உயிர் தேடும் ஓர் ஆத்மா! பகுதி-1.

0
567

****உயிர் தேடும் ஓர் ஆத்மா… என் இரண்டாவது நாவல் படிச்சி உங்க கருத்துக்களை சொல்லுங்கள்…
***


எங்கும் குமிருட்டு.. சுடுகாட்டின் நடு பகுதி. ஆள் அரவமே இல்லை.
நள்ளிரவு நேரம்.
தூரத்தில் ஒரு சிதை பாதி எரிந்து
புகை மூட்டமாக இருந்தது. ஊ…ஊஊ…ஊஊஊ….ஊஊஊஊ…
நரிகளின் ஊளை சத்தம் மற்றும் ஆந்தைகள் அலறல் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது.

சரக்.. சரக்…. நடந்து வரும் காலடியோசை..
முனியா.. நான் சொன்னதுலாம் எடுத்து வச்சுட்டியா…

அதெல்லாம் எடுத்து வச்சுட்டேன் ஐயா…

ஹ்ம்ம்…
எதுவும் மறந்திராத முனியா … இப்போ நாம செய்ய போறது ஆபத்தான காரியம். இதுல சின்னதா ஒரு தப்பு நடந்தாலும் நம்மலையே திரும்ப அடிச்சிரும் பாத்துக்க.
அதான் ஒரு தடவைக்கு பல தடவ கேக்குறேன், நல்லா பாரு … எல்லாம் ஒழுங்கா இருக்கானு… ரிஷிபன் உத்தரவு போட…

எல்லாமே சரியா இருக்குங்க ஐயா..
சரி பாத்துட்டேன் என முனியன் கூறினான்.

ஹ்ம்ம் சரி.

ஓம் திரிபுத்தரா தேவி….இரத்த காட்டேரி…. சாமுண்டீஸ்வரி தேவி….

ரிஷிபன்.. ஒரு எம் டெக். முதுநிலை பட்டதாரி. உலகிலேயே மிக பெரிய கோடீஸ்வரன் ஆகணும் என்ற பேராசை கொண்டவன். அதற்கு என்னலாம் குறுக்கு வழி இருக்கு என தேடும் போது தான் மாந்திரிகம் பற்றி கேள்வி பட்டான்.
மாந்தரீகத்தால் எதையும் சாதிக்கலாம் என அறிந்து கொண்டான்.

மாந்த்ரீகம் சம்பந்த பட்ட நூல்களை கண்டறிந்து படித்து கரைத்து குடித்தான்.
படித்ததோடு விட்டு விடாமல் மாந்திரிக செயல் முறைகளையும் நடைமுறை படுத்தி பழக ஆரம்பித்தான்.

ஆடு.. கோழி.. மாடு..என வரிசையாய் பலி கொடுக்க முதலில் தயங்கினாலும் போக போக அதையே பழகி கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்து இன்று மாந்த்ரீகத்தில் நன்றாக தேர்ச்சியும் பெற்று விட்டான்.

ரிஷிபனின் வித்யாசமான பழக்கவழக்கம் செயல்களை கண்டு பயந்து போன கல்லூரி தோழர்கள் அனைவரும் அவனை விட்டு விலக ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில் ரிஷபன் தனிமைப் படுத்தப்பட சுடுகாடு அருகிலேயே தன் நிரந்தர குடியிருப்பை அமைத்து கொண்டான்.

காளியின் சிலைக்கு பூஜை போட்டு மாயம் மந்திரங்களை நன்கு வசியம் செய்து .. பல சக்திகள் கிடைக்க பெற்றான்.

குடும்ப கஷ்டம் என்று வரும் நபர்களுக்கு நள்ளிரவு பூஜை செய்து வைத்தும், பரிகாரங்கள் கூறியும் வந்தான். பலரும் அவனால் பயன் அடைய பொது மக்கள் பணம், நகை என கொட்ட ஆரம்பித்தனர்.
பண மழையில் நனைய ஆரம்பித்தான் ரிஷிபன்.

போக்கிடம் எதுவுமின்றி சுற்றி திரிந்து கொண்டிருந்த முனியனை தன் வேலைக்கு துணையாக வைத்து கொண்டான்.

பேய்களோடவே வாழ்ந்து சுடுகாடே இவனது பிறப்பிடமாய் அமைத்து கொண்டாலும்.
, பணம் கூரையை பிய்த்து கொண்டு கொட்டினாலும், அவன் மனது வெற்றிடமாவே இருந்தது.

ஆசைக்கு அளவு ஏதுமில்லையே. அவன் ஆசையும் அடங்கவில்லை நீண்டு கொண்டே போனது.

மரணமில்லா வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசை வந்தது. அதை எப்படி அடைய முடியும் என தேடலை தொடங்கினான்.

அப்போது தான்…
கிருஷ்ணன் குட்டி என்பவர் மாந்த்ரீக மந்திரவாதி. மாந்த்ரீகத்தில் பல வருட தேர்ச்சி பெற்றவர். தற்பொழுது வயது முதிர்வு காரணமாக மாந்த்ரீகம் விட்டு விலகி ஓய்வில் இருக்கிறார்.

கேரள மாநிலம் பாலகாட்டில் மாந்த்ரீக ஆச்சாரியார் கிருஷ்ணன் குட்டி குடியிருக்கும் குடிலுக்கு சென்று அவரை சந்தித்து தன்னுடைய எண்ணங்களை கூறினான் ரிஷிபன்.

அவனின் ஆசை .. அளவை புரிந்து கொண்டாலும்
ரிஷிபனுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் மந்த்ரம் சொல்லித்தந்து விடவில்லை
எதையும் சீக்ரம் கிடைத்திட்டாள் அதற்கு மதிப்பேது.. பாலகா.. மென்மையாய் சிரித்தார்..

நான் நினைத்து அடையனும்
அதற்கு என்ன செய்ய வேண்டும் என வினாவினான்.

ரிஷிபனின் தீவிரமான ஆசையை அறிந்து கொண்ட ஆச்சாரியார் நான் குடுக்கும் பரிட்சையில் தேர்ச்சி ஆகட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம்
அதற்காக கடுமையான வழிமுறைகளை செயல் படுத்தவும் செய்தார்..

அவனின் அதிகபடியான ஆர்வத்தை கண்ட கிருஷ்ணன் குட்டி சந்தோசம் அடைந்தார் தனக்கு பிறகு மாந்திரீகத்தில் இவன் கொடி கட்டி பறப்பானு நம்பிக்கை ஏற்பட.. அவர்க்கு தெரிந்த அணைத்து மந்திரங்களும் சொல்லி குடுத்தார்… அனைத்தயும் ஆர்வமாய் கற்றுகொண்டான் ..

அவன் கேட்ட மந்திரங்களும் சொல்லியும் கொடுத்தார்
அம்மாவாசை அம்மாவாசை அன்று தவறாமல் தலைச்சன் குழந்தையை பலி கொடுக்க வேண்டும். இதுபோல 108 தலைச்சன் குழந்தை பலி கொடுத்தா நீ நினைச்சபடி சிரஞ்சீவியாக வாழலாம் என்றும் இளைமையோடவே காலத்தை கழிக்கலாம், நினைச்ச உருவம் மாறலாம் என்றும் கூறினார்.

அதுவும் இந்த பலி பூஜையை ஒரு மண்டலத்துக்குள் செஞ்சு முடித்தால் தான் பலன் கிட்டும்.

முக்கியமாக இந்த பலி பூஜையில் சிறிது தவறு நேர்ந்தாலும் உன் உயிருக்கே ஆபத்து ஏற்படநேரிடும் பாலகா என எச்சரித்தார்.

அனைத்தையும் கேட்டு கொண்ட ரிஷபன் ஆச்சாரியார் கிருஷ்ணன் குட்டியிடம் ஆசி பெற்று கொண்டு தன் இருப்பிடம் வந்து சேர்ந்தான்.

சுடுகாட்டில் ஒவ்வொரு அம்மாவாசை நள்ளிரவில் காளிக்கு பலி பூஜையை செய்து கொண்டிருக்கிறான் ரிஷிபன்.

ரிஷிபன் அந்த பூஜைக்காக தான் இப்பவும் பால் மனம் மாறாத ஒரு பச்சிளம் குழந்தையை பலி கொடுக்க சுடுகாடு வந்து இருக்கிறான்..

காளி சிலை முன் கட்டங்கள் வரைந்து வாய் மந்திரம் முனுமுனுக்க…..

ஓம்.. காளி சூளி மகமாயி…. சாமுண்டீஸ்வரி….இரத்த காட்டேரி…. ஓம் கைம் பைம் ….சட்…சட்….. மந்திரத்தை ஓதியபடியே,
சட்டென கண் திறந்தவன் ரத்தம் சிவப்பேறிய கண்களால் முனியனை பார்த்து அதில் குழந்தையை படுக்க வைக்க சொன்னான்…

ரிஷிபன் .. சொன்னதை முனியன் செய்ய

ரிஷிபன் யாகம் தொடங்கினான்… யாகம் முடிந்ததும் எழுந்து வந்த ரிஷிபன் குழந்தை அருகில் சென்றான்…

கையும் காலையும் ஆட்டிக்கொண்டு சிரித்து கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தையை கண் இமைக்கும் நேரத்தில் ரெண்டு துண்டாக வெட்டினான் அதில் பெருகிய குருதியால் காளி தேவிக்கு அபிஷேகம் செய்தான்…

அவனின் படையலை காளி ஆனந்தமாய் ஏற்றுக் கொண்டாள்…

காளி தேவி … ஹா ஹாஹா ஆனந்தம் ஆனந்தம் அசரிரி ஒலித்ததில் அந்த இடமே அதிர்ந்தது.

தாயே என்னுடைய 105 வது படையலை ஏற்று கொண்டதற்க்கு நன்றி தாயே….,,
இரு கை கூப்பி வணங்கினான்.

நலம் உண்டாகட்டும் மகனே .. அசரிரி கூறவும்…

நன்றி தாயே…. கும்பிட்டான்..

அசரிரி மறைந்தது ரிஷிபன் சந்தோசமாய் .. கிளம்பினான்…..
முனியனும் கூட…

எல்லாம் முடிந்து ..ரிஷபனும் முனியனும் வந்து கொண்டிருக்க ….அவர்கள் பின்னால் ஓர் உருவம் வந்து கொண்டிருந்தது…

முனியா கொஞ்சம் நில்லு..

என்னங்க ஐயா..

முகம் பாக்குற கண்ணாடியை எடு..

என்ன..? இந்த நேரத்துல கண்ணாடியா.. ரிஷிபனை விசித்திரமாய் பார்த்தான்..

என்னடா என் மூஞ்சியே பார்த்துட்டு இருக்க எடு.. சீக்கிரம்..

ஹ்ம்… இந்தாங்க ஐயா.. பைக்குள் இருக்கும் கண்ணாடியை எடுத்து கொடுக்க..

ரிஷபன் கண்ணாடியை முகத்துக்கு நேர கொண்டு வந்து தலையை மட்டும் பக்கவாட்டில் அசைக்க பின்னாடி நிற்கும் உருவத்தை கண்டான்…
தலைமுடி மூடிய முகம் சிறு பாதி வெளியில் தெரிந்தது.. அக்கருவிழியின் கொடூரம் கண்டான் ரிஷிபன்…

அப்படி என்னத்த பாக்குறாரு … முனியன் எட்டி பார்க்க .. அவன் கண்ணுக்கு ஒன்னும் தெரியவில்லை. … ரிஷபனை பார்க்க … அவன் கண்மூடி ஏதோ மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தான்…..

என்னடா.. இது இந்த நேரத்துல நடுதெருவுல நின்னு ஏதோ மந்திரம் பன்னிட்டு இருக்காரே… மந்திரம் சொல்லும் ரிஷபன் முகத்தை பார்த்ததும் முனியனுக்கு முதுகு தண்டில் ஜிலிட்டது..
ரிஷிபன் ….மந்திரம் சொல்ல… உக்கிரமாய் பார்த்து கொண்டிருந்த அந்த உருவம் மறைநதது.

முனியனிடம் திரும்பி .. இந்த ஊர் கோவில் குருக்கள் வீடு எது வீட்ல யார் யார் இருகாங்கனு நாளைக்கு விசாரித்து சொல்லு முனியா..

ஐயா குருக்கள் பத்தி எதுக்கு…? விசாரிக்கணும்..

ரிஷிபன் ..சொன்னதை செய்.. என்று முறைக்கவும்…

ஹ்ம்ம் சரிங்க ஐயா… பயத்தில் வாய் குலறியபடியே சொன்னான்..

காற்றோடு காற்றாக கலந்து சிரிப்பொலி கேட்டது . ஹாஹாஹா …. என்ன கண்டு பிடிச்சு என்னடா பண்ண போற … யாரை காப்பாத்த போற… ஹாஹா… உன்னால முடியாது….. டா .. உக்கிரத்தோட பேசியது.

நீ என்ன வேலையா வந்தியோ அத மட்டும் பார்.. இல்ல உன் உயிர் உனக்கு தங்காது… உக்கிரத்தோட சொல்லியபடி ஹாஹா.. ஆங்காரமாய் சிரித்தது..

அந்த… உக்கிரமான கர்ஜனையில் ரிஷிபனே மிரண்டு தான் போனான்….

ஆத்தமாவின் தேடல்… தொடரும்………FB_IMG_1554785705696|400x300

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here