கொழும்பு வந்ததிலிருந்து வெண்பாவின் நினைவிலேயே இருந்தவனுக்கு மீண்டும் தற்கொலைக்கு முயலக் கூடுமோ என்ற சந்தேகம் வலுக்க அவளை கண்காணிக்கவென ஓர் ஆளை நியமித்திருந்தான்.
அவள் அவ்வாறு எந்த முயற்சியும் செய்யாது சாதாரணமாக இருப்பதாக தகவல் கிடைத்த பிறகே தினமும் அவனால் நிம்மதியாக உறங்க முடிந்தது. இன்று அவளை கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த ஆளான சுமன் அவனை தொடர்பு கொண்டு கூறிய விடயம் அவனை அதிர்ச்சியைடயச் செய்தது.
அதாவது வெண்பா கடத்தப்பட்டாள். தனியாளாக அந்த இடத்தில் இருந்த சுமனால் அப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலை. உடனே குருவுக்கு அழைப்பெடுத்து கூற, அவனது உத்தரவின்படி தன் சகாக்கள் சிலரை அழைத்து தயார் செய்தான்.
அரிசி குடோன் ஒன்றில் கைகளிரண்டும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் நாற்டாலியொன்றல் அமர வைக்கப்பட்டிருந்தாள் வெண்பா.
அறை எங்கிலும் கும்மிருட்டு. பயத்தில் உடல் வியர்க்க, உதடுகள் நடுங்கியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருண்டு அவளை பயமுறுத்தியது. தன் பலம் கொண்ட மட்டும் இழுத்து கட்டை அவிழ்க்க முயன்றாள் முடியவில்லை.
“ஹலோ..யாராவது இருக்கீங்களா? ப்ளீஸ் ஹெல்ப் மீ..” என்று கத்தவாரம்பிக்க, அந்த அறைக் கதவு படாரென திறக்கப்பட்டு அவ்வறையின் விளக்குகள் ஒளிர விடப்பட, இதயம் வேகமாய் அடித்துக் கொள்ள தலை நிமிர்ந்து பார்த்தாள்.
அது அவள் தானே? அவளே தான் நிஷா. அவள் உதடுகள் தானாக அவள் பெயரை உச்சரிக்க, ஓர் இடிச் சிரிப்புடன் அவளை நெருங்கி வந்தாள் அவள்.
அவள் அமர வைக்கப்பட்டிருந்த நாற்காலியை ஓர் சுற்று சுற்றி விட்டு அவள் முகத்தை கூர்ந்து, வெண்பாவின் விழிகள் பயத்தில் விரிய, அருகே வந்து பளார் என அறைய “அம்மா..” என அலறியவளது கன்னம் திகுதிகுவென எரிந்தது.
“இன்னைக்கு உன்னால என்னை அடிச்சிட்டான் அந்த குரு.. எல்லாம் உன்னால தான்டீ..”
“என்னடீ அப்படி பார்க்குற.. நான் நிஷாவே தான். உன் குருவை கல்யாணம் பண்ணிக்க போற நிஷா.. நீ யார்னு தெரியாம வாழும் ஓர் லூசுப் பையன் அவன் ” என்றும் மீண்டும் சிரித்துக் கொண்டே அவள் தாடையை அழுந்தப் பற்ற, நிஷாவின் முகம் மிகக் கொடூரமாக காட்சி தந்தது.
அவள் பற்றிய இடம் வேறு அவளுக்கு வேதனையை தர, மிரண்டு போனவளாய் அவளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னடீ.. உன்னை ஏன் இங்கே கடத்திட்டு வந்து இருக்கேன்னு தெரியாம குழம்பிப் போயிருக்கியா?” என்று நிதானமாக கேட்க, வெண்பாவின் தலை ஆம் என்பது போல் மேலும் கீழுமாக ஆடியது.
“ஏன்னா நான் உன்னை கொல்ல போறேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ சாகப் போற..” என்று கூற அதிர்ந்து விழித்தாள் அவள்.
“பயப்படாதே ஏன் சாகப் போறனு உனக்கு தெளிவா சொல்றேன். இவ்வளவு நாள் நீ ஒரு பைத்தியக்காரி எதை தேடினாயோ அதுக்கான பதில் உனக்கு இப்போ சொல்லப் போறேன் கேட்டுக் கோ…” என்று அவள் கூற சட்டென தலையுயர்த்தி அவளை புரியாத பார்வை பார்க்க,
“ஹேய் பேபி.. அப்படி பார்க்காதே உண்மை தெரிஞ்சிக்கிட்டு சந்தோஷமாக செத்துப் போ அப்போ தான் உன் ஆத்மா சாந்தியடையும்..” என்றவள் கூறவாரம்பித்தாள்.
அன்று குருவும் சுகீர்த்தனும் அவனது காரில் கண்டியிலிருந்து கொழும்பை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த பெரிய கண்டெய்னர் லாரி ஒன்று மிக வேகமாக அவர்களை நோக்கி வர அதை உணர்ந்தவன் நொடியில் சுதாரித்து திருப்ப முனைய அதற்குள் ஒரு பக்கத்தை மோதிய வேகத்தில் குரு தூக்கி வீசப்பட்டான்.
அவன் தலை ஓர் கல்லில் மோத அப்படியே மயக்கமடைந்தான். அந்த விபத்தில் சுகீர்த்தனுக்கு பலத்த அடி. இருவரும் மருத்துவமனையில் அவனுமதிக்கப்பட்டனர்.
சுகீர்த்தனது இடுப்புப் பகுதியில் பலமான அடி. அவனது பெற்றோர் மேலதிக சிகிச்சைக்காக கனடா அழைத்துச் சென்றனர்.
குருவிற்கு தலையில் பட்ட அடியின் காரணமாக மூன்று மாதங்கள் தன்னை மறந்த நிலையில் கோமாவில் இருந்தான்.
நினைவு திரும்பி எழுந்தவனுக்கு அந்த விபத்துக்கு முன் நடந்த எதுவுமே ஞாபகத்தில் இல்லை. அவனது தாத்தாவின் இறப்பை கூட மறந்திருந்தான். பழைய கோபம், வெறுப்பு எதுவுமின்றி சகஜமாக உரையாட குருவின் தந்தைக்கு அதுவே போதுமாயிருந்தது.
இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த நிஷாவும் அவளது தந்தையும் வேதநாயகத்திடம் பேச, குருவும் நிஷாவுடனான திருமணத்திற்கு சம்மதித்தான்.
“நீயும் குருவும் காதலிச்சது எல்லாம் எங்களுக்கு தெரியும். முதலில் அந்த வேதநாயகம் இதுக்கு ஒத்துக்கலை குரு உன்னை லவ் பண்றான்னு என்னை வேணாம்னு சொல்லிட்டான் அவன் அந்தக் கோவத்துல நான் தான் குருவை ஆக்ஸிடன்ட் செஞ்சு கொல்ல சொன்னேன். ஆனால் பயபுள்ள தப்பிச்சிட்டான் என்ன பழசை எல்லாம் மறந்து லூசாகிட்டான் இதையே எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டேன்.” அவள் கூற, வெண்பாவுக்கு அதிர்ச்சி தான் குருவுக்கு கடந்த காலம் மறந்து விட்டதா?
அந்த விபத்தில் அவன் உயிருக்கு ஏதாவது நடந்திருந்தால்.. ராட்சசி ஒரு பெண்ணால் இப்படியும் செய்ய முடியுமா? தன்னவனின் நிலையை எண்ணி கண்ணீர் உகுத்தாள் பெண்ணவள்.
அவளே தொடர்ந்து, “இதுல என்ன ட்விஸ்ட்னா அவன் உன்னை கல்யாணம் பண்ணி இருக்க விஷயம் மட்டும் தான் எங்களுக்கு தெரியலை. நீ சொன்னப்போ எனக்கே கொஞ்சம் அதிர்ச்சி தான்.
அந்த ஆக்ஸிடன்டுக்கு முன்னாடி ஒரு தடவை கலம்போ வந்தான்ல. அப்போ வேதநாயகம் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி மிரட்டி இருக்காரு. அவன் நீ தான்னு முடிவா சொல்லிட்டு வந்து இருக்கான். அதுக்கப்புறம் தான் உன்னை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்கான் ரைட் ?” என்று அவளை பார்க்க,
அவளுக்கு அப்போது எல்லாம் புரிந்தது. அதனால் தான் அன்று அவ்வளவு அவசரமாக திருமணம் செய்து கொண்டானா? தன் மீதான அவனது காதலை எண்ணி உள்ளம் மகிழ, காதலும் பெருக, ஓர் நமட்டுப் புன்னகையுடன் அவளை ஏறிட்டாள்.
“குருவுக்கு இதெல்லாம் தெரிஞ்சா உன்னை சும்மா விடுவான்னு நினைச்சியா? நீ என்னை கொன்றால் கூட அவனோட ஆழ் மனசுல இருக்க என் மீதான காதலை யாராலும் மாற்ற முடியாது..” என்று உறுதியான குரலில் கூற, நிஷாவின் கோபம் அதிகரிக்க,
அவளை கொன்று விடும் வெறியில் கீழே கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து அவள் தலையை குறி பார்த்து ஓங்க, அதே நேரம் அந்த குடோனின் கதவு பாரிய சத்தத்துடன் திறக்கப்பட அவளது கை தானாக நின்றது. புயலென உள் நுழைந்தான் குரு. அவனை தொடர்ந்து சில பேர். எதிர்பாராத குருவின் வருகையினால் பெண்கள் இருவரும் திகைத்து நிற்க,
அங்கு அவன் கண்ட காட்சியில் இதயம் தாறுமாறாக துடிக்க, கை முஷ்டி இறுக, “நிஷா…” என்ற உறுமலுடன் வேக எட்டுக்களுடன் அவளை நெருங்க, அவளுக்கோ அவன் தன்னை நெருங்குவதற்குள் அவளை கொன்று விடும் வேகம்.
மீண்டும் பலமாக அடிக்க ஓங்க, “நோ..” என்ற கத்தலுடன் வெண்பாவுக்கும் நிஷாவுக்கும் இடையே புகுந்தவனது தலையை பதம் பார்த்தது அந்த இரும்புக்கம்பி.
உலகமே தலை குழாய் சுழல, கண்கள் மங்க,இரு கைகளாலும் தலையை தாங்கிய வண்ணம் நிலத்தில் சரிந்தான் குரு.
“குரூ..” என்ற அவளது அலறலில் அந்த ஊரே அதிர்ந்திருக்கும்.
அவனை தொடர்ந்து வந்த குருவின் ஆட்கள் நிஷாவையும் கடத்தலுக்கு உடந்தையானவர்களையும் பிடித்துக் கொண்டனர்.
“டேய் சுகீ ஃபீல் பண்ணாதடா.. நீ சீக்கிரம் எழுந்து நடக்க தான் போற. அப்புறம் உனக்கு சரக்கு வாங்கி தந்து உன் வாயாலேயே உன் ஹிட்லரை திட்ட வைக்கிறேனா இல்லையானு பாரு..” என்று அவன் மனநிலையை மாற்ற எண்ணி கேலியாய் சிரிக்க , அவனும் மனம் விட்டு சிரித்தான்.
“தேங்க்ஸ்டா.. நீ வந்தா மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸா இருக்கு.. இப்படி நடக்க முடியாம ஒரே ரூம்ல அடைஞ்சி கிடக்கிறது ரொம்ப கஷ்டம் டா..” என மனமுருகிய நண்பனை அணைத்தவன்,
“அதான் மச்சி சீக்கிரம் நீ திவ்யாவை கல்யாணம் பண்ணிக்கோ..” கூலாக கூறினான் குரு.
“முட்டாள் மாதிரி பேசாதேடா.. இப்போ நான் இருக்கும் நிலைமையில் கல்யாணம் ரொம்ப முக்கியம்.. அவளை நான் உயிராக நேசிக்கிறேன்டா.. அவ வேற யாரையாவது கல்யாணம் செய்துகிட்டு சந்தோஷமா இருக்கட்டும்..” என்றான் வேதனை குரலில்.
“நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் என் மனசை மாத்திக்க முடியாது சுகீர்த்தன். உங்க மனசுல நான் இருக்கேன்னு தெரிஞ்சு போச்சு..நீங்க எப்படி இருந்தாலும் உங்களை தான் காதலிப்பேன்..” என்று கூறிக் கொண்டே அவனது அறையினுள் நுழைந்த திவ்யாவை அதிரந்து நோக்க, குருவோ பற்கள் பளீரிட சிரிக்க இது அவனது வேலை என புரிந்தது அவனுக்கு.
திவ்யா வேறு யாருமல்ல. வெண்பாவின் தோழி தான். அப்போதே இருவருள்ளும் காதல் இருந்தாலும் கூறிக் கொள்ளவில்லை. விபத்துக்கு பின்னான இவனது நிலையறிந்து அவனை விடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறாள் திவ்யா.
“குரூ..இது உன் வேலை தானா..?” என்று அவனை முறைக்க, அதை கண்டு கொள்ளாதவன்,
“தங்கச்சி இனி உன் டர்ன்மா.. வீட்ல வெண்பா எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பா..அப்போ தான் கிளம்புறேன்..” என்று புன்னகையுடனே வெளியேறினான்.
“திவ்யா நீ வீட்டுக்கு போ..” எங்கேயோ பார்வையை பதித்தபடி அவன் கூற,
“ஏன் சுகீ..? இனியும் நான் உங்களை பிரிந்து இருக்க மாட்டேன். இது தான் என் முடிவு..” அவனருகில் வந்து அமர்ந்து அவன் முகத்தை அவள் புறம் திருப்ப, இருவர் பார்வைகளும் ஒன்றோடொன்று கலக்க, அவனை கட்டியணைக்க அந்த அணைப்பில் கரைந்தான் அவன்.
போர்டிகோவில் தனது பைக்கை நிறுத்தியவன் அவசரமாக உள்ளே நுழைந்தான். ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த வேதநாயகம் அவனது வேகத்தை எண்ணி சிரித்துக் கொண்டார்.
“டாட் வெண்பா சாப்பிட்டாளா?” என்று கேட்க,
“இல்லையேப்பா.. நீ வந்ததும் சாப்பிடறேன்னு சொல்லிட்டா.. நீ என்னடான்னா பத்து மணிக்கு வர்ற.. பிள்ளை தாச்சி பொண்ணு ரொம்ப நேரம் பசியில இருக்க கூடாது குரு.. போ சீக்கிரம் என் மருமகளை சாப்பிட வை..” என்று அவனை அதட்டும் குரலில் விரட்டினார்.
நினைவு தெளிந்த பின் மீண்டும் தந்தையுடன் தன் கோபத்தை காட்ட ஆரம்பித்தவன் தன் காதல் மனைவியின் “குரு உங்க அப்பா மேல எந்த தவறும் இல்லை.. அவர் கூட மனம் விட்டு பேசுங்க உங்களுக்கு புரியும்..” என்ற ஒற்றை வார்த்தைக்காக தன் தந்தையிடம் மனம் திறந்து பேச உண்மையை அறிந்து கொண்டவன் இத்தனை ஆண்டுகள் தந்தையை புரிந்து கொள்ளாமல் பிரிந்திருந்ததற்காக வருந்தினான். இதனாலேயே வேதநாயகத்திற்கு மருமகளின் மேல் அலாதி பிரியம்.
தன் மனைவி இன்னும் உண்ணவில்லை என்றதும் அவர்களது அறைக்கு ஓடினான். ஆனால் அவன் மனைவி அங்கே இல்லை. ஒவ்வொரு அறையாக தேடிப் பார்க்க அவளோ அவன் கண்களில் சிக்காது கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டே இருந்தாள்.
“இவ எங்கே போனா இந்த நேரத்தில..?” என்று எரிச்சலுடன் புலம்பியபடி தேடியவனுக்கு அப்போது தான் நினைவில் வந்தது. இன்று பௌர்னமி தினம் என்று.
வெண்பாவுக்கு முழு நிலவை ரசிப்பதில் அலாதி இன்பம். அதனால் கண்டிப்பாக மொட்டை மாடியில் தான் இருக்க வேண்டும் என்று தோன்ற மொட்டை மாடியை நோக்கி விரைந்தான் அவன்.
லேசாக உப்பித் தெரிந்த மணி வயிறுடன் கர்ப்பிணிப் பெண்கள் அணியும் ஃப்ராக் அணிந்து ஹேர் இன் பன் ஸ்டைலில் முடியை சேர்த்து கட்டியிருக்க, தாய்மை தந்த பூரிப்புடன் நிலவொளியில் மிளிர்ந்த அழகிய வதனத்துடன் நின்றிருந்த தன்னுயிரின் பாதியின் பக்கவாற்றுத் தோற்றத்தை கண்களால் பருகியவன் அவள் பின்னே சென்று அணைத்துக் கொண்டான்.
“ஏன்மா.. பனியில் வந்து நிக்குற? நீ இன்னும் சாப்பிடலை பேபிக்கும் பசிக்கும்ல. வா மா சாப்பிட்டு வரலாம்..” கனிவுடன் அழைத்தவன் அவள் வயிற்றை தடவ அந்த வித்தியாசத்தை உணர்ந்தான்.
“குழந்தையின் அசைவு புரியாத கணவன் அவளை புரியாமல் விழிக்க, அவளை திரும்பி அணைத்தவள், அவள் காதோரம் எம்பி,
“குரு நம்ம பேபி இப்போ உதைச்சான்.. மம்மி இவ்வளவு நேரம் சாப்பிடாம வெயிட் பண்றாங்க நீங்க ரொம்ப லேட்டா வந்து இருக்கீங்கனு..” என்று கிசுகிசுப்பான குரலில் கூறி கிளுக்கிச் சிரிக்க, அவளது கிசுகிசுக் குரல் தந்த போதையில் அவள் தன் புறம் இழுத்தான்.
இடையோடு கையிட்டு அணைத்து, அவள் முன் நெற்றியில் விழுந்திருந்த ஒற்றை முடியை கையால் விலக்கி, அவள் முகத்தில் ஒற்றை விரலால் கோலமிட, கணவனது தொடுகையில் உடல் சிலிர்க்க அவள் கன்னங்கள் இரண்டும் அந்தி வானமாய் சிவந்தன.
தன் மனையாளின் கன்னச்சிப்பை கண்டு இதழ்களில் இளநகை பூக்க அவள் இதழ்களை சிறை செய்தான் அந்தக் காதல் காதல் கணவன்.
நீண்ட முத்தத்தை அளித்து விடுவித்தவன் அவள் முகம் நோக்கி ,
“உன்னை அந்த மூனு மாதம் ரொம்ப கஷ்டப்படுத்தி இருப்பேன்ல?” அவன் குரலில் தெரிந்த வேதனை பெண்ணவளை தாக்க,
“குரு ப்ளீஸ் எத்தனை தடவை தான் இதையே சொல்லுவீங்க.. அது உங்களையே அறியாம நடந்தது.. ஆரம்பத்தில் நான் கூட கோவப்பட்டேன் தான் ஆனால் அந்த நேரத்தில உங்க பக்கத்தில இருக்க முடியாம போச்சேன்னு அதை விட அதிகமாக வருத்தப்பட்டேன்.. நீங்க எனக்கு முழுசா கிடைச்சிருக்கீங்க..எனக்கு அது போதும் குரு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..” என்று அவனை நெருங்கி இறுக அணைத்து ஆறுதலாய் அவன் முதுகை தடவ அவன் கண்களில் கண்ணீர் அரும்பியது.
“டேய் குரு.. நான் எதுக்காக இங்கே வந்தேன்.. நீ என்னடான்னா எமோஷனல்லா பேசி நான் வந்த வேலையை மறந்துட்டேன்.. அங்கே பாருடா அந்த நிலாவை எவ்வளவு அழகா இருக்குனு…” என்று சூழ்நிலையை மகிழ்ச்சியான தருணமாக மாற்ற எண்ணி அணைப்பிலிருந்து விலகி நிற்க,
அவள் இடையை பற்றி தன் புறம் இழுத்தவன், நெற்றியோடு நெற்றி முட்டி,
“அதைவிட இந்த நிலா ரொம்பவே அழகாக இருக்கு..” என்று ஹஸ்கி குரலில் கூறி அவனது ட்ரேட் மார்க் புன்னகையை சிந்த, அதில் சிவந்தவள் அவன் மார்பில் சாய்ந்து அவனை ஆரத் தழுவிக் கொண்டாள்.
முற்றும்..
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…