காயூ என்னாச்சு டி நோக்கு கேட்டுன்டே இருக்கேனுல சொல்லுடி…
ஹ்ம்… வாசு அங்க யாரோ நிக்குறாங்க… பயத்தில் வெளிறினாள்….
யார்டி நிக்குறாங்க வாசு போய் பார்க்கவும் அங்கே யாரும் இருந்த மாதிரி அறிகுறியே இல்லாமல் இருக்க காயுவுயே விசித்திரமாய் பார்த்தாள்..
இவ ஏன் அப்பப்ப ஒரு மாதிரி ஆகிடுறா… ஹ்ம் அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம் …
நீ வாடீ … இந்தா புடவையை கட்டு நான் போய் பூ எடுத்துண்டு வறேன்னு .. வெளியே செல்லவும்…
ஹேய் தனியா விட்டு போகாதடிவாசு … காயு கத்திகொண்டே பின்னாடியே ஓட கதவு படீர்னு மூடியது ..
காயு கதவு தானாய் மூடியதும்
பயத்தில் பின் வாங்கினாள் …
எங்கே ஓடுற காயு …. உன்ன தேடி எத்தனை ஜென்மம் கடந்து வந்து இருக்கேன் என்ன பார்த்துட்டு ஏன் பயந்து ஓடுற…
நீ…. நீ..யாரு எதுக்கு பயமுறுத்துற ஏன் என்னயே சுத்தி வர நோக்கு வேற ஆளே கெடைக்கலயா…..
நான் தான் கிடைத்தேனா…. போ இங்கிருந்து… உள்ளுக்குள்ள பயம் இருந்தாலும் வெளியே தைரியமா பேசினாள்..
ஹாஹா….. நான் ஏன் போகணும்
நீ தான் நான் …. நான் தான் நீ … என் உடல் தேடி வந்து இருக்கேன் .இத விட்டு நா எங்கே போவேன் ….
என்னது உன் உடலா….?
ஆமா …. நீ இருக்குறது என் உடலே தான்… என்னை நீ உணர்ந்தாள் மட்டுமே …
நா ஏன் உன்ன சுத்தி சுத்தி வரேன்னு உனக்கு தெரியும்…
நீ தான் என்ன பாத்தாலே பயந்து ஓடுறியே… கோவத்தோட பேசியது…
உன்கிட்ட பேச நேக்கு பிடிக்கல போறியா இல்லை அப்பாவ கூப்பிடவா…
ஹாஹா யாரு உன் அப்பா… அவரா.. ஹாஹா அந்த அறையே அதிரும் படி சிரித்தது…
கண்களில் தீயின் ஜுவாலை தகித்தது… உன் அப்பா அவரில்லை…
உன்னை உணரும் காலம் நெருங்கி விட்டது …. காயூ அவளையே திக் பிரமை பிடித்த மாதிரி அதிர்ச்சியோட பார்க்க….
அந்த உருவம் அவளை நெருங்கியது.
காயூவின் உடம்பு முழுவதும் குழுங்கியது….
காயு …. அவாள்லாம் வந்துட்டாடி… கதவை திற… வாசு கத்திண்டு இருக்க. .
கதவை திறந்தாள்…
என்னடி லூசா நீ …
நா பூ தான எடுத்துண்டு வர போனேன்..
உன்ன யாரு அதுக்குள்ள கதவை அடைக்க சொன்னது… கோவத்தில் பொரியவும்….
ஹ்ம்ம் வா வா திரும்பு பூ வச்சி விட்றேன்…
எதுவும் பேசாமல்
காயு அமைதியாய் வாசுவிடம் நிற்க்கவும்…
பூ வைத்து காயுவை பார்த்தா வாசு வாவ் செம அழகா இருக்கே டீ …
நேக்கே பிடிச்சிருக்கு … நா மட்டும் பையன் னா பொறந்து இருந்தேன் வை ..
உன்ன யார்க்கும் விட்டுகுடுத்துருக்க மாட்டேன் …
அம்புட்டு அழகா இருக்கேடி என் கண்ணே பட்டுடும் போல…
இரு அவா எல்லாம் போகட்டும் மாமியாண்ட சொல்லி சுத்தி போடச்சொல்லணும்…
மாப்ள ஜம்முனு இருக்கார் டி காயு…
உனக்கு… வேணாம்னா சொல்லு நானே ஓகே பண்ணிக்கிறேன் கண்ணடித்து சொல்லவும்….
சடார்னு வாசுவை பார்த்து முறைத்தாள்…
கூல் கூல்….காயு அப்படிலாம் பண்ணமாட்டேன் பயப்படாதே அழகை யார்வேனாலும் ரசிக்கலாம் காயு…
எதுவும் பேசாமல் அமைதியாய் நிற்கவும்….
சரிடி நான் போய் காபி குடிச்சுட்டு வறேன்… நோக்கும் வேணுமா…
ஹுகும் .. வேணாம் னு தலையை மட்டும் ஆட்டினாள்…
ஹ்ம் சரி நா போய் குடிச்சிட்டு வறேன்…
அவள் வெளியே போனதும் காயுவே கதவை அடைத்தாள்… ஹாஹா வந்துட்டீங்களா…. வாங்க வாங்க… என்ன தேடி உங்களை வர வச்சிட்டேன் பாத்திங்களா… உங்களுக்குகாக தான இத்தனை ஜென்மங்கள் காத்துருந்தேன்…. வாங்க… ஹாஹா…….
ஜானு… அவா எல்லாம் வந்துட்டா பாரு வாடி…
வாங்கோ வாங்கோ… வாசல் வரை பயத்தோடவே அழைத்தார்…
தோ வறேன்னா… ஜானுவும் அவாளை வரவேற்க… ஓடிவந்தாள்.
மிக கம்பிரமாய்… காரில் இருந்து இறங்கினான் பார்த்திபன் ஆணழகன்..
அவனின் கம்பிரத்தில் மயங்காதே பெண்களே இல்லை… ஆனால் அவன் யாரையும் அலட்சியமாய் தான் பார்ப்பான்… தான் என்ற கர்வம் உள்ளவன்…
இருந்தாலும் அம்மாவின் மேல் அளவு கடந்த பாசம் உள்ளவன்.. அதனால் தான் அம்மா சொன்ன ஓரே காரணத்துக்காக காயுவை பொண்ணு பார்க்க வந்து இறங்கி இருக்கிறான்…
அகிலாண்டஸ்வரியோ .. அவள் கண்ணில் அலட்சியம் மட்டுமே குடிகொண்டிருந்தது… மிடுக்காய் ஓர் பார்வை பார்த்தாள் சாம்பசிவத்தையும் ஜானகியும் .
அந்த பார்வையில் ரோமங்கள் சிலிர்க்க நடுங்கினர் இருவரும்…
வா.. வாங்கோ.. திக்கி திணறி அழைக்க…
ஹ்ம்… முனைப்போடு உள்ளே சென்றாள்…
பின்னாடியே பார்த்திபன் சுமித்ராதேவி அவள் கணவர் வேதலிங்கம்…மகள் மதுரா…செல்ல
வேதலிங்கத்தின் அக்கா …கற்பகம் ஏன்டா வேதா உன் அத்தைக்கு கொஞ்சமாச்சும் அறிவுஇருக்கா போயும் போய் ஒரு பூசாரியோட பொன்னனை பாக்க வந்து இருக்கா பேரு தான் பெரிய அரியனுர் அகிலாண்டேஸ்வரி ஆனா உள்ளே ஒண்ணுமே இல்ல இருந்து இருந்தா இங்கேயே பொண்ணா எடுப்பா…
ஹுக்கும் அவளுக்கு தன் தம்பி பொண்னு கிளி மாதிரி இருக்க ஒன்னத்துக்கும் உதவாத வீட்டுல பொண்ணு எடுக்குறாளே… வயித்தெரிச்சல்……
அவளோ பாசமோ தம்பி மேலயும் தம்பி பொண்ணு மேலயும் …
ஹுக்கும் அது தான் இல்லை … தம்பி பொண்ணு னா காலம் முழுக்க அந்த வீட்ல ஓண்டிட்டே காலம் தள்ளிடலாம்.. வெளியேஇருந்து பொண்ணு வந்தா நம்ம டப்பா டான்ஸ் ஆடிடுமே குப்ப கொட்ட முடியாதே வரவா எப்படி இருப்பாளோனு ஒரு பயம் அதுக்கு தான் இப்படி புலம்பி கொண்டிருந்தாள்…
கற்பகம்தோட பையனோ பூபதி.. பொண்ணுகளை பார்த்தா போதும் கண்ணாலே கற்பழிச்சிடுவான்… அவனோட அட்டகாசம் எல்லாம் அரமனைக்குள்ள வர மா பார்த்து கொண்டான்…
காரில் வந்து இறங்கும் அவர்களையே
. தெருவே வேடிக்கை பார்த்து கொண்டுருந்தது..
சிலர் வயிறு எறிந்தார்கள்… தட்டுல விழுற அஞ்சுஜ்க்கும் பத்துகும் பொழப்பு நடத்துற சாம்புவுக்கும் அவா பொன்னுக்கும் வந்த வாழ்வு பாரேன் பொறாமையில் வெந்து போயினர்…
வாசவி யோட தோப்புனார் சிவராமன்க்கு இதில் கொஞ்சமும் விருப்பம் இல்லைனாலும் சிநேகம் விட்டு போய்ட கூடாதேன்னு … கலந்து கொண்டார் …
அடியே அலமு உள்ளர போ போய் ஜானகிக்கு கூடமாட ஒத்தாசை பண்ணு …
ஹ்ம் சரிங்கோ னா..
அலமு என்கிற அலமேலு… வா ஜானு .. நாம போய் அவாளுக்கு காபி பலகாரம் எடுத்து வைச்சிடுலாம்…
ஹ்ம்…
இருவரும் உள்ள செல்ல..
சாம்பு சிவராமனை .. அன்போடு பார்த்தார்.. அவனுக்கு இதில் விருப்பம் இல்லனு முன்னமே சொல்லிவிட்டான்…
சிவோ .. அரியனுர் அகிலாண்டேஸ்வரியம்மா நம்ம காயுவை அவா புள்ளையாண்டனுக்கு கேக்குறா டா சாம்பு சொல்லவும்..
நோக்கு.. பைத்தியமா பிடிச்சிருக்கு சாம்பு…
நம்ம குழந்தையை அவா கேட்ட உடனே சரினு சொல்லறதா.
அவா எல்லாம் பெரிய இடம் …. அவங்களுக்கு இல்லாத பொண்ணா ஏன் நம்ம ஆத்து பொண்ணா தேடி வந்து கேக்குறா..
இதுல ஏதோ ஒன்னு இருக்கு நேக்கு என்னமோ தப்பா படுது சாம்பு…
எவளோ எடுத்து சொல்லியும் சாம்பு ஏதோ ஒரு பிடிவாதத்தோட…
இது என் பொண்ணோட சம்பந்த பட்டது சிவோ… யாரும் தலையிட வேணாம் னு பட்டுனு சொல்ல… சிவா அதிர்ந்து போனார்…
அதன் பிறகு சாம்பு எது சொன்னாலும் சரி சரினு தலையை மட்டும் ஆட்டினார் மறுப்பேதும் சொல்லாமல்… சாம்புவுக்கும் வருத்தமா தான் இருந்தது …. என்ன பண்ணுறது இது என் கையில் இல்லையே எல்லாம் அவா பிராப்தம்… பகவான் மேல் பாரத்தை போட்டுண்டு நடக்கறதை மட்டும் வேடிக்கை பார்க்க தயாராகினார்…
நண்பனின் பார்வையை உணர்ந்து தோளில் தட்டிண்டே என் முகத்தையே எம்புட்டு நாழிதான் பாக்கிறதா உத்தேசம்…
சாம்பு வந்தவா எல்லாம் வாசலையே நிக்குறா…பாரு அவாளை உள்ளரா கூப்பிடு..
வாங்கோ.. வாங்கோ னு .. இருவரும் அழைத்து கொண்டே உள்ளே செல்ல.. அகிலாண்டஸ்வரி மிடுக்கான நடையோட உள்ளே சென்றாள்….
அவர்கள் உள்ளே நுழைந்துதும்….
காயத்திரியின் முகம் செவ்வானமாய் சிவந்து ஒர் வேட்டையாட காத்திருக்கும் சிங்கத்தை போல் உறுமலோடு..காத்துஇருந்தாள்.. .
சாம்பு உட்காருங்கோ..னு சொல்ல..
எல்லாரும்.. சுத்தி சுத்தி பார்க்கவும் ..
மறுபடியும் உட்காருங்கோனு சிவராமன் சொல்ல..
வேதலிங்கத்தின் அக்கா … சும்மா உக்காரு உக்காருனு சொன்ன எப்படி உக்கார்து..
ஒரு சோபா இல்ல சேர் இல்ல.. வாய் கிழிய உக்காரு உக்காருனு சொல்லவேண்டியது ஹுக்கும்.. தோள்லில் இடித்து கொள்ள..
சாம்புவுக்கு முகம் கூம்பி போனது…
சிவாராம் .. தான் அது வந்து ஜமுக்காளம் விரிச்சி இருக்கு கீழே அதுல தான் உக்கார சொன்னோம்…. மெதுவா சொல்ல…
என்னது கிழேயா உக்காறது… சுமித்ரா அம்மாவை முறைக்கவும் …
அகிலாண்டேஸ்வரி கண்ணால் அமைதியாய் இருக்கும் படி சொல்ல..
அனைவரும் அதிர்ந்தனர்…
ஹுக்கும்… கற்பகம் டேய் வேதா தம்பியோட காதை கடித்தாள்..
நாம லாம் கிழே உக்காரவோம் சரி இந்த பரம்பரை கோடிஸ்வரியும் அவ பெத்த தவபுதல்வன்னும் புதல்வியும் எப்படி கிழே உக்கறாருங்கனு பாக்கலாம் …
ஹ்ம் கரெக்ட்டா சொன்ன அக்கா…
எவளோ ஜம்பமா பேசும் இந்த கிழவியும் இது பெத்த பொண்ணும் … இப்போ பாத்தியா நம்ம கூட சரிசமமா உக்கார போதுங்க…. அந்த கண்கொள்ளா காட்சியை தான் பாக்கணும்….
அகிலாண்டஸ்வரியும் சுமித்ராதேவியும் எப்படி உக்கார போறாங்கன்னு ஆவலோடு பார்த்து கொண்டு இருக்க..
அகிலாண்டேஸ்வரி சுத்தி பார்வையை ஓட்டினார்.
தாழ்வாரத்தில் ஊஞ்சல் இருக்கவும் மிதப்போடு மகளை பார்த்துட்டு அதில் போய் உக்காந்து கொள்ளவும் சுமித்ராவும் பார்த்திபனும் அம்மாவோட அமர்ந்து மிதப்போட பார்க்கவும் …
கீழே உக்காந்து இருந்த அனைவர் முகமும் விழுந்து விட்டது..
அகிலாண்டஸ்வரி சாம்புவை ஓர் பார்வை பார்க்க..
அதில் புரிந்து கொண்டு ஜானகியை பார்த்து காயுவை அழைச்சுண்டு வா னு பயத்தோட சொல்லவும்…
ஹ்ம் சரிங்கோனா.. ஜானகி வாசுவை கூப்பிட்டுட்டு காயுவை அழைத்து வர சென்றாள்..
காயு.. காயு கதவைதட்டவும் கதவை திறந்து காயத்திரி வெளியே வந்தாள்… காயத்திரியை பார்த்ததும் ஜானகி என் பொண்ணு எம்புட்டு அழகா இருக்கா கோவில்ல செய்ஞ்சு வச்ச தங்க சிலை போலல்ல இருக்கா என் கண்ணே பட்டுடுத்து… அவா எல்லாம் போட்டும் .. நோக்கு சுத்தி போடணும்… சரி சரி நாழியாகிறது போங்கோ போங்கோ கூட்டிண்டு போடி வாசு..
ஹ்ம் மாமி..
வா காயு அவா எல்லாம் உன்ன பாக்கணும்னு கூப்பிட்றா வா.. வாசு கைப்பிடித்து முட்டத்துக்கு கூட்டிண்டு வந்தாள்…
தலை குனிந்த படியே நடுவில் வந்தமர்ந்தாள்… குனிந்த தலை குனிந்த படியே இருக்க…
கற்பகம்… தான் கேட்டாள் என்ன பொண்ணு குனிஞ்சே இருக்கா.. நிமிர்ந்து பாத்தா குறைஞ்சா போய்டுவ… பாருடியம்மா எங்களலாம் பாத்தா உனக்கு மனுஷங்களா தெரிலயா.. பட படவென பொறியவும்…
ஷ் ஷு.. கற்பகம் … அகிலாண்டேஸ்வரி குரல் கொடுத்ததும்..
கப் சிப் னு வாயை மூடிக்கொண்டாள்…
அகிலாண்டேஸ்வரியின் கம்பிரகுரலால் நிமிர்ந்து பார்த்தாள்.. காயத்திரி… அவளின் பார்வையின் தீட்சண்யம்… கண்டு அகிலாண்டேஸ்வரி உள் பட அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்….
ஆத்மாவின் பயணம் தொடர போகிறது இனி…..