புன்னகை முகத்துடன் வீட்டினுள்ளே நுழைந்தவளை முறைத்த வண்ணம் வரவேற்றார் வெண்பாவின் சித்தி இந்திரா. அந்நேரம் அங்கு இந்திராவை எதிர்பாராவள் மிரண்டு விழித்தாள்.

“என்ன வெண்பா இவ்வளவு லேட்டா வர்ற? அஞ்சு மணியாச்சு எங்கே போயிருந்த?” என்று அதட்டும் குரலில் கேட்க, தடுமாற அவரது ஆராயும் பார்வை அவளை துளையிட சட்டென்று முகபாவனையை மாற்றியவள், அவரை நோக்கி,

“அது வந்து சித்தி.. திவ்யாவுக்கு உடம்பு சரியில்லைனு இன்னைக்கு காலேஜ் வரலை. அதான் அவ வீட்டுக்கு போய் அவளை பார்த்துட்டு வர கொஞ்சம் லேட்டாகிருச்சு..” என்று வாய்க்கு வந்ததை உளறி வைத்தாள்.

“தினமும் இப்படி தான் லேட்டா வரியா?” என்று அவளிடம் வினவ, இல்லையோ று தலையசைத்தாள்.அவளை நம்பாத பார்வை பார்த்தவர், தங்கை இந்துமதியை பாரக்க, அவரும் வெண்பாவின் கூற்றையே ஆமோதிக்க அதற்கு மேல் அவளிடம் கேள்வி கேட்டு குடையவில்லை.

வெண்பாவின் தாயின் மூத்த தங்கை தான் இந்திரா. தன் பிள்ளைகள் இருவருடனும் அங்கே வந்திருந்தார். அவள் மேல் பாசம் எந்தளவு இருக்கிறதோ அந்தளவு கண்டிப்பானவரும் கூட. எனவே, வெண்பாவுக்கும் இந்திரா சித்தி என்றால் கொஞ்சம் பயம்.

விட்டால் போதும் என தன் அறைக்குள் சென்று கதவை சாத்தியவள், முதல் வேலையாக போனை எடுத்து குறுந்தகவல் ஒன்றை குருவிற்கு தட்டவிட, மறக்காமல் சைலண்ட் மோடிற்கு மாற்றி விட்டு, “சித்தி வந்துட்டாங்க இனி ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்..” என்றெண்ணியவாறு குளியலறைக்குள் நுழைந்தாள்.

#

தன் படுக்கையில் சாய்ந்திருந்தவன் நினைவுகள் முழுவதும் அவளே. எப்படி இருந்த என்னை இப்படி மாற்றி விட்டாளே என்று தனக்குத் தானே கூறி சிரித்துக் கொண்டான்.இந்த ஒரு மாத காலத்தில் அவனுக்கு சகலதுமாகி போனாள் வெண்பா.

இந்திரா சித்தியின் குடும்பமும் அங்கே இருந்ததால் அடுத்து வந்த நாட்களில் அவளால் குருவை சந்திக்க முடியாமல் போனது. முன்பு போல போனிலும் அவ்வளவாக பேசிக் கொள்ள முடியவில்லை. குருவும் இறுதியாண்டு பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்தமையால் இருவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இப்படியே வாரங்கள் கழிந்தன. குருவின் பரீட்சைகளும் நிறைவடைந்து விட்டது. அன்று பல்கலைக்கழகத்தின் கடைசி நாள். அவர்கள் வழக்கமாக சந்தித்துக் கொள்ளும் பேராதெனிய தாவரவியல் பூங்காவின் வாகை மரத்தடியில் இருந்த மரபெஞ்சில் சோகமே உருவாய் அமர்ந்திருந்தாள் வெண்பா.

அவளது சுருள் அலகக் கூந்தல் காற்றில் அசைந்தாட அமர்ந்திருந்தவளை தூரத்திலேயே கண்டு கொண்டவன், புன்னகையுடன் தன் அழகுப் பதுமையை நோக்கி நடந்தான். அவள் பின்னே நின்று அவளது இரு கண்களையும் தன் கை கொண்டு மூட, அவளிடமிருந்து ஒரு அசைவுமில்லை. காதருகே குனிந்து,

“வந்து ரொம்ப நேரமாச்சா?” என்று கேட்க, அப்போதும் பதில் வராமல் போகவே, அந்த பெஞ்சின் சாயும் பகுதியை பிடித்து முன்னால் பாய்ந்து அவளருகில் அமர்ந்து கொண்டான். எங்கேயோ வெறித்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தவளை யோசனையாய் பார்த்தவனுக்கு அவள் அப்படி இருப்பதற்கான காரணமும் புரியவே, குறுநகையுடன்,

“டார்லிங் இங்கே பாரு ..” அவள் இரு கண்ணங்களையும் பற்றி தன் புறம் திருப்ப, அவள் விழித்திரை இரண்டும் கலங்கி செந்நிறம் கொண்டிருக்க,

“ஹேய் ஏன் இப்படி அழுது இருக்க? என்னாச்சு?” என அவளது இந்த அழுகைக்கான காரணம் அறிந்தும் அறியாதவன் போல கேட்டான்.

“ஏன் எதுக்கு அழறேன்னு உனக்கு தெரியாதா குரு?” அவனிடமே திருப்பி கேட்க, அதை ஆமோதிப்பது போல் தலையசைத்து விட்டு புன்னகையுடன் அவளை ஏறிட்டான்.

தான் இருக்கும் நிலையில் அவனது புன்னகை அவளை கடுப்பேற்ற அவன் கையை தட்டி விட்டவள், மூக்கை உறிஞ்சியபடி,

“நீ இனி காலேஜ் வரவே மாட்ட.. உன்னை பார்க்கவே முடியாதுனு நான் இங்கே ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. ஆனால் நீ கூலா சிரிச்சிக்கிட்டு இருக்க.. உனக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லைல.. “ என்று வாய்க்கு வந்ததை எல்லாம் கூறி ஆதங்கத்துடன் சத்தமிட அவனோ தன்னவளின் கோப வதனத்தின் அழகை ரசித்தபடி மாறா புன்னகையுடன் பார்த்திருந்தான்.

பைத்தியகாரி போல தன்னை புலம்ப விட்டு வேடிக்கை பார்த்து சிரிக்கும் அவன் மேல் கட்டுக்கடங்கா கோபம் வரவே அவன் சட்டைக் காலரை பற்றி தன்னருகே இழுத்து குருவின் முகத்துக்கு நேரே தன் முகத்தை கொண்டு வந்தவள்,
“ ஏன் என்னை கழற்றி விட்டுட்டு அந்த நிஷாவை கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஏதாவது ஐடியா இருக்கா? ” என அமைதியான அதே சமயம் அழுத்தமான குரலில் கேட்டாள்.

அந்தக் கேள்வியில் சிறிது அவளை சீண்டும் எண்ணம் தோன்றவே அதை செயல்படுத்த எண்ணி,

“வாவ் வெண்பா நீ ப்ரில்லியண்ட் பா.. நான் சொல்ல வந்ததை நீயே சொல்லிட்ட.. இவ்வளவு நாள் டைம் பாஸுக்கு உன்னை லவ் பண்னேன்.. காலேஜோட அந்த சாப்டர் இப்போ ஓவர்.. இனி அந்த நிஷாவை கல்யாணம் பண்ணி ஜாலியா லைஃபை என்ஜாய் செய்ய வேண்டியது தான்..” என்று உல்லாசமாய் கைகளை விரித்து கண்கள் மூடி அவன் கூறினான்.

அதில் ஏகத்துக்கும் கோபம் பொங்க சட்டை காலரை ஆவேசமாக பற்றி இழுத்து, கனல் தெறிக்கும் விழிகளுடன் அவனை விழிகளை நோக்கி ஆழமான பார்வையை செலுத்தியவள்,

“குரூஊஊஊ.. உனக்கு அப்படி ஏதாவது ஐடியா இருந்தா இப்பவே அதை மறந்திடு.. என்னை ஏமாத்திட்டு இன்னொருத்தி கூட சந்தோஷமாக வாழ விட்ருவேனா.. நெவர்.. யூ ஆர் மைன்.. யூ ஆர் ஒன்லி மைன்.. உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது மைன்ட் இட்..” என்று மிரட்டும் தொணியில் கூறினாலும் அதை கூறி முடிக்கும் தருவாயில் அவள் குரல் உடைந்ததோ..? அவனை தள்ளி அவன் சட்டையை பற்றியிருந்த தன் கைகளை விலக்கிக் கொண்டாள்.

அவளது செய்கையில் அவனுக்கு கோபம் வரவில்லை. மாறாக தன்னவன் தனக்கு மட்டும் தான் என்ற அவன் மீதான அவளது உரிமை பேச்சில் அவன் நெஞ்சம் நெகிழந்து போனது. தன் மேல் அளவு கடந்த நேசம் வைத்திருக்கும் தன்னுயிரானவளை இன்னுயிர் மூச்சாய் கண்ணுக்குள் மணிபோல் காப்பேன் என அவன் மனம் உறுதிமொழி எடுத்துக் கொண்டது.

அதன் பின் அவளிடம் தாறுமாறான அடிகளை வாங்கி, அவளை சமாதனம் செய்து ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றானது. தூரத்திலிருந்த வண்ணம் அந்த அழகிய தருணத்தை மனம் நிறைய பூரிப்புடன் அவர்கள் இருவரும் அறியா வண்ணம் அழகாக படம் பிடித்துக் கொண்டிருந்தான் சுகீர்த்தன்.

வாரம் ஒரு முறை வந்து அவளை சந்திப்பதற்கான உறுதிமொழியுடன் அவளிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பினான்.

அதன்படியே அவனும் மறக்காமல் வாரம் ஒரு முறை அவளை சந்தித்து விட்டுச் சென்றான். வரும் போது அவளுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை மறக்காமல் வாங்கி வரவும் தவறவில்லை. இப்படியே இருவரது காதலும் மூன்று மாதங்கள் வரை எவ்வித தங்குதடையுமின்றி அழகாய் நகர்ந்தது.

ஊரில் அவனது ஒரே உறவாக கருதும் தாத்தா இறந்து விட அவனால் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஏதோ தனிமைபடுத்தப்பட்டதை போன்ற உணர்வு அவனை முழுவதுமாக ஆட்கொண்டது. இத்தனை காலம் தாயாக தந்தையாக பார்த்து வளர்த்தவரின் இறப்பு அவனை பெரிதும் பாதித்தது.

அவன் வேதனைகளுக்கு ஒரே மருந்து வெண்பாவின் ஆறுதல் வார்த்தைகள் தான். அவளால் முடிந்தவரை தனது வார்த்தைகள் மூலம் அவனை ஆறுதல்படுத்தவே எண்ணினாள். அவள் வார்த்தைகளே அவனுக்கு பலமும் கூட.

அவள் மடிசாய்ந்து சிறிது நேரம் பேசினாலே அவன் மனதின் கவலைகள் யாவும் மாயமாய் மறைந்து விடும். இதற்காகவே வாரம் ஒரு முறை தன்னவள் மதிமுகம் காண வேண்டி ஓடோடி வந்து விடுவான். தாத்தாவின் இழப்பிலிருந்து மீண்டு வர அவனுக்கு சில காலமானது. அதன் பிறகு வந்த நாட்கள் இருவர் வாழ்விலும் மறக்க முடியாத அழகிய பொன்னான நாட்களே..

சில நாட்களாகவே அவளுக்கு குரு தன்னிடம் சரிவர பேசாதது போல் ஓர் உணர்வு தோன்றவாரம்பித்தது. ஒரு நாளில் பல மணி நேரம் உறையாடியவன் சில தினங்களாக சில நிமிடங்கள் பேசி விட்டு வேறு வேலை இருப்பதாக கூறி வைத்து விட இதுவே தொடர்ந்தது. சில தினங்களில் ஓரிரு குறுந்தகவல் மட்டுமே. அதன் பின் இரண்டு நாட்கள் அவளது அழைப்பை ஏற்கவுமில்லை. அவன் அவளை அழைக்கவுமில்லை. சுகீர்த்தனும் அவனது குடும்ப திருமணம் ஒன்றிற்காக கனடா சென்றிருந்தான். அவனுக்கு என்னானதோ..? ஏதானதோ என உள்ளம் பயத்தில் பதறியது.

மூன்று நாட்களுக்கு பின்..

குருவிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. அதற்காகவே காத்திருந்தவள் போல அழைப்பை ஏற்றவள்,

“டேய் தடிமாடு.. ஃபூல்… இடியட். எங்கேடா போயிருந்த? ஏன்டா இந்த மூனு நாளா எங்கூட பேசலை..? உனக்கு என்னாச்சோ ஏதாச்சோனு இங்க ஒருத்தி துடிச்சிக்கிட்டுஇன இருக்கா.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம எங்கேடா போய் தொலைஞ்ச?” என தான் மூன்று நாட்களாய் அடைந்த தவிப்பு கோபமாக வெடிக்க அவனை திட்டித் தீர்த்தாள்.

தன் மீதான காதலையும் கரிசனையையும் எண்ணி அவன் கண்கள் கரித்தது. அவளை காயப்படுத்தி விட்டோமே என்று குற்றவுணர்வும் சேர்ந்து கொள்ள அவன் காதல் மனம் அவளுக்காக வேதனை கொண்டது.

“சாரிமா.. தாத்தாவோட ப்ராபர்ட்டி விஷயமா ஒரே அலைச்சல் கலம்போ போயிருந்தேன்மா.. அதுக்காக உங்கூட இருந்தது தப்பு தான் மண்ணிச்சுக்க என் செல்லமே..” என்று கெஞ்ச அதற்கெல்லாம் அவள் அசருவாளா என்ன?

“ஜஸ்ட் ஒரு காலேஜ் பண்ணி இருக்கலாம்ல.. என் தவிப்பு உனக்கு எங்கே புரிய போகுது . என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்பு தப்பு தான் குரு..” என்றாள் கோபமாக.

“ஓகே..நான் செஞ்சது தப்பு.. ரொம்ப பெரிய தப்ப மா.. நான் உன் காலில் விழுந்துட்டேன்.. என்னை மண்ணிச்சிடு.. என் செல்லம்ல..” என்று குழையும் குரலில் கேட்க அதற்கு மேலும் அவள் கோபம் நீடிக்குமா என்ன?

எத்தனை பெரிய சண்டையிலும் ‘உன் காலில் விழுந்துட்டேன்’ என்ற வார்த்தையை சொன்னால் போதும் அதற்கு மேல் அவன் மீதான அவளது கோபம் காற்றில் பறந்து போய் விடும்.

அதன் பின் அவள் சமாதானமாகி விட வழக்கமாக அவர்கள் இருவரும் சந்திக்கும் பூங்காவில் சந்திக்க முடிவு செய்தனர். இந்த சந்திப்பு எத்தகையது என அவள் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மறுநாள் கல்லூரி விட்டதும் நேரே பூங்காவை அடைந்தாள். அவளுக்கு முன்பாகவே அவன் வந்திருக்க தன்னவனை கண்ட மகிழ்ச்சியில் உள்ளம் துள்ள ஓடிச் சென்று, “குரு இன்னைக்கு ரொம்ப சீக்கிரம் வந்து இருக்கியே..” என்று கொண்டே அவனருகில் அமர்ந்து உரிமையுடன் அவன் கைகோர்த்து தோளில் சாய்ந்து கொண்டாள்.

வந்ததிலிருந்து ஓயாமல் அவள் வளவளக்க அதற்கெல்லாம் “ம்ம்” கொட்டிக் கொண்டிருந்தான் அவன். வழமைக்கு மாறான குருவின் அமைதி அவளை குழப்ப அவனை நோக்கி,

“ஏன் குரு வந்ததிலிருந்து எதுவுமே பேசாம இருக்க? உடம்புக்கு ஒன்னும் இல்லையே..?” என்று பதற்றத்துடன் கூடிய அக்கறையுடன் அவன் நெற்றி மற்றும் கழுத்தில் கை வைத்து பார்க்க, அவள் விழிகளில் தனக்கான தவிப்பை கண்டவனுக்கு அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும். தனக்கு மட்டுமே.. என அவன் உள் மனம் உறுதி கொண்டது.

அவள் புறம் திரும்பி, “வெண்பா நாம கல்யாணம் பண்ணிக்கனும்..”என்றான்.

அவன் பேச்சில் சிறிது திகைத்தாலும் , “அதுக்கென்ன குரு நாம கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம். உனக்கும் அந்த ஜாப் கன்பார்ம்ல இன்னும் ஒரு வருஷத்துல என்னோட படிப்பும் முடிஞ்சிடும்.. அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்..” என்று கூலாக கூறி புன்னகைக்க,

“நோ இன்னும் ரெண்டு நாளில் நமக்கு கல்யாணம் . அதுவும் ரிஜிஸ்டர் மேரேஜ்..” என்றான் அழுத்தமான குரலில்.

“குரூஊஊ.. என்ன சொல்ற? நாம ஏன் அப்படி யாருக்கும் தெரியாம கல்யாணம் செஞ்சுக்கனும்.? அதுவும் ரெண்டு நாள்ல எப்படி குரு..?” என்று கலக்கத்துடன் வினவ,

“ரெண்டு நாள்ல உனக்கும் எனக்கும் கல்யாணம் வெண்பா . என் மேல உனக்கு உண்மையான லவ் இருந்தா இதுக்கு மேல எந்த கேள்வியும் கேட்காதே..” என்று இது தான் என் முடிவு என்பது போல் அழுத்தம் திருத்தமாக கூறி நடந்தான்.

தன்னவனின் எதிர்பாராத இந்த திடீர் முடிவால் கல்லாய் சமைந்து போனாள் பெண்ணவள்.

தொடரும்..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago