தினமும் ஒரு குட்டிக்கதை
ஒரு விவசாயி குதிரை ஒன்றை வளர்த்து வந்தார். ஒருநாள் அந்தக் குதிரை ஓடிவிட்டது. பக்கத்து வீட்டினர் அவரிடம் ” உங்கள் துரதிர்ஷ்டம் குதிரை ஓடிவிட்டது” என்றனர். அதற்கு அவர்” இருக்கலாம்” என்றார்.
மறுநாள் அந்தக் குதிரை கூடவே இரண்டு குதிரைகளை அழைத்துக் கொண்டு அவர் வீட்டுக்கு வந்தது. இப்போது பக்கத்து வீட்டினர்” உங்களுக்கு அதிர்ஷ்டம் இப்போது மூன்று குதிரைகள் வந்துவிட்டது” என்றனர். அவரும் ” இருக்கலாம்” என்றார்.
சில நாட்கள் சென்றபின் அவரின் மகன் அந்த குதிரையின் மேல் சவாரி செய்ய முற்படும்போது குதிரை அவனைக் கீழே தள்ளிவிட்டது.இப்போதும் பக்கத்து வீட்டினர் அவரிடம் ” உங்களது மகன் கீழே விழுந்து கால் உடைந்துவிட்டது உங்கள் துரதிஷ்டம் ” என்றனர். அவரும் ” இருக்கலாம்” என்றார்.
அந்த ஊருக்கு இராணுவ வீரர்கள் ஆட்களை வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்க இளைஞர்களை அழைத்துக் கொண்டு போனார்கள்.
அப்போது அந்த முதியவரின் மகனை கால் உடைந்து விட்டதால் விட்டுவிட்டனர். இப்போதும் பக்கத்து வீட்டினர்” உங்களுக்கு அதிர்ஷ்டம் உங்கள் மகனை விட்டுவிட்டனர்” என்றனர். அப்போதும் அவர்” இருக்கலாம்” என்றார்.
நண்பர்களே!!!
அவர் இதைச் சொல்லுகிறார்
இவர் இதைச் சொல்லுகிறார் என்று எதையும் எடுத்துக் கொள்ளாமல் நடப்பவை யாவும் நன்மைக்கே என்று நடைபோட்டால் நிம்மதி, மகிழ்ச்சி எப்போதும் உங்களை நாடி வரும்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…