மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்..
“உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி” என்று.
அப்போது அந்த மகன் சொன்னான் “என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தாள்.
ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவளாய் இல்லை”
இதைகேட்ட தகப்பன் கேட்டான்,
“அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னாள்?”
அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் …..
“நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள், எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று. ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி, நிலாவைக்காட்டி கதை சொல்லி அவள் தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய பாசம் இருக்கும்..
ஆனால்..
“இப்போதைய அம்மா, நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் “உனக்கு சோறு தரமாட்டேன் என்று.”..
இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது அம்மா சொன்ன வார்தையை நிறைவேற்றி விட்டாள்.”.!!!
#அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை…
இந்த உலகில் என் கண்களால் நான் கண்ட கடவுள் என் அம்மா மட்டுமே….
என் உயிர் என் அம்மாதான்.!!!!!
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…