கு பிடித்தம் இருக்கனுமுன்னு அவசியம் இல்லையே போக போக பிடிக்க ஆரம்பிச்சிடும் என்று தங்கையின் கை பற்றி அழுத்தம் கொடுக்க

கவி உன் மனசுபடியே எல்லாம் நல்ல விதமாதான் நடக்கும் கண்டிப்பா உன் லைஃப்ல ஏதாவது ஓரு மேஜிக் நடந்து உனக்கு சந்தோஷத்த கொடுக்கும்” என்று தமக்கையின் மனசோர்வு நீங்க பேசினாள் தியா.

தியாவின் கூற்றிற்கு சின்ன சிரிப்பை உதிர்த்தவளை தன்னுடன் இயல்பான பேச்சிற்க்கு இணைத்துக்கொள்ள “நீ எப்போ இருந்து காலேஜ் லீவ் சொல்ல போற கவி” என்றாள் தியா

“இன்னும் கல்யாணத்துக்கு ஒரு வாரம் தான் இருக்கு. இன்னைக்கு பிரண்ட்ஸ்க்கு இனிவிடேஷன் கொடுத்துட்டு நாளைல இருந்து லீவ் சொல்ல போறேன். நீ ரெண்டு நாள் முன்னாடி லீவ் சொல்லு போதும்” என்றவள் தன் கூட்டுக்குள்ளே ஒடுங்கிக்கொள்ள

“ம் சரி…. நீ கோவப்படலன்னா நான் ஒன்னு கேக்கட்டுமா கவி”

“சரி நான் கோவப்படல நீ என்ன கேக்கபோறியோ கேளு தியா… எனக்கு தெரிஞ்ச வரை நான் சொல்றேன்”

“கவி உனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா?”

ஹா… ஹா…. என்று குலுங்கி சிரித்தவள்…. நீ வேற நான் ஒரு உண்மைய சொல்லவா?? எனக்கு அவர் முகம் கூட நியாபகத்துக்கு வரல… ஆரம்பத்துல இருந்தே இந்த பொண்ணு பாக்குறது மாப்பிள்ளை அது இதுன்னு இன்டிரஸ்ட் காட்டமா இருந்தேனா அவர் முகம் என் மனசுல பதியவே இல்லை புடவை கடையில கூட பார்த்தேன் ஆனா என்னமோ மனசுக்கும் மூளைக்கும் சட்டுன்னு அவர் முகம் நியாபகம் வரமாட்டது இனிதான் போட்டோவ பாத்து பதிய வைச்சிக்கனும் நானும் ஏதாவது ததிகினதோம் போட்டு அவர ஒட வைக்கனுமுன்னு பார்த்தேன் என் நேரம் அங்கயே மாட்டிக்க போறேன்” என்று பெருமூச்சுடன் உறைத்தவள் வாட்ரோபில் இருந்து அந்த புகைபடத்தை எடுத்து பார்த்தாள்.

‘பரவாயில்லை வேனான்னு சொல்ல எந்த குறையும் இல்லை பார்பதற்க்கு லட்சணமாகத்தான் இருக்கார்’. என்று நினைத்தவள் இதமான குளிர் பரவ பால்கனியில் நின்றுகொண்டு இருட்டினை பார்த்திருந்தாள்…

………………………………………………………………

ராஜாராமனின் இல்லம்

தோட்டத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து காலை தினசரியை புரட்டியபடி இன்றைய நாட்டு நடப்புகளை அறிந்த வண்ணம் இருந்தார் ராஜாராமன்

கையில் காபியுடன் வந்த நாரயணி “காபி எடுத்துக்குங்க” என்று கூறிக்கொண்டே கணவருடன் தானும் அமர்ந்துக்கொண்டார்.

சிறிய தலையசைப்புடன் காபியை எடுத்துக்கொண்ட ராஜராம் மறுபடி தினசரியில் மூழ்க

அவரையும் நாளிதழையும் மாறி மாறி பார்த்தவர் “என்னதான் இருக்கோ அதுல அப்படி… தினசரி கொலை, கொள்ளை, கடத்தல், அது, இதுன்னுதான் இருக்கு… ஒரு நல்ல செய்தி உண்டா?? பக்கத்துல ஒருத்தி கல்லட்டம் உட்கார்ந்து நம்மளையே பாத்துட்டு இருக்காளே காலைல இருந்து நைட்டு வர வெட்டுவெட்டுனு தனியா இருக்காளேன்னு அக்கறை யாருக்காவது இருக்கா?…” என்று தன் போக்கில் புலம்பியவர் கணவருக்கும் சேர்த்து அர்ச்சனைகளை வாரி வழங்க

மனைவியை புரியாத பார்வை பார்த்த ராஜாராமன் பேப்பர் படிக்கறது ஒரு குத்தமாடி என்றவர் மறுபடி பேப்பரில் மூழ்க

மேலும் எரிச்சலுற்ற நாராயணி “பேப்பர் படிக்கறத குத்தமுன்னு சொல்லலைங்க எத்தனை முறை படிப்பிங்க… காலைல இருந்து இது இரண்டாம் முறை ஒரு எழுத்து கூட விடாமா படிக்க என்ன பரிச்சையா நடத்த போறாங்க??…” என்று எள்ளலாய் கேட்டார் நாரயணி

சலித்தபடி பேப்பரை மடித்து டீபாயின் மீது வைத்தவர் “இப்போ உனக்கு என்னதான் வேணும் சொல்லு”.என்று அவர் புறம் நன்றாக திரும்பி அமர்ந்து கொண்டார் ராஜாராம்.

என்ன வேணுமா நாலு சுவத்த பாத்துக்கிட்டு வீட்டுல உட்காந்து இருக்கேனே உங்களுக்கும் ஒன்னும் தோனாது உங்க புள்ளைங்களுக்கும் ஒன்னும் தோனாது”

“ஒரு நிமிஷம் நிறுத்து நீ ஏதோ சொல்ல வர ஆனா எனக்கு ஒன்னும் புரியல…. தலைய சுத்தி காத தொடுறத விட்டுட்டு நேரடியா விஷயத்துக்கு வரியா?” என்று அவர் கூறவும்

மிகவும் சுறுசுறுப்பாக அவர் புறம் திரும்பி அமர்ந்தவர் சுவரஸ்யமாக கூற ஆரம்பித்தார் “அதுங்க உங்க பிரெண்ட்” என்று கூறியதும் ராஜாராம் யோசிக்க ஆரம்பிக்க “அதாங்க நம்ம கல்யாணநாளுக்கு கூட வீட்டுக்கு வந்தாங்களே” அவரும் தன் நண்பனை தெரிந்துகொண்டும் அதை ஏன் இப்போது கூறவேண்டும் என்ற சிந்தனையுடன் மனைவியை பார்த்திருக்க கணவருக்கு இன்னும் நியாபகம் வரவில்லை என்று மறுபடி அவருடைய மற்ற தகவலை கூற ஆரம்பித்தார்.” அதாங்க அவர் பேருகூட மாணிக்கம் அவர் பொண்ணுக்கு கூட கல்யாணமாம் இனிவிடேஷன் வைச்சாங்களே” என்று விளக்கமாக கூறவும்

ஆமா ஆதி அது எனக்கு தெரியுது அதுக்கென்ன…? இன்விடேஷன் வைச்சான் இன்னும் ரெண்டு நாள்ள கல்யாணம் நிச்சயம் நாம ரெண்டு பேரும் போயிட்டு வந்திடனும் என்று மறுமுறை மனைவியிடம் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று உறுதிபடுத்தி கூற

ஊர்ல இருக்க எல்லாருக்கும் கல்யாணம் காட்சின்னு ஆகி புள்ளையும் குட்டியுமா இருக்காங்க ஆனா நான் பெத்த புள்ளைங்களுக்கு ஒரு நல்லத பண்ணி கண்ணால பாக்கமுடியல என்று ஆங்கலாய்புடன் பேசி முடித்த மனைவியை மலைப்புடன் பார்த்தவர். அதுக்கும் இதுக்கும் என்னடி சம்மந்தம் என்று புரியாமல் கேட்க
ஒரு முறைப்புடன் பார்த்த நாராயணி என்ன சம்மந்தமா ஒரு நல்ல சம்மந்தமா பார்த்து என் புள்ளைங்களுக்கு கல்யாணம் நடத்தி வைங்கன்னு சொல்றேன் என்று அதிரடி தாக்குதலில் இறங்கினார் .

மனைவியை பரிதாபத்துடன் பார்த்த ராஜாராமன் எனக்கு என்னமோ அந்த எண்ணமே இல்லாதமாதிரி பேசுறாளே என்று நினைத்தவர் பெரியவனை எவ்வளவு சொல்லியும் இம்மியும் மசிய மாட்டேன்றான் பெரியவனுக்கு பண்ணாம சின்னவனுக்கு பாக்க முடியாது ஆதி என்று பொறுமையாக மனைவிக்கு எடுத்துரைக்க

அவர் கூறியதும் ம்க்கூம் இந்த வியாக்கியனம் எல்லாம் பேச நல்லதான் இருக்கு ஆனா இதெல்லாம் இங்க வேணாம்…. நீங்க பொண்ண பாருங்க என் பெரிய புள்ளை கல்யாணம் பண்ணிப்பான் …. அதனால இப்போ நீங்க என்ன செய்யரிங்கனா என்று ஆரம்பித்தார்.

ம் அதனால என்ன செய்யனும் அதையும் நீங்களே சொல்லுங்க மகாராணி என்று அவர் தன் சிம்ம குரலில் மனைவியை கேளியுடன கேட்க

அவர் குரலில் ஒலிர்ந்த தோரணையில் அவரை பார்த்த நாராயணி இந்த கிண்டலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல கல்யாணம் அதுவே நடந்திடாது நாமதான் முயற்சி எடுக்கனும் இப்படி நடக்குறது நடக்கட்டும்ன்னு இருக்காதிங்க நம்ம பையனுக்கு இந்த கல்யாணத்துலயே ஒரு பொண்ண பாத்து பேசி முடிச்சிட்டுதான் வீடு திரும்பனும் என்றார் கறாராக .

அதை கேட்டு அதிர்ந்தவர் ஏய் என்னடி கடை தெருவுல கத்தரிக்காய வாங்க சொல்ற மாதிரி பொண்ண இந்த கல்யாணத்துல பாத்து பேசி முடிச்சிடுங்கன்னு சொல்ற என்றார் படபடவென்று

“நான் உங்கள கத்திரிக்காய வாங்க சொல்லல என் புள்ளைக்கு கல்யாணத்துக்கு பொண்ண பாக்க சொன்னேன் … என்றவர் அவங்களுக்கும் நாலு சொந்தாகரங்களோ இல்ல சிநேகிதர்களோ இருப்பாங்க இல்ல அவங்க பொண்ணுங்கள பாருங்க கால காலத்துல அது அது நடக்கவேண்டிய நேரத்துல நடந்திடனும் இவனுங்க இப்படித்தான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருப்பானுங்க அதுக்காக அப்படியே விட்டுடவா முடியும்… நல்லது கெட்டது நாம தான் எடுத்து சொல்லனும் செய்யனும்….” என்றவர் “என்னங்க நான் சொன்னதுலாம் நியாபகம் இருக்குல நமக்கு தெரிஞ்சவங்க கிட்டயும் சொல்லி வைங்க”
என்றவர் அத்துடன் பேச்சை முடித்துக்கொண்டு காபி கப்புகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தார்.

மனைவி சொன்னதையே நினைத்திருந்தவர் “அவ சொல்றதும் உண்மைதானே நாம முயற்சி எடுத்தா தானே அவனும் வழிக்கு வருவான். இந்த வருஷம் எப்படியும் இந்த வீட்டுல ஒரு கல்யாணதை நடத்திடனும்” என்று நினைத்துக் கொண்டார்.

………………………………………………………………
” கவி, கவி அது தோசை அதையேன் இந்த சுரண்டு சுரண்டி கொலை பண்ற”

“பச் … நான் என்ன பண்ணட்டும் அது கல்ல விட்டு வருவேனாங்குது “

“நீ தள்ளு “

“எதுக்கு”

“நீ கொஞ்சம் தள்ளிபோயேன்” என்ற தியா தோசை தவாவை சுத்தபடுத்தி மறுபடி தோசை ஊற்ற

அதை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்த கவியின் முன்னே தோசை கரண்டியை ஆட்டியபடி பாத்தியா என்று தோசையை லாவகமாக அடுத்த பக்கம் திருப்பி போட்டவளை வியப்புடன் பார்த்த கவி “எப்படி தியா நீ சுட்டா மட்டும் தோசை வட்டமா வருது” என்று ஆர்வமுடன் கேட்டாள்.

“அது அதுக்கு திறமை வேனும்” என்றபடி அவள் தோசை கல்லில் இருந்து பிய்த்து எடுத்த இரண்டு தோசைகளை பார்த்த படி “பாவம் டீ மாம்ஸ் தோசைக்கே இந்த அலப்பறனா வாழ்நாள் முழுக்க நீ போடுறத சாப்பிட போறவரோட நிலைய நினைச்சி பாரு” என்று அவளை கிண்டல் செய்ய கவியுமே அந்த உண்மையில் சிரித்துவிட்டு தங்கையை செல்லமாக முறைக்க “எதுக்கும் இதையும் சேர்த்து மாம்ஸ்கிட்ட பேசிடு” என்று கேளியில் இறங்கிய சிறியவள்.. “நீ இன்னும் வளரனும் கவி” என்று அவளை வெறுபேற்றியபடி இருவருக்குமான தோசைகளை ஊத்தி எடுத்துக்கொண்டு டிவியின் முன்பாக அமர்ந்து கொண்டார்கள்.

கவியின் பெற்றோர் வெளியூருக்கு சென்று பத்திரிக்கை வைத்துக்கொண்டு இருப்பதால் வீட்டிற்க்கு வர தாமதம் ஆக பசியின் கொடுமையால் இன்று இவர்களே சமயலறையில் புகுந்து விஷ பரிச்சைக்கு தயாரகினார்.

இப்பவே மணி 9 இன்னும் வரலை எப்போதான் வருவாங்களோ என்றபடி போனை எடுத்து தந்தைக்கு அழைத்த கவி அப்பா எத்தனை மணிக்கு வருவிங்க லேட் ஆகிட்டு இருக்கு என்று கூற

“வழியில டிராபிக்டா இன்னும் 1 ஹவர்ல வந்திடுவோம்” என்றார் மாணிக்கம்

“ம் சரிப்பா” என்றவள் பெற்றோர்களையும் விசாரித்து பேசியை வைத்தாள். இருவரும் சோபாவில் அமர்ந்து டிவியில் பாடல்களை ரசித்தபடி சாப்பிட ஆரம்பித்தனர்.

திடிரென மின்சாரம் தடைபட்டு வீடு முழுவதும் இருள் சூழ்ந்துவிட சிறிது நேரம் கழித்து மின்சாரம் வர மாடியில் இருக்கும் அறையில் இருந்து ஏதோ பொருள் விழும் சத்தம் கேட்டு இருவருமே அந்த நேரத்தில் அதிர்ந்து விட்டனர்.

தியாவின் முகம் பயம் சூழ கவி சிறிது தைரியத்துடன் இருந்தாள். “கவி என்ன விழுந்து இருக்கும் மேல”

“என்னன்னு தெரியலையே தியா வா போய் பாக்கலாம்” என்று தியாவை அழைக்க

“இல்ல இல்ல நான வரல எனக்கு பயமா இருக்கு” என்று தியா கவியையும் போக விடாமல் தடுத்தாள்.

“நம்ம வீட்டு ல என்ன பயம் தைரியமா வா ஏதாவது பூனை பால்கனி பக்கமா வந்து இருக்கும் அம்மாக்கு பூனைன்னா அலர்ஜி வந்தா திட்ட போறாங்க வா போலாம்….”

“வேனா கவி சொல்றத கேளு நா வரல நீயும் போகாத” என்று அவளின் கை பிடித்து தியா தடுக்க

“என்ன தியா சின்ன குழந்தை போல பயப்புடுற” என்று அவளின் கன்னத்தை தட்டியவள் “சரி ஒன்னு செய் நீ இங்கயே இரு நான் போய் பாத்துட்டு விரட்டிட்டு வரேன் ” என்று மாடிக்கு செல்ல

“உன்னை….. போகாதன்னு சொன்னாகூட ஏன் இப்படி அடம்பிடிக்கிரயோ வா நானும் வரேன்” என்று சலித்துக்கொண்டு தியா செல்ல இருவரும் மாடிபடிகளை ஏறினர்.

ஏறும்போது எவ்வித மாறுபாடுகளையும் உணராதவர்கள் திடிரென யாரோ அறையில் இருந்து மறுபுறம் போகும் நிழல் தெரிய தியா பயந்து கத்திவிட கவி அவளின் வாயை பொத்தி உஷ் என்று அமைதிபடுத்தி அவர்களின் கவராத வண்ணம் நிதானபடுத்தினாள்.

“கவி அங்க யாரோ ஒடுனாங்க நீ பாத்தியா”

கவியும் அதை பார்த்துவிட்டாள் ஆனால் எங்கே அவள்பார்த்ததை கூறினால் தியா இன்னும் பயந்து விட போகிறாள் என்ற எண்ணத்தில் ” இல்லையே எனக்கு எதுவும் தெரியல உனக்கு எதை பார்த்தாலும் பயம்தான் கொஞ்சம் தைரியமா இருக்க பழகிக்க ” என்று கூறி அவளை சமாதானம் செய்து கொண்டிருக்க கீழே தந்தையின் அலுவலக அறையில் இருந்து அப்போது சத்தம் வர இப்போது கவிக்குமே பயம் சூழ்ந்து விட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தியாவின் கையை இருக பற்றிக்கொண்ட கவியின் முகத்தில் இருந்த வியர்வை முத்துக்களை துடைத்துக் கொண்டே “பயப்படதே தியா ஒன்னும் இல்ல அப்பா இப்போ வந்துடுவார் இரு” என்று தந்தையை அழைத்து கூற நினைத்தவள் அடுத்த கணத்தில் தன் எண்ணத்தை மாற்றி அவர்களை கலவரபடுத்த வேண்டாம் என்று பக்கத்துவிட்டு எண்ணுக்கு அழைத்து விவரம் கூற அவர்களும் போலிஸை அழைத்துக்கொண்டு வருவதாக கூறி தைரியபடுத்த தைரியத்துடன் முன்னேறிய கால்கள் மாடிபடிகளை விட்டு கிழே இறங்கியது… மெல்ல மெல்ல நடந்து வந்து தந்தையின் அறையில் எட்டி பார்த்தவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி எல்லா புத்தகங்களும் காகிதங்களும் முக்கிய பைல்களும் குப்பையாய் தரையில் கலைந்து கிடக்க அந்த உருவம் வந்த வழி தெரியாமல் எந்த வழியாக சென்றது என்று இருவருக்குமே தெரியவில்லை

பெண்கள் இருவரின் சிந்தனையையும் எண்ணத்தையும் திசை திருப்பி லாவகமாக வீட்டிற்க்குள் புகுந்து சென்றவர்களின் திட்டம் என்னவென்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்தனர் காவலர்கள். வந்து சென்றவர்களின் எண்ணம் தெரிந்தும் தெரியதது மாதிரி காட்டிக்கொண்டார் மாணிக்கம்.

“சார் என்ன மோடிவ்வா இருக்குன்னு நினைக்கிரிங்க வந்தவங்க நகை பணம் அப்படின்னு எதுவும் எடுக்காம உங்க அலுவலக அறையை மட்டும் இப்படி சூரையாடிட்டு போயிருக்காங்க “

“தெரியல இன்ஸ்பெக்டர் எதுக்கு இப்படி பண்ணாங்கன்னும் புரியல ” என்றபடி வெகு சாதரணமாய் அமர்ந்திருந்தார் மாணிக்கம்

“ஏதோ உங்ககிட்ட இருந்து தேடி இருக்காங்க உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா இல்ல எதிரி யாரவது இருக்காங்களா?” என்று மாணிக்கத்தை பார்த்து கேட்க

“என்ன போல வக்கில்களுக்கு யார் எதிரியா இருக்க முடியும் சார் கேஸ்ல எதிரிய தோற்கடிச்சா எனக்கு அவன் எதிரி தானே உங்களுக்கு எப்படி நிரந்தரமான் நண்பனும் எதிரியும் இல்லையோ அதே போலதான் சார் என்கிட்டடையும… யாரையும் சந்தேக மட முடியல இவன் தான் செய்திருப்பான்னு நினைக்க முடியல”

“நீங்க எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறிங்க ஊராறிந்த த கிரேட் கிரிமினல் லாயர் உங்களுக்கு உங்க எதிரி யாருன்னு தெரியாதுன்னு சொல்றிங்க இதை என்னை நம்ப சொல்றிங்க” என்று சிரித்தபடி இன்பெக்ட்டர் பேச

“உண்மை தான் இன்ஸ்பெக்டர் சொல்றேன் யார் வந்தா ஏன் வந்தாங்க என்ன தேடுனாங்க யார் எதிரி எதுவும் தெரியாது நீங்கதான் அதையெல்லாம் கண்டுபிடிக்கனும்” என்றபடி காவல் அதிகாரிக்கு கை குலுக்கியவர் “கல்யாணத்துல பாக்கலாம் ” என்றபடி விடை கொடுத்து அனுப்பினார். ” இன்னும் என் கைக்கு கிடைக்கவேண்டியது நிறைய இருக்கு இப்போவே எல்லாத்தையும் மண்ணாக்கலாம்னு பாக்குறையா விட மாட்டேன்” என்று மனதிற்குள் கூறிக்கொண்டார் மாணிக்கம் .

………………………………………………………………

தன் அறையில் பெட்டியை அடிக்கியபடி இருந்த மஞ்சுளா “என்னங்க இந்த பெட்டில உங்க துணியெல்லாம் எடுத்து வெச்சிருக்கேன் நகையெல்லாம் இந்த பெட்டியில இருக்கு….. அப்புறம் சீர் சாமன் எல்லாம் நேரா மாப்பிள வீட்டுல இறக்கிட சொல்லுங்க….. ஹங் அப்புறம் வெளியூர்ல இருந்து வர சொந்தாக்காரங்க உங்க பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ரூம் புக் பண்ணி இருக்கிங்கள்ல… என்றவர் “என்னங்க என்னங்க ஒன்னுமே சொல்லமா அமைதியா இருக்கிங்க ” என்று கூறியபடி கணவர் அமர்ந்திருந்த பக்கம் திரும்பினார் யோசனையுடன் அமர்ந்திருந்த கணவரை பார்த்துதும் அவரிடம் சென்று அமர்ந்தவர்.

அவரின் தோளினை தொட்டு “என்னங்க” என்று அவரை அழைத்தவர் ” ஏங்க ஒரு மாதிரி இருக்கிங்க உடம்புக்கு ஏதாவது சரியில்லையா?” என்று அவரின் நெற்றியை தொட்டு பார்க்க காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படாததால் அமைதியாய் அமர்ந்திருந்த கணவரையே பார்த்திருந்தார்.

மனைவின் பார்வையில் அவர்புறம் திரும்பியவர் “எனக்கு ஒன்னுமில்ல மஞ்சு மனசுதான் என்னவோ போல இருக்கு….”

“ஏங்க என்னச்சிங்க” ஏன்று அனுசுரனையாய் விசாரிக்க

“இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் பொண்ணு நம்ம கூட இருக்க போறது இன்னும் ரெண்டு நாளுதான்னு நினைக்குப் போது மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்கு என் கையிலேயே வளர்ந்தவ அவள விட்டு பிரியனும்னு நினைச்சாதான் மனசு பாரமா இருக்கு எனக்கு எந்த வேலையும் ஓடல” என்று கவலைதோய்ந்த குரலில் கூற…

அவரது பக்கம் அமர்ந்த மஞ்சுளா அவரின் முகம் திருப்பி ” உங்களுக்கு மட்டுதான் அப்படி இருக்குன்னு நினைச்சிங்களா? எனக்கும் தாங்க அப்படி இருக்கு என்ன நான் வெளிய காமிச்சிக்கல அவ்வவளவுதான்….” என்று சிந்திய கண்ணீரை முந்தானையால் துடைத்தவர்… “அதுக்குன்னு நம்ம பொண்ண நம்மகூடையே வைச்சிருக்க முடியுமா சொல்லுங்க…
கால காலத்துல பொண்ண கட்டிகுடுத்துதானே ஆகனும் பொம்பள பொண்ண எத்தனை நாள் வீட்டுல வெச்சிருக்க முடியும்… புருஷன் குழந்தை குடும்பன்னு சந்தோஷமா வாழந்தா தானே நமக்கு நிறைவா இருக்கும்.
அதுக்கு போய் கலங்கலாமா அவ நினைச்சா வந்து பாத்துட்டு போறா… இல்ல நாம அவள பாக்க போகாமயா இருக்க போறோம்?” என்று கணவரை சமாதானம் செய்வதின் பேரில் தன் மனதையும் சமாதானம் செய்துக்கொண்டார் மஞ்சுளா.

மனைவியின் சமாதன பேச்சு மனசை திடம்கொள்ள வைக்க “மஞ்சு கவியதான் தூரமா கட்டி கொடுக்குறோம் ஆனா தியா வ இந்த ஊர்லயேதான் கட்டி தரனும்” என்று உறுதியோடு கூறியவர் “என்னால என் பொண்ணுங்க ரெண்டு பேரையும் பிரிஞ்சி இருக்க முடியாது அட்லீஸ்ட் தியாவயாவது என் கண் முன்னாடி வைச்சிக்கிறேன்” என்று உணர்ச்சிவசத்துடன் கூறினார் மாணிக்கம்.

கணவரின் உணர்ச்சி மிகுதியான வார்ததைகளை கேட்டவர் “ம் அந்த மாதிரி மாப்பிள்ளை வந்தா இந்த ஊர்லையே கொடுத்துடலாங்க கவலைபடாதிங்க” என்று கூறியவர் மகள்களுக்கு வேண்டியவற்றை எடுத்து வைக்க சென்றார்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Madhumathi Bharath

Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

Share
Published by
Madhumathi Bharath

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago