சில கதைகள் கேட்க கேட்க இனிமையா இருக்கும்.சில கதைகள் மட்டும் தான் இதயத்திலேயே இருந்துரும்.அப்படியோரு கதை தான் இது.
அவன் பேரு கிருஷ்ணா .அவ பேரு சத்யா.இரண்டு பேரும் ஒரே காலேஜ்ல ஒரே கிளாஸ்மேட்ஸ்.இரண்டு பேரும் லவ்வர்ஸ்.காலேஜ்ல அது கடைசி வருஷம்.செமஸ்டர் டைம்ல அவுங்க ப்ரண்ட்ஸ் கூட டூர் போயிட்டு வந்துட்டு இருந்தாங்க .அப்ப எதிர்பாராத விதமாக ஒரு ஆக்சிடென்ட் ஆகி பஸ்ல போன எல்லோரும் அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தாங்க .
சத்யா கண் முழிக்கும் போது அவளோட அம்மா அப்பா கூட இருந்தாங்க .மெதுவா கண் முழிச்ச அவ அவன பத்தி தான் கேட்டா அதற்கு அவுங்க அப்பா “யாருக்கும் பெரிய அடிபடல சத்யா.எல்லோரும் டிஸ்சார்ஜ் ஆகி போய்ட்டாங்க .ஒரேயொரு பையன் மட்டும் கோமால இருக்கான் அவ்ளோ தான்.அடுத்த கேள்வி அந்த பையன் யாரு?என்பது தான் அவளோட அப்பாவுக்கு தெரியல .அவளால் நிம்மதியாக இருக்க முடியல .அவுங்க அப்பாகிட்ட சொல்லி விசாரிச்சுட்டு வர சொல்லி அழுதாள் .அவரும் விசாரிச்சுட்டு வந்து கிருஷ்ணா என்று சொன்னதும் அவள் கதறலில் ஆஸ்பத்திரியின் அமைதி கலைந்தது .தன்னுடைய காயங்களை பொருட்படுத்தாமல் அவனை பார்க்க சென்றாள் .ico வார்டில் இருந்த அவனின் கைகளை பிடித்து தன் கண்ணீரில் நனைத்தாள்.அவள் உடல்நிலை தேறியும் கூட அவன் கண்முழிக்கவில்லை.அவள் டாக்டரிடம் பேசினாள் .டாக்டரிடம் “அவனுக்கு என்னாச்சு டாக்டர் ?என்றதும் அவர் இவளிடம் “தலையில அடி பலமா பட்டிருக்கு.மூளை செயல்படும் பகுதிகள் ரோம்ப சேதம் ஆகிருச்சு .இப்ப ஆபரேஷன் பண்ணுனா அவன் மூளை தாங்காது.இன்னும் ஒரு வருஷம் தொடர்ந்து மருந்து மூலமா அவன் மூளைய சரி பண்ணி அப்புறம் தான் ஆப்ரேஷன் பண்ணனும் .நிறைய செலவு ஆகும் .”என்றார் .
கிருஷ்ணாவுக்கு அம்மா அப்பா இல்ல.ஒரேயொரு தங்கச்சி மட்டும் தான்.அவளும் இப்ப தான் ஸ்கூல் படிச்சிட்டு இருக்கா.கிருஷ்ணா பார்ட் டைம் வேலைப்பாத்து தான் தங்கச்சிய கவனிக்கிறான்.கிருஷ்ணாவோட ப்ரண்ட்ஸ் மற்றும் டீச்சர்ஸ் ரோம்ப உதவி பண்றாங்க .கிருஷ்ணாவுக்கு இதுவரைக்கும் ஆனா ஆஸ்பத்திரி செலவு எல்லாம் அவுங்க தான் பாக்குறாங்க .
கொஞ்ச நாள் ஆக ஆக ப்ரண்ட்ஸ் வர்றது குறஞ்சது.டீச்சர்ஸ் வர்றதும் இல்ல .அவுங்க நிலைமை சத்யாவுக்கு புரிஞ்சது .உதவியும் ஒரு அளவுக்கு மேல எப்படி பண்ண முடியும் ?ஒரு நாள் டாக்டர் சத்யாவ வர சொல்லி ” இதுக்கும் மேல எங்களால இங்க வச்சு பாக்க முடியாது .ஆஸ்பத்திரி md ஒத்துக்க மாட்டார் .நிறைய பணம் செலவாகும்னு சொன்னேன்ல” என்றதும் சத்யா மெளனமாக வெளியேறினாள் .கிருஷ்ணாவின் தங்கச்சி என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டு இருந்தாள் .
சத்யாவின் பெற்றோர் அவளை தங்களுடன் வரும்படி வற்புறுத்தினர்.அவர்களுக்கு தங்கள் மகளின் எதிர்காலம் பற்றிய பயம் வந்திருக்கும் .ஆனால் அவள் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டாள்.மறுநாள் காலை கிருஷ்ணாவின் நிலையை எண்ணி அழுதுக்கொண்டே இருந்தாள் .அப்போது அவள் அருகே ஒரு பெண் வந்து அமர்ந்தாள் .அவள் இவளின் கண்களை பார்த்து”கொஞ்ச நாளா நான் உன்ன பாத்துட்டு தான் இருக்கேன் .உனக்கு நான் உதவி பண்றேன் .பதிலுக்கு நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும் .”என்றதும் சத்யா அவளை நம்பிக்கையுடன் பார்த்ததும் “எனக்கு கல்யாணம் ஆனாதில் இருந்து குழந்தை இல்ல .நீ பிறக்க வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டாங்க .அதனால எங்க குழந்தைய நீ பெத்து தரணும் .உன் லவ்வர்க்கு எவ்வளவு செலவானாலும் நாங்க பாத்துக்கறோம்.குழந்தை பொறந்ததும் ஆபரேஷன்க்கு தேவையான மொத்த பணத்தையும் கட்டிருவோம்.நல்லா யோசிச்சு பதில் சொல்லு”என்றாள்.சத்யா யோசிக்கவே இல்லை.இதற்கு சம்மதம் என்றாள் .திருமணமே ஆகாதவள் கர்ப்பம் சுமந்தாள் .யார் கருவை சுமக்கிறோம் என்று கூட தெரியாமல் .அவளை எல்லோரும் வெறுத்து ஒதுக்கினார்கள்.அவள் அம்மா அப்பா நண்பர்கள் அனைவரும் .பத்து மாதத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது .மயக்கம் தெளிந்து கண் விழிக்கும் போது அருகில் குழந்தை இல்லை.இத்தனை நாள் தான் மடி சுமந்த தன்னை கருவில் எட்டி உதைத்த தன்னோடு மட்டுமே பேசி கொண்டு இருந்த ஒரு உயிர் இல்லை.அதன் அழுகை இல்லை.சிரிப்பும் இல்லை.தேங்கிய தாய்ப்பால் தாய்மையை வலியை உணர்த்தி கொண்டு இருக்கிறது .உதவிக்கும் ஆளில்லை.ஆறுதலுக்கும் ஆள் இல்லை.வழிந்தோடும் கண்ணீர் தடுப்புகள் இல்லாமல் பாய்ந்தோடியது.வாடகை தாய் இந்த சமுதாயத்தில் அவ்வளவு மோசஆனவளா ?இந்த சமூகத்தில் .
கிருஷ்ணாக்கு ஆபரேஷன் முடிஞ்சது .ஆனா அவனுக்கு அவன யார்னு புரிஞ்சுக்கவே மூணு மாசம் ஆகுமாம்.அன்னைக்கு அவனுக்கு டிஸ்சார்ஜ் .அவன் தங்கச்சிய தனியா கூட்டிட்டு வந்து “உன் அண்ணன பத்திரமா பாத்துக்க.அவனுக்கு என்ன இப்ப தெரியாது .அவனுக்கு என்ன பத்தி எதுவும் தெரிய வேணாம் .நான் சுமக்குற சிலுவைகள் அவனுக்கு வேணாம் .இனி அவன் சந்தோசமாய் வாழனும் .என்ன பத்தி ஞாபகம் வந்து கேட்டான்னா நான் ஆஸ்பத்திரியில இருந்து நல்லானதும் போய்ட்டேனு சொல்லிரு “என்று தன் கையில் இருந்த பணத்தை அவள் கையில் திணித்து புறப்பட்டாள் .
கிருஷ்ணா தனது தங்கையின் தோள்களை பற்றி மெதுவாக நடந்து ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறும் போது வாசலில் அவனை கடைசியாய் ஒரு முறை பாத்துவிட்டு செல்ல சத்யா காத்திருந்தாள் .அவனை பார்த்ததும் கண்னை விட்டு விலகும் கண்ணீரை சிறைப்பிடித்திருந்தாள்.தன்னையே உணராதவன் அவளை கடந்தான்.ஆனால் அவளை கடந்த சில வினாடிகளில் நின்று அவளை திரும்பி பார்த்தான் .அந்த முகம் அவனை தடுத்தது .அவனது தயக்கத்தில் அவளது கண்ணீர் குளமானது.அவன் அவள் அருகில் வந்து அவளேயே பார்த்து கொண்டு இருந்தவன் பேசிய ஒரே வார்த்தை “சத்யா “.இனி அவளால் அவளை கட்டி போட முடியாமல் கட்டியணைத்தாள்.இரண்டு இதயங்களும் காதலால் பிணைந்துகிடக்கிறது.உலகில் சில காதலிகள் மட்டும் தாய்க்கு ஈடாக மதிக்கப்படுகிறார்கள்.
[என் வாட்ஸ் அப் நம்பர் 9600532669]
நன்றி!வணக்கம் !நான் உங்கள் கதிரவன் !