அனு … வாடி வந்து சாப்பிடு .. இன்னும் எத்தனை நாளைக்கு தான் உன்னஏமாத்திட்டு போனவனை நினைத்து உன்னையே வருத்திக்க போற உனக்காக இல்லனாலும் உன்வயித்துல உள்ள ஜீவனுக்காக நீ உயிர் வாழ்ந்துதான் ஆகணும்டி..

ப்ளீஸ் கொஞ்சம் சாப்பிடு.. காலைலஇருந்தே உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்கேனே .. வாடி.. ப்ளீஸ் மயூ கெஞ்சிகொண்டிருந்தாள்…

அனு…. ஏதோ யோசனையில் சுழன்றவள்.. திடிர்னு மயூவை பார்த்து கேட்டாள்..
மயூ நா செத்து போய்ட்டா என்குழந்தையை எதுனா நல்லா காப்பகத்துல சேர்த்துடுறியா…

பயித்தியமாடி நீ அதெல்லாம் உனக்கு ஒன்னும் ஆகாது .. ஒழுங்கா வந்து சாப்பிடு .. எனக்கு வர கோவத்துல அடிச்சிடப்போறேன் …

இல்ல.. நீ சொல்லு அப்பதான் நான் சாப்பிடுவேன்.. முகத்தை திருப்பிக்கொள்ள…

அனு…. நீ தெரிஞ்சி பேசுறியா இல்லை தெரியாம பேசுறியா … அவ ஏண்டி யாரும் இல்லாத அனாதை மாதிரி காப்பகத்துக்கு போகணும் அவளுக்கு அம்மா நீ இருக்க அப்பானு ஒருத்தன் இருக்கான்.. எப்படியும் என் கண்ணுல படாம போகமாட்டான் … அவளுக்கு தாத்தா பாட்டி எல்லாரும் இருக்கும் போது ஏன் காப்பாகத்…….
போதும் நிறுத்து மயூ… கத்தினாள்
அனுவுக்கு எங்கிருந்து தான் இவ்ளோ கோவம் வந்தததோ.. என் குழந்தைக்கு யாரும் கிடையாது கேவலமான பிறவியலாம் என் குழந்தைக்கு அப்பாவ இருக்க தகுதி கிடையாது… என்ன ஒரு பொண்ண இல்ல ஒரு மனுஷியா கூட பாக்காத ஜென்மங்களை தாத்தா பாட்டி னு உறவு முறை சொல்லிறியா.. அனு அதிக படி கோவ பட மூச்சுவாங்கியது …சுருக் கென்று வலி ஏற்பட அடிவயிற்றில் கை அம்மாஆஆ…னு அலறினாள்…

மயூ… நல்லா தான பேசிட்டு இருந்தா. தீடிர்னு கத்துறாளே பயந்து போனாள்.. அனு.. அனு என்னடி என்ன ஆச்சி.. உள்ளே குரல் குடுத்தாள் … அம்மா அம்மா வாங்கமா அனு கத்துறாமா … அம்மா ..

மயூவோட அம்மா ஓடிவரவும் …ஐய்யோ வலிவந்துடுச்சு போல மயூ .. பக்கத்து வீட்டு சோமு அண்ணாவா வண்டி எடுத்து வர சொல்லு அனுவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் ஓடு சீக்கிரமா…

ஹ்ம்ம் சரி மா மயூ வெளியே ஓடினாள்..

அனு வலியால் துடிக்க… அம்மாஆஆ.. பல்லைகடித்து பொறுத்துகொண்டாள்.. ஆண்ட்டி உங்க…. கி..ட்ட ஒன்னு சொல்லணும்

என்ன மா … கொஞ்சம் பொறுத்துக்கோ மா ஹாஸ்பிடல் போய்டலாம்…

ஹம்ம்ம்ம்ம்ம்… ஆஆஆஆம்மா.. ஆண்ட்டி …. அடுத்த ஜென்மம்னு இரு.. ந்தா… நானும் .. உங்க மகளாவே பிறக்கணும்… ஆஆஆ…மா.. கண்கலங்கினாள்… கஷட பட்டு பேசினாள் நா ..பொறந்துல இருந்து அம்மாவை பார்… த்த..து இல்ல ஆண்ட்டி …. என… க்கு எல்லாம் மே என் அப்பா தான்…. அவர்கூட என்..ன வெறு.. த்துட்டாரு ஆண்ட்டி… கதறினால்… நா என்ன தப்பு பண்ணேன் .. எனக்கு ஏன் ஆண்ட்டி இந்த நிலைமை … அழுதாலும்…நா பொழைக்க மாட்டேன் ஆண்ட்டி …. என் குழந்தையும் நீங்க தான் பாத்துக்கணும் .. ம்மா… ஆஅ..

அப்படிலாம் பேசக்கூடாது அனுமா உனக்கு ஒன்னும் ஆகாது …. நீயும் உன் குழந்தையும் நல்லா படியா திரும்பி வருவீங்க … அம்மா சொல்லுறேன் ல அழக்கூடாது… கண்ணைதுடைத்து விட்டாள்..

மயூ ஆட்டோஓட்டும் சோமுவை கையோட கூட்டிட்டு வந்து அனுவ ஆட்டோவில் ஏத்திக்கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தனர்…

ஆட்டோவில் இருக்கும் வரை மயூ கையை விடாமல் இறுக்கமாய் பற்றிகொண்டாள் … அனு… மயூ என்ன விட்டு எங்கேயும் போகாதடி.. என்கூடவே இரு..

போல டி உன்கூட தான் இருப்பேன் … தைரியமா இரு டா…
ஆஆஆஆ… ம்ம்ம்ம் ம்மாஆ வலியோடவே இறுக்கமாய் பிடிச்சிகொண்டாள்…

ஹாஸ்பிடல் உள்ள நுழையும் வரை மயூகையை விடாமல் பிடிச்சிகொண்டே வந்தாள்..

எங்க விட்டா மறுபடியும் பாக்காமலே போய்டுவோமோனு ஒரு பயம்…இறுக்கி பிடிச்சிகொண்டாள்…

மயுவோட கை சிவந்து போனது…
ஆப்பரேஷன் தியேட்டர்குள்ள போகும் போது தான் டாக்டர்ஸ் லாம் கையை பிரித்து விட்டார்கள்.. அந்த அளவுக்கு இறுக்கமா பிடித்திருந்தால்..
கையை பிரிச்சி விடவும்
அனு ஏக்கமாய் மயூவையே பார்த்துகொண்டே போனாள்..
அவளின் ஏக்கமான பார்வை தான் மயூ கடைசியாய் பார்த்தது….. அதற்கு பிறகு . குழந்தை மட்டுமே அவள் கையில் கொண்டுவந்து குடுத்தார்கள் … எல்லாம் காரியமும் முடிஞ்சி மயூ குழந்தையோட ஊருக்குள்ள வரவும்..

அக்கம் பக்கம் எல்லாம் ஏளனம்மா பேசினர்..
ஜானுவோட பிறப்பை பத்தி அவதூறா பேச
தாங்கிக்க முடியாமல் .சென்னைகே குடி வந்து விட்டனர்… .

இங்கே வேலை தேடியவள் கிடைத்ததும்…இங்கே வந்து குடியேறிவிட்டனர்…

மயூ முகிலன் நினைத்த இரவில் கண்ணீரோட காலம் தள்ளினாள்…முகில் என்ன மறந்துட்டீங்களா உங்களை நினைக்காத நாளே இல்லை முகில் நீங்க மறந்தாலும் நான் உங்க நினைவோடவே வாழ்ந்துடுவேன்….

ஜானு மட்டும் இல்லனா நா எப்போவோ இந்த உலகத்தை விட்டு போயிருப்பேன்…

மறுபடியும் முகிலனை பார்ப்போம் னு கனவில் நெனைச்சி கூட பாக்கலையே.. அதுவும் இதே பிளாட் ல….. கதறி கொண்டிருந்தாள் இப்பவும் என்மேல கோவமா தான் இருக்கீங்களா முகில் … மூடிய கதவில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்…

அங்கே முகிலன் நிலைமையோ… கூண்டில் சிக்கிய புலி போல் அங்கே இங்கே னு கோவத்தில் நடந்து கொண்டிருந்தான்… என்ன பத்தி யோசிச்சு பார்கவே இல்லைல …. திமிரு டி உனக்கு ..என்ன எவளோ ஈஸியா தூக்கி போட்டுட்டா அவனால் இயல்பாய் இருக்கமுடியாமல்…. கூண்டில் அடைபட்ட சிங்கம் போல உலாவி கொண்டிருந்தான்… இல்லை அவளை இதுக்கு அப்றம் சும்மா விட கூடாது …. கோவத்தோட வெளியே வந்தவன் … நேர மயூ இருக்கும் போர்ஷனுக்கு சென்றான்…

முகிலன் வேகமாய் வெளியே வரவும் என்னமோ ஏதோ னு பயந்த பார்வதி… என்னடா முகில் ஏன்டா ஒரு மாதிரி இருக்க… கேட்டுட்டே இருக்கும் போதே … அவர் பேசியது காதில் வாங்காமல் முகிலன் வெளிய போகவும் பின்னாடியே ஓடினார்….

டேய் முகில் நில்லு டா கூப்பிட கூப்பிட மயூ ரூம் கதவை கோவத்தில் தட்டிகொண்டே இருந்தான்…

டேய் முகில் என்ன ஆச்சு உனக்கு ….. இங்க வந்து எதுக்கு கதவைதட்டுற …..வாடா … முகில் பார்வதி அதட்டவும் …அதை எதையும் காதில் வாங்காதவன் போல தட்டிட்டே இருந்தான் …
மயூ … கதவை திறக்கவும் … புயல் போல உள்ளே சென்று கதவை அடைத்து சாத்தினான்…

மயூ .. முகிலன்கதவை அடைத்த வேகமும் முகத்தை பார்த்தும் பயந்து ஓர் அடி பின்வாங்கினாள்…

பார்வதியோ முகிலன் நடந்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியோட நின்றுந்தால்…

முகிலன் மயூவிடம் கோவத்தோட நெருங்கினான்…

வேணாம் முகில் …. வெளியே போங்க … போங்க முகில் பயத்தில்முகம் வெளிறியவள் பின்னாடியே சென்றாள்..

ஒவ்வொரு அடியும் மயூபின்னாடி போக முகிலன் முன்னாடி சென்றான்..பின்னாடியே சென்றவள் சுவத்தில் முட்டி நிற்க்கவும்…

அவள் முகம் நோக்கி குனிந்தான்…..மயூ தடுத்தும் இதழ்லோட இதழ் பொறுத்தினான்.. அவனின் எதிர் பாரத முத்தத்தால் அவளின் பெண்மைசிலிர்த்தது … மனம் தடுக்க நினைத்தாலும் உடலோ அவனோட ஒன்ற நினைத்தது

தன்னை அறியாமலே அவன் இடையோட கைகொடுத்து இறுகிக்கொண்டாள்… அவளின் ஒப்புதல் முகிலனிடம் ஏதோ ரசாயன மாற்றம் வந்தது..

அவளை அப்படியே அலேக்கா அள்ளியவன் கட்டிலில் கிடத்தியவன் அவள் மேல் சரிந்தான்…

அவனின் ஆக் கோரக்ஷமான ஆக்கிரமப்பில் மயூ..துவண்டு போனாள்…

அவனிடம் தன் பெண்மையை இழந்துகொண்டிருக்கிறோம்னு உள் உணர்வு சொல்ல… விலக ஆரம்பித்தாள்….. இது வரை அமைதியாய் ஒப்புகொடுத்தவள் திடிர்னு முரண்டுபிடிக்கவும் அவனின் வேகம் எல்லையை மீறி போகவும் ..

அவள் சுயஉணர்வு பெற… பலகொண்டுமட்டும் பிடித்து தள்ளினாள்..அவன் எழுந்து வரதுக்குள்ள வெளியே ஓடி வந்து கதவை திறந்தவள் … பார்வதி நிற்க்கவும் அதிர்ச்சியோட நின்றாள்….

பின்னாடியே மயூவை துரத்திகொண்டே வந்த முகிலன் பார்வதியை பார்த்ததும் … அதிர்ச்சியோட அவனும் நின்று விட…

பார்வதி ரெண்டுபேரையும் ஆராய்ந்தாள்.. மயூவோட டிரஸ் எல்லாம் கிழிஞ்சி முகம் எல்லாம் கன்னி சிவந்து போயிருப்பதை கண்டதும் ….

முகிலனை முறைத்து பார்த்தாள்…

முகிலன் அம்மாவின் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்து கொண்டான்…

பளார்னு அறைந்தாள்

முகிலன் கன்னத்தில் கை வைத்து கொண்டே அம்மாவை அதிர்ச்சியோட பார்த்தான்…

மயுவும் முகிலனை அறைவாங்க நினைத்து பார்க்காததால் அவளும் பார்வதியே பார்த்துகொண்டு இருந்தாள்…

என்னடா நினைச்சிட்டு இருக்க நீ..

உள்ள வாங்க ரெண்டு பேரும்..
சொல்லிய பார்வதி உள்ளே போகவும்

பின்னாடியே இருவரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து கொண்டே உள்ளே சென்றார்கள்…மயூ ஓடிவந்து பார்வதி காலில் விழ…

முகிலன் அமைதியாய் நின்று கொண்டிருந்தான்..

காலவிழுந்தவளை தூக்கிய பார்வதி… நீ எதுக்கு மா என் கால்ல லாம் விழுந்துகிட்டு தப்பு பண்ணது என் பையன் தான நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்…

அம்மா முகிலன் வாய் திறந்து சொல்ல வர… நீ எதுவும் பேசாத உன்கிட்ட பேச எனக்கு பிடிக்கல முகில்… ச்சே என் பையன் னா இப்படி நடந்துக்கிட்டான்.. நினைச்சாலே எனக்கு அசிங்கமா இருக்கு…. கோவத்தோட சொல்லவும்..

அம்மா…?? அதிர்ந்தான்..

பார்வதி பேச பேச முகிலன்… உடைந்து போனான்… முகிலன் அம்மானு கண்கலங்கி நிற்பதை பார்தததும்…..

மயூரியால் தாங்கிக்க முடியாமல்… அம்மா…. தப்பு அவர் மேல இல்ல மா எல்லாம் தப்பும் என் மேல தான் என்ன மன்னிச்சிடுங்க மா கால்லவிழுந்து கதறினாள்…

முகிலன் பல்லை கடித்துக்கொண்டு நிற்க்கவும்..

பார்வதி மயூசொல்லுறதை நம்பாமல் பார்த்தாள்… என்ன சொல்லுற தப்பு எல்லாம் உன்மேலேய..

ஆமாம் மா… மயூ சொல்ல வரும் போது..

வேணாம் எதுவும் சொல்லாத…மயூ பார்த்து சொல்லியவன் அம்மாவிடம் திரும்பி நான் பண்ணது தப்பு தான் மா அதுக்கு நீங்க என்ன தண்டனை குடுத்தாலும் ஏத்துக்கிறேன்… அமைதியாய் நிற்க..

பார்வதி இருவரையும் பார்த்து நா குடுக்குற தண்டனையை நீங்க ரெண்டு பேரும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும் சரியா..

ஹ்ம்ம் இருவரும் ஒன்றாக தலையை ஆட்டவும்…

உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவைக்க போறேன்.. இது தான் நா உங்களுக்கு குடுக்குற தண்டனை.. சரியா..

ஆ… ஹ ன் வாய் பிளந்தார்கள் இருவரும்…

ஹாஹா… என்ன திரு திரு னு முழிக்கிறிங்க.. என்னடா திட்டுவா வெளியேபோனு சொல்லுவானு… பார்த்தா கல்யாணம் னு சொல்லுறாளே னு அதிர்ச்சி யா இருக்க உங்க ரெண்டு பேருக்கும்..

மயூரி எனக்கு உன்ன முன்னமே தெரியும்
உன் போட்டோ முகிலன் டைரி ல இருந்தது … வீடு மாத்தி இங்க வந்து எல்லாம் எடுத்து வைக்கும் போது தான் உன் போட்டோ கீழே விழுந்துதது … எங்க இருந்து விழுந்தது னு பார்த்தா டைரி முழுக்க உன்ன பத்தி தான் எழுதி வச்சி இருக்கான் உன் போட்டோ நெறைய எடுத்து வச்சி இருக்கான்… அப்பவே எனக்கு சந்தேகம் வந்தது
சரி உன்ன நான் இங்க குடிவந்த மறுநாளே பார்த்துட்டேன்… உங்க ரெண்டு பேருக்கும் ஏதோ ப்ரோப்லேம் னு புரிஞ்சிக்கிட்டேன்… நீங்க ரெண்டு பேரும் பார்கவே இல்லை ..

அதான் நீ வெளியே வரும் போது உன்கிட்ட பேச்சு குடுத்தேன் முகிலனையும் பாக்க வச்சேன்….

நீங்க ரெண்டுபேரும் அதிர்ச்சியாய் பார்க்கவும்.

அப்பவே புரிஞ்சிக்கிட்டேன் அந்த நேரம் தான் எனக்கு போன் வரவும்
உங்களுக்கு தனிமை குடுத்துட்டு போனேன்…

ஆனா…? முகிலன் கோவமா திரும்பி வரவும் ஓரே குழப்பம் மா இருந்தது.

சரி என்னதான்னு நடக்குதுன்னு வேடிக்கை மட்டும் பார்த்தேன்….. இருவரையும் பார்த்து சிரித்தாள்…

முகிலனும் மயூரியும் பார்வதியே விழி விரிய பார்த்து கொண்டிருந்தார்கள்..

ஹ்ம்… நடந்து முடிஞ்ச போனாது பத்தி எனக்கு கவலை இல்லை… எனக்கு என் பையன் ஆசை பட்ட பொண்ண கட்டி வைக்கணும்… ஜானுவும் என் பேத்தி தான் … உன் அம்மாவை வர சொல்லுசரியா மயூரி … பேசணும்..

மயூவுக்கே நடக்குறதுலம் கனவா நினைவா னு தெரியாமல் திக் பிரமை பிடித்த மாதிரி நிக்க…

என்ன மயூரி நா பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீ எதுவும் பேசாமலே இருக்க..
.மயூரிக்கு என்ன பேசறது னு தெரியாமல் அழுதாள்…

ச்சி அசடு எதுக்கு அழுற போதும் நீ இதுவரை கஷட பட்டது….

இனிமேல் நீ சந்தோசமா இருக்கனும் டா… மயூ தலை கோதிய படியே முகிலனை பார்த்தாள் ..

என்ன டா நாள் பார்கவா… முகிலன் ஓடி வந்து அம்மாவை கட்டிக்கொண்டான்…தேங்ஸ் மா இருவரும் ஒண்ணாகாலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்……

அஜ்ஜோ… பாட்டி என் மம்மி ஏன் அழுறாங்க… இடுப்பில் கை வைத்து முறைத்தபடி ஜானு நின்றுக் கொண்டிருந்தாள் .

ஹா ஹா .. உன் மம்மியை நான் எதுவும் பன்னலடா..

அப்பறம் ஏன் மம்மி அழுறாங்க.. மம்மிஅழுதுட்டே மயூகிட்ட ஓடினாள்.

மயூ அவளை அணைத்து கொண்டே மம்மி அழலையே டா பேபி … ஸ்கூல் போய்ட்டு சீக்கிரமா வந்துட்டீங்களா பேபி …

ஹ்ம் மம்மி நான் குட் கேர்ள்ஆக்கும் அதான் சீக்கிரமா வண்டேன்..

ஓஹோ நீ குட் கேர்ள்லா ஜானு.. பார்வதி கேட்க..

எஸ் பாட்டி.. ஐயம் குட் கேர்ள்..

ஓ… அப்போ பாட்டி உனக்குஒரு கிப்ட் குடுப்பேனாம்.. ஒகே வா..

அய்ய்ய்.. ஜாலி கிப்ட்டா.. ஹ்ம் குடுங்க பாட்டி … ஆனா?? எதுக்கு கிப்ட்குடுக்கிறிங்க னு சொல்லிட்டு குடுக்கணும் சரியா … துரு துரு பார்வையால் ஒரு விரல் நீட்டி பேசும் அழகிலும் சிரிப்பிலும்
அனுவயே மறுபடியும் பார்த்த மாதிரி உணர்ந்தாள்…

நீ குட் கேர்ள்ஆச்சே அதுக்கு தான் கிப்ட்…

ஓ… சூப்பர் பாட்டி என்ன கிப்ட்..

முகிலன் கையை பிடித்து ஜானுகையில் வைத்து இது தான் பாட்டி உனக்கு குடுக்கும் கிப்ட் எடுத்துக்கோ னு சொல்ல…

ஜானு விழி விரிய பார்வதியும் முகிலனையும் மாறி மாறி பார்த்தாள்..

முகிலனும் மயூரியும் மண மேடையில் கழுத்தில் மாலையுடன் கல்யாண கோலத்தில் அமர்ந்து இருந்தனர். அய்யர் மந்திரம் ஓதி கொண்டு இருந்தார்.
சுட்டி பெண் ஜானு சிரித்த முகத்துடன் மயூரியின் மடியில் அமர்ந்து இருந்தாள்.

கோயிலில் எளிமையாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆடம்பரமாக பெரிய கல்யாண மண்டபத்தில் திருமணம் செய்ய மயூரிக்கு விருப்பமில்லை.

மயூரியின் மனதை புரிந்து கொண்டு முகிலனும் எளிய முறையில் திருமணம் செய்து கொள்ள முழு மனதோடு சம்மதம் தெரிவித்தான். திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய நண்பர்கள் வந்து இருந்தனர்.

மணப்பெண் அலங்காரத்தில் தேவதை போல மிளிர்ந்தாள் மயூரி. அவள் அருகில் கம்பீரமாக அமர்ந்து இருந்தான் முகிலன்.
தான் ஆசைப்பட்ட மாதிரி
மயூரியுடன் வாழ்வை தொடங்க போகும் மகிழ்ச்சியில் மயூரியிடம் நெருங்கி அமர்ந்தான்…

அவனின் நெருக்கம் மயூரிக்குள் ஏதோ மாற்றம் நிகழ வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள்..

அவளின் வெட்கத்தில்
அவன் முகத்தில் மந்தகாச புன்னகை தவழ்ந்தது…

அய்யர் மந்திரம் ஓதி கொண்டு இருந்தார்.

மயூரிக்கும் முகிலனுக்கும் கோயிலில் திருமணம் என தெரிந்தவுடன் கார்த்திக் எரிமலையாய் கொதித்து கொண்டிருந்தான்… யு. எஸ் ஏ ல இருந்து அப்பா அம்மாவை பாக்க வந்து இருந்தவனுக்கு சிவா தான் கால் பண்ணி ஏளனமாய் சிரித்தான் என்னமோ மயூரியை அடைஞ்சே தீருவேன்னு சவால் விட்ட.. இப்போ பாத்தியா…மயூ ஆசைப்பட்ட மாதிரி முகிலன் கூட கல்யாணம் நடக்க போகுது.. வந்து சாப்பிட்டு போ… அத மட்டும் தான் உன்னால பண்ணமுடிஞ்சது… நீ என்ன பண்ணாலும் உண்மையான காதல் எப்பவும் ஜெயிக்கும்… நீ தோத்துட்டா டா கார்த்திக் … ஹாஹா சிரித்தபடியே கட் பண்ணினான்…
கார்த்திக் உறுமிகொண்டிருந்தான்… ச்சே பிரிஞ்சிட்டாங்கனு நெனச்சனே…. நோ இது நடக்க விட மாட்டேன்…..
எனக்கு கிடைக்காத மயூரி யாருக்கும் கிடைக்க கூடாது என்று மனதில் வெறியோடு கார்த்திக் பைக்கில் வேகமாக வந்து கொண்டு இருக்கிறான்.

துப்பாக்கியை இடுப்பில் மறைத்து வைச்சிகிட்டு மயூரியை தீர்த்து கட்ட மிகவும் வேகமாக பைக்கில் வந்து கொண்டிருந்தான்…

இன்னும் சிறிது தூரம் தான் இருக்கிறது தாலி கட்றதுக்கு முன்னாடி போகனும் என்ற வேகத்தில் கண்முன் தெரியாமல், சாலையில் பைக்கை விரட்டினான்

கோயிலுக்கு போகும் வலது பக்க சாலையில் வண்டியை திருப்ப அவனை நோக்கி நேராக வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரியை பார்த்தும் அவன் வந்த வேகத்திற்கு அவனால் பைக்கை கட்டுபடுத்த முடியவில்லை.
நேராக லாரியில் மோதி தூக்கிஎறியப்பட்டான் விழுந்த வேகத்தில் மண்டை பிளந்து
இரத்த வெள்ளத்தில் இறந்து போனான் கார்த்திக்.

மாங்கல்ய தாரணம் கெட்டி மேளம்… கெட்டி மேளம்…

“மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்”

அய்யர் தாலியை எடுத்துக் கொடுக்க
முகிலன் தாலியை வாங்கி மயூரி கழுத்தில் கட்டினான்.
அங்கே இருந்த அனைவரும் மணமக்கள் மீது அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தனர்.

ஜானு கைத்தட்டி ஆனந்தத்தில் துள்ளினாள் அய்யா அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம். மழலையின் மகிழ்ச்சி கண்டு இருவரது உள்ளமும் பூரித்தது.
ஜானு மயூரி முகிலன் கன்னத்தில் அன்பு முத்தத்தை பதித்தாள்….

ஜானு தான் இந்த இளம் ஜோடியின் உயிரானவள்!….. முற்றும்..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago