என் சுவாசமே
காலை மணி 6.30
அழகான ரம்யமான பொழுது. விடிந்தும் இன்னும் சரியாக புலராத வேளை. இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி மலை பிரதேசம்.
மிதமான மழைச்சாரல். இயற்கையுடன் இயைந்து வாழ விரும்புவர்களுக்கு ஒரு சொர்கபுரி.
உடலை ஊடுருவும் குளிரில் ஆங்காங்கே சில மனித தலைகளின் நடமாட்டம் தெரிந்தது.
குளிரால் எழமுடியாமல் போர்வைக்குள் நெளிந்தது ஒரு உருவம். ஒரு வலிய ஆண் மகனின் விரல்களுக்குள் தன் விரல்களை நுழைத்து மரங்கள் அடர்ந்த கானகத்தின் வழியே நடந்து செல்லும்போது பாதை முடிவில் ஒரு அழகிய சோலை, பட்சிகளின் கான கீதம் செவியை வருடி மனதை அடைய நடுவே ஓர் சிறிய நீர்விழ்ச்சி.
அந்த சூழல் மனதிற்கு இனிமை தர அவன் கண்களை சந்தித்து “என்ன எப்போதும் இப்படியே அன்பா பாசமா பார்த்துக்குவீங்களா?”
கண்களில் ஆசையுடனும், மனதில் காதலுடனும், அவன் என்ன சொல்ல போகிறான் எனும் எதிர்ப்பார்ப்புடனும் அவன் முகம் நோக்கினாள்.
அவன் தன் அழுத்தமான உதடுகளை திறந்து, “ அடியேய் எரும மாடே பொழுது விடுஞ்சு எவ்ளோ நேரம் ஆகுது ஒரு பொம்பள புள்ளைக்கு இன்னும் என்ன தூக்கம் வேண்டி கிடக்கு ” என பெண் குரலில் அலறினான்.
அடித்து பிடித்து எழுந்தாள் அகத்தியா.( யெஸ் நீங்க கெஸ் பண்ணுனது ரைட். சாட்சாத் நம்ம நாயகியே தான்)
அந்நேரம் அவள் போன் அலற சுகமான கனவு கலைந்த எரிச்சலுடனே போனை பார்த்தாள். கூட இருக்கும்போது தான் உன் தொல்லை தாங்கல இப்ப கனவுலையும் வந்து டிஸ்டர்ப் பண்ற உன் இம்ச தாங்கலமா என சலிப்புடனே ஆன் செய்து “ம்ம்ம் சொல்லுமா” என்றாள்.
“ ஏண்டி எழுந்துருச்சியா இல்லையா ஒரு பொம்பள புள்ளைக்கு என்ன தூக்கம் வேண்டி கிடக்கு எல்லாம் இந்த மனுசன சொல்லணும் உன்ன செல்லம் குடுத்தே கெடுத்துட்டார் உன்னை எல்லாம் நாலுசாத்து சாத்தி வளத்துருக்கணும் இவரால தான் நீ கெட்டு குட்டிசுவரா போய்ட்ட என தனது மகளிடம் ஆரம்பித்து கணவரிடம் முடித்தார் பானுமதி.
தன் பேச்சு இழுக்கபட்டவுடன் ஹால் சோபாவில் காபி குடித்து கொண்டிருந்த கிருஷ்ணனின் மண்டையில் அபாய மணி அடித்து அவரை அலெர்ட் செய்தது . மெதுவாக இடத்தை காலி செய்தார். (பொழைக்க தெரிஞ்சவர்)
தாயிடம் ஏதோ பேசி சமாளித்து தன் வேலையை தொடர்ந்தாள். (அதாங்க தூங்குறது நமக்கு நம்ம வேலை முக்கியம்)
மறுபடியும் அலறி அவளது தூக்கத்தை தடை செய்தது அவளது அலைபேசி.
“நம்மள நிம்மதியா தூங்கவிடமாட்டாங்களே என எடுத்து அட்டென்ட் செய்வதற்குள் கட் ஆனது அப்பாடா தொல்லைவிட்டுச்சு என நிம்மதி அடையும் முன் மறுபடியும் தனது இருப்பை வெளிபடுத்தியது ஹலோ என சலிப்புடனே காதில் வைத்தாள்.
ஏன்டி எத்தனை கால் பண்ணிருக்கேன் ஒரு போன் அட்டென்ட் பண்ண எவளோ நேரம் சரி நீ கிளம்பிட்டியா இல்லையா எனக் கேட்டாள்
இம்முறை அலைத்தது அவள் தோழி மிருதுளா.மறுபடியும் முதல்ல இருந்தா ஷப்பா முடியலடா சாமி என அலுத்துக்கொண்டே ஏண்டி என்ன ஆச்சு என்று கேட்டாள்
என்னது என்ன ஆச்சா அடியே உன் போன் எடுத்து பாரு என்றாள் என்ன சொல்லுது பக்கி என யோசித்து கொண்டே
சரி பாப்போம் என்னது 19 மிஸ்டு காலா
அவளது கவனத்தை கலைத்தது எதிர் முனையின் குரல் நீ இன்னும் கிளம்பலை அப்போது தான் இன்று முக்கியமான மீட்டிங் இருப்பதும் அதற்கு தான் நைட் தயார் செய்து விட்டு லேட்டாக உறங்கியதும் ஞாபகம் வந்தது அய்யய்யோ இத சொன்னா திட்டுவாளே என நினைத்து சரி சமாளிப்போம் என்று இல்லடி நான் இதோ கிளம்பிட்டேன் என சளைக்காமல் பொய் சொன்னாள் அகத்தியா.
அவளது தோழி ஆயிற்றே அதை நம்பவில்லை ஏண்டி பொய் சொல்லாத நீ இன்னும் எழுந்திரிக்கல
தானே என்றாள். “அய்யய்யோ பக்கி கண்டு பிடிச்சுடுச்சே என்ன சொல்றது ஓகே சமாளிப்போம் என இல்லடி நான் கிளம்பிட்டேன் என்றாள் அகத்தியா.
அப்டியா சரி வந்து கொஞ்சம் வெளிய எட்டி பாரு என்றாள் என்ன சொல்லுது லூசு சரி போய்தான் பாப்போமே என கட்டிலை விட்டு இறங்கினாள் .
வாசலில் மிருதுலா இவளை முறைத்த படி நின்று கொண்டு இருந்தாள் இது தான் நீ கிளம்பிட்ட லட்சணமா என திட்டிக்கொண்டே உள்ளே வந்தாள்.
அவளுக்கு ஒரு அசட்டு சிரிப்பை பதிலாக தந்துவிட்டு காபி குடிக்குறியாடி என்றாள். ஏண்டி எப்படி டி இவளோ கூலா இருக்க எனக்கேட்டு முடியும் வரை அவளை முறைத்தாள்.
அதற்கெல்லாம் அசர்பவாளா அகத்தியா “ஏண்டி நீயும் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் ஆக்குற இதுக்கும் முறைப்பு தானா போடி அப்புறம் பிரிட்ஜ் ல பால் வச்சுருக்கேன் போய் காபி போட்டு குடிச்சுட்டு எனக்கும் போட்டு வை என்ன செல்ல குட்டி நான் போய் கிளம்புறேன் சரியா என்றாள்.
அவளை அடிக்க எதாவது கிடைக்கிறதா என சுற்றி முற்றி தேடிகொண்டு அடியே உன்னை கொல்லாம விடமட்டேண்டி லேட் ஆச்சேனு நான் அடிச்சு பிடிச்சு ஓடி வந்தா அம்மணி இன்னும் கிளம்பாம இருந்துட்டு இதுல்ல நான் வந்து உனக்கு காபி போட்டு வைக்கணுமா என காளி அவதாரம் எடுத்திருந்தாள் மிருதுளா.
அவள் கைக்கு சிக்காமல் போக்கு காட்டி பாத்ரூம்மிற்குள் நுழைந்தாள் அகத்தியா.ஆனாலும் தோழியின் சேட்டையை ரசித்து கொண்டே காபி போட கிட்செனிர்க்குள் போனாள் அவளது தோழி.
பின் அவள் கிளம்பி வரவும் இருவருமாக வேகவேகமாக கொறித்து விட்டு ஆபீஸ் கிளம்பினர். ஸ்கூட்டியின் பின் புறம் மிருதுலா உட்கார இருவரும் பேசிய படியே பயணித்தனர். அவர்கள் இருவரும் வேலை செய்வது ஒரு பல கிளைகள் கொண்ட ஒரு ஹோட்டல் நிறுவனத்தின் அலுவலக பிரிவில்.
இன்று கோயம்பத்தூரில் மதியம் அலுவலக சமந்தமான ஒரு முக்கிய மீட்டிங் நடை பெற இருந்தது. அதற்கான ஆவணங்களை தயார் செய்து அதை ஆபீசில் ஒப்படைத்து சரி பார்த்து பின் அதை பிரிண்ட் செய்து மேலாளரின் பார்வைக்கு அனுப்பி அவரது கையொப்பம் பெறவேண்டும் இரவு வெகு நேரம் இந்த வேலையை செய்து கொண்டு இருந்ததால் காலையில் லேட் ஆகி பரபரப்புடன் கிளம்ப வேண்டிற்று பேசிக்கொண்டே வந்தாலும் சாலையில் கவனம் வைத்துதான் வந்து கொண்டு இருந்தாள். ஆனால் விதி யாரை விட்டது! அவளது நேரம்.
சாலையில் திடீரென எங்கிருந்தோ ஒரு குழந்தை ஓடி வந்தது. அவள் அதை முன்பே கவனித்து விட்டாலும் மிக அருகில் வந்ததால் அவளால் பிரேக் பிடிக்க முடியவில்லை.
அந்த குழந்தையை காப்பாற்ற எண்ணி அவள் வண்டியை அந்த புறம் திருப்ப அந்நேரம் பார்த்து அப்புறம் ஸ்கூல் வேன் பிள்ளைகளுடன் வர அவர் இவர்களை பார்த்து பிரேக் போட முயல முடியாமல் அது தனது கட்டுபாட்டை இழந்து எதிர் புறம் வந்து கொண்டு இருந்த ஒரு கார் மீது மோத போக . அது ஒரு குறுகிய வழிப்பாதை என்பதால் அவர் அதனால் தடுமாறி மரத்தில் மோதி விட்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட விபத்தில் எல்லாம் தலைகீழ் ஆனது. இவர்கள் இருவரும் சிறு காயத்துடன் ரோட்டில் விழுந்து கிடக்க வேனில் இருந்த குழந்தைகள் பயத்தில் கத்திக்கொண்டு இருந்தனர் டிரைவருக்கு அவளவு அடி இல்லை
இருவரும் தட்டு தடுமாறி எழுந்து பார்க்கும் போது முதலில் ஒன்றுமே புரியவில்லை. பிறகு தான் நடந்தது புரிந்தது,அது ஒரு குறுகலான சாலை என்பதால் கண் இமைக்கும் நேரத்தில் விபத்து நடந்துவிட்டது.
சிலர் வேகமாக வேன் டிரைவரை மீட்டு முதலுதவி செய்து கொண்டு இருந்தனர். நல்லவேளை அதில் இருந்த பிஞ்சு குழந்தைகள் சிறு காயம் கூட இல்லாமல் தப்பி விட்டனர்.
ஒரு கூட்டமோ அந்த காரில் இருப்பவர்களை மீட்க சென்றனர். கார் கதவை திறக்க முடியாமல் போராடி கொண்டு இருந்தனர். இவர்கள் இருவரும் தங்கள் காயங்களை கூட பொருட்படுத்தாமல் அந்த பிள்ளைகளை கவனிக்க சென்றனர்.
ஆம்புலன்ஸ் வந்து வேனில் வந்த அனைவரையும் அனுப்பிவிட்டு வந்தனர். அப்போது தான் கார் கதவை உடைத்து அதில் இருந்த மூவரையும் மீட்டு வேறொரு அம்புலன்சில் அனுப்பினர்.
அகத்தியாவிற்கு மனசே சரியில்லை தன்னால் தான் இந்த விபத்து நடந்தது என்று நினைத்து கதற ஆரம்பித்தாள். என்ன தான் விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும் மிகவும் இளகிய மனம் கொண்டவள்.
“ஏய் இங்க பாரு அவங்களுக்கு ஒன்னும் ஆகாது ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்.இது உன்னால நடந்தது இல்ல ப்ளீஸ் சொல்லறத கேள்ளு” என அவளை சமாதானப்படுத்தினாள் மிருதுளா.
அப்படியும் அவளது சமாதானம் எடுபடாமல் போக தன் பலம் முழுக்க திரட்டி அவளது கன்னத்தில் ஒரு அரை விட்டாள், அதில் மிரண்டு பொய் அவளை நோக்கினாள்.
சொன்னா கேட்க மாட்ட இதுக்கு நீ காரணம் இல்ல புரியுதா என அவளை போட்டு உலுக்கினாள் மிரு.
அதில் தன் உணர்வு அடைந்து இல்லடி இது என்னாலதான் என அதே பல்லவியை பாடினாள் இங்க பாரு நான் தான் சொன்னேன்ல நீ அந்த குழந்தைய காப்பாற்ற நெனச்ச பட் இப்டி ஆகும்னு தெரியாதுல்ல இது உன்னோட தப்பு எதுவும் இல்ல புரியுதா. என சிறு கண்டிப்புடன் முடித்தாள் மிருதுளா.
இதில் அவளது புலம்பல் குறைந்ததே தவிர முற்றுமாக நிற்கவில்லை. தோழி குற்ற உணர்வில் பேசுகிறாள் என புரிந்து வா வீட்டுக்கு போகலாம். இப்ப அதிர்ச்சில இருக்க எதுவும் பேச வேணாம் ஆபீஸ்க்கு லீவ் சொல்லிடு பொய் ரெஸ்ட் எடு நான் பார்த்துக்குறேன்.
அவளோ ப்ளீஸ் டி என்னால வீட்டுல நிம்மதியா இருக்க முடியாது. வா இப்ப நம்ம ஹாஸ்பிடல் போலாம். ப்ளீஸ் டி எனக்காக வாயேன் எனக் கெஞ்சினாள்.
உன்னக்கு என்ன பைத்தியமா? சொல்றத கேட்கவே மாட்டியா நீ எல்லாம் பிடிவாதம் சொன்ன கேளு என கோவத்தில் ஆரம்பித்து சிறு கெஞ்சலுடன் முடித்தாள் மிரு.
அவளோ அதில் காதில் வாங்கினாள் தானே நீ வரலைனாலும் பரவாயில்ல நான் மட்டும் போறேன் நீ ஆபீஸ் போ என தன் நிலையிலேயே நின்றாள் .
சொன்னா கேட்கமாட்ட வந்து தொல என அவ்வழியே வந்த ஆட்டோவை மறித்து ஏறி கொண்டனர். வழியெங்கும் அவள் பிரமை பிடித்தார் போல் தான் வந்தாள் மிருதுள்ளாவிற்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது.
ஹாச்பிட்டளுக்குள் நுழைந்தவுடன் அவ்வுளவு நேரம் இருந்த தைரியம் அவளை விட்டு ஓடி விட்டது போலும். கால்கள் தள்ளாட அங்கேயே வேரோடி விட்டது போல் நின்றாள்.
கல் என சமைந்த கால்களை மெதுவாக எட்டு வைத்து எடுத்து சென்றாள். அவளை கை தாங்கலாக அழைத்து சென்று அங்கு இருக்கும் பெஞ்சில் அமர்த்தி விட்டு ரிசெப்சென்னில் விவரம் கேட்டு வந்தாள்.
ICU எனும் போர்ட்டை கண்டவுடன் இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும்
விடை பெற்றுவிட்டது. ஏற்கனவே தன்னால் தான் இந்த விபத்து என மருகி கொண்டு இருந்தவளுக்கு, இது இன்னும் பீதியை உண்டு பண்ணியது.
அவர்களை சார்ந்தவர்கள் யாரும்மின்றி ஒரு 60 அல்லது 65 மதிக்கத்தக்க ஒருவர் மட்டும் வெளியே கை நெற்றியில் கட்டுகளுடன் இருந்தார். அவர்களை தயக்கம் சூழ்ந்து கொள்ள என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே நின்று கொண்டு இருந்தாள் அகத்தியா.
அப்பொழுது கால் பேசி மிதித்து விட்டு வந்த மிருதுளா அவளது தோற்ற்றம் கண்டு அருகில் சென்று “ஹேய் ஏண்டி இங்கேயே நின்னுட்ட போலையா” என்றாள்.
இல்லடி எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்றாள். அப்டியா அப்ப வா போயிறலாம்.
ம்ஹும் ப்ளீஸ் டி பார்த்ட்டு மட்டும் போய்டலாம் ப்ளீஸ் டி சரி அப்ப வா இங்கேயே ஏன் நின்னுட்டு இருக்க இல்லடி பயமா இருக்கு என மறுபடியும் கூற மிருதுவிருக்கு டென்ஷன் தலைக்கு ஏறியது
பல்லை கடித்துக் கொண்டு ஒன்னு போய் பாரு இல்ல வா திரும்பி போய்டலாம்.
இப்டி என் உசுர வாங்காத என்றாள் மிருதுளா.
சுவாசம் வரும்…..