சாரி பிரிண்ட்ஸ் ரொம்ப லேட் ஆய்டுச்சு சாரி ஸ்பெல்லிங் mistake இருந்தா adjust பண்ணிகோங்க

என் சுவாசமே – 3

அகத்தியா அந்த குழந்தையின் அழுகை தன் செவியில் இருந்து தேய்ந்து மறையும் வரை திரும்பினாளில்லை. ஏனோ அதன் பிஞ்சு முகம் அவளது கவலைகளை மறக்க போதுமானதாக இருந்தது. இப்போது அதனை விட்டு பிரியும் போது ஏனோ தன் குழந்தையையே விட்டு செல்வது போலவே ஒரு பிரம்மை.
தனது துன்பம் மறக்க அத்தளிரிடம் கவனம் செலுத்தினாள். அதிலே தன் துன்பங்கள் அனைத்தும் மறந்து அதனிடமே லயித்துப்போனாள். இப்போது அதனை விட்டு பிரியும் போது ஏனோ மனதுக்கு மிகவும் பாரமாக உணர்ந்தாள்.

அங்கிருந்த ஒப்பனை அறையில் தன கண்ணில் வழிந்த கண்ணீரை முகம் கழுவி சுத்தப் படுத்திக்கொண்டு விலை நோக்கி சென்றாள். வாயிலில் எங்கேயாவது தன் குடும்பம் தென்படுகிறதா என கண்களை நாலா புறமும் சுழலவிட்டுக்கொண்டே தேடினாள்.

அங்கே அவள் தந்தையும், தம்பியும் அவளுக்காக காத்துக்கொண்டு இருந்தனர். அவளது தந்தை அவளை கண்டவுடன் ஒரு மெல்லிய நகையை சிந்தினார். அவர் முகமும், கண்களும் சோர்வை பிரதிபலித்தன. ஏனோ இது எல்லாம் தன்னால் தானோ என்றே அவளுக்கு தோன்றியது.

ஆனால் அவர் அவ்வாறு எண்ணவில்லை. தனது மகளை மீண்டும் காண்போமா என தவித்து கொண்டு இருந்தவர் அல்லவா? அவளை மறுபடியும் பார்த்ததே போதும் அதுவே தனக்கு சந்தோசம் என அவர் நினைத்து கொண்டு இருக்க அவள் இவ்வாறு இப்படி நினைத்து கொண்டு இருப்பது தெரிந்தால் பாவம் அவர் மனது என்ன பாடுபடும்.
காலம் மட்டும் தாங்கள் சந்தோசமாக இருந்த காலத்திற்கே சென்று அங்கேயே நகராமல் இருந்து விடாதா? என்றே ஏங்கினாள். ஏனோ மனம் முழுவதும் ஒரு குற்றவுணர்ச்சி வியாபித்தது. என்ன முயன்றும் அது அவளை விட்டு நீங்கிய பாடாக இல்லை.

அதற்குள் அவள் தம்பி அவளது தந்தையை பின்பற்றி அவளை பார்த்து புன்னகைத்தான். தம்பியை கண்டதும் தனது முகத்திற்கு முகமூடி அணிந்துக்கொண்டு அவளும் புன்னகைத்தாள். அவளது கண்ணுக்கு எட்டாத புன்னகை அவளது தந்தையை வருத்தமுற செய்தது.

என்ன இருந்தாலும் பெண்ணை பெற்றவர் அல்லவா?
ஏனோ மனம் குழம்பிய குட்டையை போலே இருந்தது அவளுக்கு . இல்லை எதுவுமே இல்லை. இனி என்ன செய்வது என்றே புரியவில்லை. மனம் மட்டும் உணர்வற்று இருந்தது போல இருந்தது கண்ணை திறந்துக் கொண்டு ஏதோ கனவில் சஞ்சரிப்பவள் போன்றே இருந்தது. எதையும் நினையாதே மனமே எதையும் நினையாதே! என மனதிற்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டு இருந்தாள். அதில் சிறு வெற்றியும் பெற்றாள்.

மனதை அடக்க அவள் என்ன ரிஷியா? அல்லது முனியோ? இரண்டுமே அல்லவே! சாதாரண மானுடப் பெண் தானே!

எதையெதையோ யோசித்துக் கொண்டே வந்தவள், அவளது அப்பா “வீடு வந்துடுச்சு இறங்குமா” என்னும் அவரது
குரலிலும் தன் சிந்தனை கலைந்தாள் இல்லை.

அவளது அபராஜித் “அக்கா!அக்கா!” என இருமுறை அழைத்து தோளை தொட்டு உலுக்க, “ஆங்ங்” என தூக்க கலக்கத்தில் இருந்து விழிப்பது போல இமை தட்டி தன்னை மீட்டுக் கொண்டாள்.

இவள் முன்னே அவளது தம்பியும் தந்தையும் இறங்கி “வாம்மா “ என அழைத்தார். ஏதோ தவறு செய்த குழந்தையை போல விழித்தாள். அவர் அழைத்ததும், தன் கல்லென கனத்த கால்களுக்கு மெல்ல உணர்வுட்டி அடியெடுத்து வைத்தாள்.

அவளது கண்கள் அந்த வீட்டை அளவெடுத்து. அவர்கள் முன்னே இருந்த வீட்டை காட்டிலும் இது சற்று சிறிதாகவும் வசதி குறைந்தது போலவும் தெரிந்தது. மனம் முழுவதும் பாரம் ஆகி போனது போன்று ஓர் உணர்வு அவளுள் எழுந்தது.

அதற்குள் வெளியே அரவம் கேட்டு வந்தார், அவள் தாய் பானுமதி. இருவரது பார்வையும் சிறிது நேரம் நேருக்கு நேர் சந்தித்து கொண்டது. பின்னர் அவள் தான் தனது பார்வையை தழைத்து கொள்ள வேண்டியதாயிற்று.

“நான் என்ன உன்னை அப்படியா வளர்த்தேன்?” என்னிடம் உனக்கேதற்க்கு அந்த பயமும் ? தயக்கமும்?” என்று அவரது பார்வை கேட்பது போன்று ஓர் உணர்வை தந்தது. “உள்ள வாமா” என்ற தந்தையின் அழைப்பில் அவள் தாயை ஏறிட அவரோ இன்னும் தன் பார்வையை இல்லை. “என்ன பானு இன்னும் என்ன அப்டியே நின்னுட்டு பார்த்துக்கிட்டே இருக்க”

பாப்பா எவளவோ வருஷம் கழிச்சு வந்திருக்க? உள்ள கூட கூப்பிடாம என்ன அப்படியே பார்த்துட்டே இருக்கிற! கூப்பிடு உள்ள” என சிறு கண்டிப்புடன் கூற அவர் தன் கணவரையும் மகளையும் ஒரு முறை கண்டவர், ஒரு பெருமூச்சை ஒன்றை வெளியிட்டு தன் வாய் திறந்து மெதுவே, ”வா” என அழைத்து விட்டு சென்றுவிட்டார்.
அதுவரை தனை அழைக்க மாட்டாரா? அழைக்காமல் போய் விடுவாரோ? என எண்ணி பயந்துக் கொண்டு இருந்தவளின் மனம் சற்றே அவளுக்கே தெரியாமல் ஆசுவாசமாக உணர்ந்தது.

கண்கள் சிறிதே கலங்க வர, தனது கண்ணை சிமிட்டி அதை உள்ளிளுத்துக் கொண்டாள். எங்கே தனது வாழ்வு தடம் மாறியது, தடம் மாறி போனது என்று அவளுக்கே தெரியவில்லை.
இதோ தன்னை பெற்று சீராட்டி வளர்த்த அவர்களுக்கு தெரியாததை விட தனக்கு என்ன தெரிந்துவிட போகிறதாம் என தன்னை தானே ஒரு நூறு ஆயிரம் முறை கேட்டுக்கொண்டாள் அகத்தியா.

தான் நிதானம் தவறி விட்டோமோ எங்கே தனது நிதானம் இழந்தோம் பெற்றவர்களை விட தனக்கு என்ன என்ன தெரிந்து விட்டது வாழ்க்கையில். எதுவும் தெரியவில்லை. என்ன அடைந்தோம் என்ன இழந்தோம் என்றே அவளுக்கு தெரியவில்லை.

எதோ கண்ணை கட்டி காட்டில் விட்டது விட்டது போலவே இருந்தது. தாய் மடி தேடும் சேயாக அவளது மனம் தவித்தது. அம்மா என அழைத்து அவர் மடியில் முகம் புதைத்து தன மன பாரம் முழுவதும் இறங்கும் வரை அழுது கரைய வேண்டும் போல அவளது மனம் பரபரத்தது.

தனது முட்டாள் தனத்தால் தான் மட்டும் கஷ்டப்படவில்லை தனது மொத்த குடும்பமுமே தன்னால் கஷ்டப்பட்டு விட்டது என் அவள் மனம் குமைந்தது. என்ன தான் வளர்ந்த பெண்ணாகவே இருந்தாளும், எத்தனை வயதானாலும் தாய் மடி தரும் சுகமும், நிம்மதியும் அலாதியன்றோ?

தன் துயரம் அனைத்தையும் இறக்கி வைக்க தாய் மடி சேர சேயாய் அவளது மனம் தவித்தது. “இந்த ரூம்ல போய் பிரெஷ் அப் ஆகிட்டு வாம்மா” என தந்தையின் குரலிற்கு சிறு தலை அசைப்பை மட்டுமே தந்தாள்.

உள்ளே போய் கதவடைத்து, கட்டிலில் சென்று தொப்பென அமர்ந்தாள். இனி என்ன செய்வது என்ற அதே கேள்வி அவளை சுற்றியது. மனமே இல்லாமல் போய் பாத்ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்தி, குளித்துவிட்டு வரும் போது தூக்கம் கண்ணை சுழற்றியது. இதனை வருடம் இல்லாத தூக்கம் ஏனோ இப்பொது வந்தது.

போய் கட்டிலில் விழுந்தது மட்டும் தான் தெரியும். அப்படி ஒரு தூக்கம் வந்தது அவளுக்கு. தனது இருப்பிடத்திற்கு வந்ததால் வந்த உறக்கமோ? வெகு நேரம் கழித்து அறையினுள் தனது கணவரின் வர்புதலின் பேரில் அங்கு வந்த பானுமதி தூங்கும் மகளை சிறிது நேரம் பார்த்திருந்தார்.

அவரது கண்களுக்கு ஐந்து வயது குழந்தை போலவே தெரிந்தாள். அவரையே “அம்மா, அம்மா” என சுற்றி வரும் அவள் மீது அவருக்கு அன்பு அதிகம்.
அகத்தியாவின் மேல் எப்போதும் ஒரு தனி பிரியமுடன், சிறு கண்டிப்பும் கொண்டு இருந்தார். தாய்க்கு தன் பிள்ளை எப்பொழுதுமே ஸ்பெஷல் தான்.

அதற்கு பானுமதியும் விதி விளக்கல்ல. அகத்தியா சிறு வயதில் இருந்தே மிகவும் குறும்புகாரியாகவே வளர்ந்தால். அவரது கணவரிடம் அவளுக்கு செல்லம் மிக அதிகம். அதனாலே அவர் மகளிடம் சிறு கண்டிப்புடனே இருந்தார்.
பெற்றோர் இருவருமே செல்லம் கொடுத்தால், மகள் இன்னும் குறும்பாக இருப்பாள் என்பதால் அவளிடம் மட்டுமே அவர் சிறிதாக கொஞ்சம் கண்டிப்பு காட்டினார்.

பிறகு யாரும் அவளை, “உன் அம்மா வளர்த்த லட்சணத்தை பார்” என்று ஒரு கூட கூறி விடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். தனது எண்ணத்தில் சுழன்று கொண்டு இருந்த அவர் அகத்தியாவிடம் லேசாக அசைவு தெரியவும் அங்கிருந்து வேகமா வெளியேறினார்.

இது எதுவும் தெரியாத அகதியாவோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். பல்ல வருடம் அவளை விட்டு எட்டி நின்ற உறக்கம் இன்று அவளின் மேல் சிறிதே சிறிது கருணை கொண்டு அவளை அரவணைத்து கொண்டது.

வெளியே வந்த பானுமதியிடம் “ என்ன நீ மட்டும் வர? பாப்பா எங்க?” என கேட்டவரிடம் “ அவ தூங்குறா” என பதிலிறுத்து விட்டு சென்றார். கிருஷ்ணனும் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டு வெளியே சென்று விட்டார்.

மூன்று மணி நேரம் கழித்தும் எந்திரிக்காமல் இருந்தாள் அகத்தியா. வெளியே சென்று விட்டு வந்த கிருஷ்ணன் னோ இன்னும் அவளை எழாமல் இருக்கும் மகளை எழுப்ப சென்றார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகளைப் பார்த்து அவருக்கு எழுப்ப மனம் வரவில்லை. தூங்கும் மகளையே சிறிது நேரம் பார்த்து விட்டு சென்றார்.

மகள் மேல் அதிகம் பாசம் கொண்ட அந்த தந்தைக்கு தன் மகள் வாழ்வு நினைத்து அவர்க்கு கவலையாக இருந்தது.

சுவாசம் வரும்…….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

1 month ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago