என்ன சொல்லுற மயூ….?
கார்த்திக் கா? அதிர்ந்தாள் அனுவுக்கு எதுவும் புரியவும் இல்லை … ஏன்? எதுக்கு இப்படி பண்ணினான்.. பல பல கேள்விகள் அவள் மண்டைய போட்டு குழப்ம்பின… ஒரு பக்கம் அவள் மனது சொன்னது கார்த்திக் பண்ணது தப்பு தான் இருந்தாலும்…..நான் ஆசை பட்ட மாதிரி என்மேலேயும் இவர் ஆசை பட்டு இருப்பாரோ… அதனால் தான் இப்படி நடந்துகிட்டுஇருக்கலாம் … (இந்த இடத்தில் அனு யோசித்து பார்த்து இருந்தால் . அன்னைக்கு காலேஜில் மயூவை தவிர வேற யாரையும் அவன் பார்க்க வில்லை யே அப்புறம் எப்படினு சிந்திச்சி இருந்தா எந்த அசம்பாவிதம்மும் நடக்காம தவிர்த்து இருக்கலாம் அனு சிந்திக்க தவறிவிட்டாள் )
காதலித்த மனது எப்படிவேணாலும்சிந்திக்குமே .அனுவின் மனதோ கார்த்திக் என்மேல உள்ள காதலில் தான் இப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கலாம் என எண்ணியது
காதல் ஒரு மாயா வலை
அனு மட்டும் என்ன விதி விளக்கா.. அனு தெளிவான மனதோடு இருந்திருந்தால்.. முடிவும் தெளிவாக எடுத்து இருப்பாள்.. காதல் கண்ணையும் புத்தியும் மறைத்து விட்டது….
காதலால் தான் தன் உயிரே போக நேரிடும்.. என்பதை அறிவாளா… அவள் என்ன பண்ணுவாள்..ஆசை பட்டது கிடைக்காமல் போய்டுச்சேனு உருகி தவித்தவள் இதோ உனக்கே உன் காதல்னு கிடைத்தால் அவளும் என்ன செய்வாள்…. அவள் மனம் முழுவதும் கார்த்திகே நிறைந்து இருந்தான்… விழி அகலாமல் கார்த்திகேயே பார்த்து கொண்டிருந்தாள்…. காதலால்..
அனு.. “மயூ கூப்பிடவும்…
ஆஹான் … என்ன மயூ.
என்ன எதுவுமே பேசாம இருக்க… நீ அமைதி யா இருந்தாலே பக்கு பக்குனு இருக்கு எதுனா வாயை திறந்து சொல்லுடி…
ஹ்ம்ம்… மயூ நான் கார்த்திக்கிடம்கொஞ்சம் தனியா பேசணும்… வெக்கத்தோட சொல்ல.
ஓ… சரி டி மயூ முகிலனனை பார்க்க
அவனும் தலை அசைபோட வா போகலாம்.. சொல்லி வெளிய போக எத்தனிக்கவும் ..
முகிலன் இருக்கிறதை அப்போதான் கவனித்தாள் அனு..
இது வரை தான் முகிலன் கிட்ட நடந்து கிட்டது அன்னிக்கு கால் ல பேசினது நியாபகம் வர ச்சே .. எப்படிலாம் பேசி இவரை கஷட படுத்திட்டேன்.. என்ன சிஸ்டர்னு சொன்னவரை… அசிங்க படுத்திட்டேன…கூனி குறுகி.. போனால்..
தயக்கதோட
அண்ணா… என்று கூப்பிட்டாள்..
முகிலன்க்கு …சொல்ல முடியாத நிம்மதி வந்தது… அப்பாடா தெளிவாகிட்டா.. இது போதும் எனக்கு …
மயூவை வெறுமையாய் ஓர் பார்வை பார்த்தான்… பாத்துக்கோ என்னை என்ன சொல்லி கூப்பிட்டு இருக்கானு … இருந்தது அவன் பார்வையில்..
மயூ ..நொறுங்கி போனால் அவன் பார்வையில்… தலை குனிந்து கொண்டாள்.. அவசர பட்டு வார்த்தையை விட்டுட்டோமே… என்ன சொல்லி முகிலன்னை சமாதானம் படுத்தறது… இனி எத சொன்னாலும் முகிலன் ஏத்துக்க போறது இல்லனு அவனின் வெறுமையான பார்வையே காட்டிக்குடுத்தது ..தான் பேசின பேச்சின் வீரியம் இப்போ புரிந்துகொண்டாள்..
முகிலன் அவளோ எடுத்து சொல்லியும் தான் ஏன் நம்பாம போனோம்… எதனால் முகிலன் மேல் நம்பிக்கை இல்லாமல் போனது … ஒரு வேல அன்னைக்கு பீச் ல நடந்துதது தான் காரணமா…. இருக்கலாம் அது தான் முகிலன் மேல் அளவுக்கு அதிக மா நான் கோவப்படவைத்திருக்கு
மயூரி.. முகிலன்பார்வையால் இறைஞ்சினால்.. கெஞ்சி பாத்தாள்.. ஹுகும்..
எந்த பார்வைக்கும் அவன் மசியவே இல்லை.. கல்லு போல இறுகி நின்றுந்தான்..
இனி பேசி ப்ர்யாஜுனம் இல்லை.. அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு கட்டு பட்டு தான் ஆகணும்… மனதில் பாரத்தோட முகிலன் பின்னாடியே சென்றாள்..
இவை அனைத்தயும் பார்த்த கார்த்திக் நொடி பொழுதில் கணித்து கொண்டான் …
ஓஹோ இது தான் விசயமா .. என்ன பண்ணனும்னு முடிவு எடுத்துக்கொண்டான்…கார்த்திக் முடிவு எடுத்தா மட்டும் போதாது அத செய்யல்ல செய்ஞ்சு முடிக்கணும்…. இப்போ கோட்டை விட்ட மாதிரி மறுபடியும் கோட்டை விட்டுடுடாத…மாட்டேன் விட மாட்டேன் ஒரு தடவ தான் தப்பு நடக்கும் இனி நடக்க போறதுலாம் என் பிளான்னோட பக்கா
வா நடக்கும் நடத்திக்காட்டுவேன் மனதில் நினைத்து கொண்டான்.
அனு கார்த்திக் முகத்தையே பருகு பருகுனு பார்த்துக்கொண்டே இருந்தாள் … காதல் தான் எவளோ பொல்லாதது ல தான் கெட்டு போய்ட்டோமேன்னு நினைத்து சாக போனவள்..தன்னை கெடுத்தவன் நாம லவ் பண்ணவனுதெரிஞ்சதும் பொங்கி வரும் பாலில் தண்ணி தெளித்து விட்ட மாதிரிஆகிவிட்டாள்.. அவன் மேல் கோவம் தான வரணும் அளவிட முடியாத காதல் பெருகுதே இது என்ன விந்தை… இதுக்கு பேர் தான் காதலோ..இது ஹாஸ்பிடல் னும் மறந்து ரசித்து கொண்டிருந்தாள் …
கார்த்திக்கோ … அனுவின்…குறுகுரு பார்வையில் நெளிந்தான்.. இவ ஏன் இப்படி பாக்குறா.. எதுனா சொல்லி திட்டி சண்ட போடுவானு பாத்தா இப்படி ரொமான்ஸ்சா பாத்து வைக்குறாலே..
ஏன் … அங்கியே நிக்குறீங்க கார்த்திக் வாங்க இங்க வந்து உக்காருங்க.. பெட் பக்கத்தில் சேரரை இழுத்து போட்டாள்..
அவளின் செய்கையில் கார்த்திக் க்கு சங்கடமா க இருந்தது… இவ ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்குறா… காலேஜில் பாத்தா மாதிரி கலகலப்பா இருந்தாள் னா தேவலாம் இவ இப்படியே பாத்துட்டு இருந்தா எனக்குதான் மூச்சு முட்டுது… ஸ்ஸ்ஸ்ஸ் ப்பா..
கார்த்திக் … மென்மையாய் அழைத்தாள்..
ஹ்ம்.. “
என்ன மாதிரியே உங்களுக்கும் என்ன பார்த்ததும் பிடிச்சி போச்சா… வெக்கத்தோட கேட்க..
கார்த்திக்கு.. என்ன சொல்லுறதுனே தெரியாமல் திரு திரு னு முழிக்கவும்…
உங்க வீட்டுல என்ன ஏத்துப்பாங்க தான கார்த்திக்.. உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறிங்களா..
ஆஹன்.. அதிர்ந்தான் இதை எப்படி மறந்தேன் அய்யோ அப்பாக்கு விசியம் தெரிஞ்சா என்ன கொன்னே போட்டுடுவாரே… பயத்தில் வேர்த்து கொட்டியது…
ஹுக்கும் இவளோ பயம் இருக்கிறவன்.. தப்பு பண்ணாம இருந்து இருக்கனும்…அத விட்டுட்டு தப்புல்லாம் பண்ணிட்டு அப்பாவை நெனைச்சி பயம் வருதா உனக்கு … போடி உனக்கு வீட்டுல கஞ்சி தான் … கா சப்போராங்க..உன் அப்பா அநேகமா உனக்கு பால் ஊத்தினாலும் ஊத்திடுவார் கார்த்திக்குஅவன் வீட்டை பத்தி நினைத்ததும் கதி கலங்கியது…..
என்ன கார்த்திக் நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்.. நீங்க எதுவும் பேசாம அமைதியவே இருக்கீங்க…
ஹுக்கும்… யாரு நானா அமைதியா இருக்கேன் உள்ளுக்குளே நடுங்கிட்டு இருக்கேன் டி என் வீட்டை நெனைச்சி… மௌனம்மா அவனுக்குள்லேய.. பேசிக்கொண்டு இருந்தான்.
கார்த்திக்க்க்க்க்.. அனு சத்தமா கூப்பிடவும்..
ஆஹன்… அனு அத பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்.
எத பத்தி யோசிச்சிட்டு இருக்கீங்க கார்த்திக்..
உங்..க.. உன்ன எப்படி வீட்டுக்கு கூட்டிட்டு போறது பத்திதான்..
ஹ்ம்ம்… உங்க அம்மா அப்பா லாம் எப்படி கார்த்திக் .. நீங்க வீட்டுக்கு ஒரே பிள்ளையா… கூட பிறந்தவங்கனு யாரும் இல்லையா கார்த்திக்… அனு அடுத்தடுத்து கேள்வி கேட்டுக்கொண்டே போக…
கார்த்திக்கு . ….ஸ்ஸ் பா இவ வாயை திறந்தா மூடவே மாட்டாளா… சும்மா லொட லொட னு பேசிட்டே இருக்காளே…. யாராவது வந்தா நல்லா இருக்கும் இவ கிட்ட இருந்து என்ன காப்பாத்த… வெளிய போன மயூரியும் காணோம்… அவனுயும் காணோமே … அவங்க என்ன பண்ணுறாங்க என்ன பேசுறாங்க னு தெரியணுமே … எப்படி இங்க இருந்து போறது யோசித்து கொண்டிருக்கையில்…
அவனை காப்பாத்தவே வந்தா மாதிரி.. நர்ஸ் உள்ளே வந்துகொண்டிருந்தாள்.
வா மா பரதேவதையே.. நல்லா நேரத்துல வந்து என்ன காப்பாத்திட்ட…..
சார் கொஞ்சம் வெளிய போங்க இவங்களுக்கு டிரஸ் சேன்ஜ் பண்ணனும்..
ஹ்ம் சரி …
நல்லா வேல நர்ஸ் வந்துட்டா இல்லனா ஸ்ஸ்ஸ்ஸ் பா முடியல டா
விட்டா போதும் சாமி னு .. ஓ .. சரி நான் வெளிய போறேன்… அனுவிடம் திரும்பி .. நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன் அனு டிரஸ் எல்லாம் நானும் சேன்ஜ் பண்ணிட்டு குளிச்சிட்டு வரேன்… நீ ரெஸ்ட் எடு… சொல்லிவிட்டு எழுந்துக்க போனவனை .. அனு கூப்பிட்டவும்.
மறுபடியும்மா … கார்த்திக் முழிக்க..
. கார்த்திக் நீங்க இப்போ போகவேணாமே வீட்டுக்கு அப்பறம் போங்களேன்… நர்ஸ் சீக்கிரம் மா முடிச்சிடுவாங்க.. பேசிட்டு இருக்கலாம்.. எனக்கு உங்க கிட்ட நெறைய பேசணும்னு ஆசையா இருக்கு… போகாதீங்க கார்த்திக்… ப்ளீஸ்.
ஹ்ம்…ஹ்ம் வெளிய இருக்கேன் …. சொல்லிட்டு நிக்காமல் சென்று விட்டான்..
அவன் போறதையே பார்த்துகொண்டிருந்தாள்..
நர்ஸ் வெளியபோகும் போது சிஸ்டர்னு கூப்பிட்டாள்… … வெளிய நீங்க வரும் போது இருந்தார்ல அவர வர சொல்லுறீங்கலா. … ப்ளீஸ் சிஸ்டர்..
ஹ்ம்ம் சரி..
வாயில் வழியே பார்த்து கொண்டிருந்தாள் கார்த்திக் வருவான்னு…
அவன் எங்க அங்க இருக்கான்.. அவன்தான் அப்பவே கிளம்பிபோய்ட்டானே..
கார்த்திக் விட்டா போதும்னு வெளியே வந்தவன் மயூ எங்க இருக்கானு தேடி போனான்… சுத்தி சுத்தி பாத்துகொண்டே வந்தவன்…
முகிலன்… ம்யுவிடம் கோவமாய் பேசிக்கொண்டிருக்கவும்.. என்ன பேசுறாங்க னு அவன் காதில் விழனாலும் என்னமோ கோவமா பேசுற மாதிரி தோன்றியது கார்த்திக்கு…
ச்சே என்ன பேசுறாங்கனு தெரிலயே சரியாவும் கேக்க முடில யே… இன்னும் கொஞ்சம் கிட்ட சென்று மறைவா நின்று கொண்டான்….
மயூ பேசுறது தெளிவா கேட்டது … இங்க பாருங்க முகிலன் நான் பேசுனது தப்பு தான் அதுக்கு மன்னிப்பும் கேட்டுட்டேன் … மன்னிப்பு கேட்டும் நீங்க உங்க முடிவு லயே நிக்குறீங்க… உங்க முடிவுல எனக்கு சம்மதம் இல்லை… அழுது கொண்டே பேசினாள்.. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா முகிலன்… கண்களில் வலியோட கேட்டாள்..
மயூ நம்பிக்கை இல்லனு சொல்லமாட்டேன் இருக்கு பட் என் மனசு ஏதோ ஒரு டிஸ்டர்ப்பாவே இருக்கு… எங்க நீ எனக்கு கிடைக்காம போய்டுவியோ னு மனசு அலைபாயுது… ப்ளீஸ் மயூ புரிஞ்சிக்கோ…
நான் உங்கள விட்டு போய்டுவேன்னு பயம்மா முகில் அதனால் தான நீங்க இப்படி என்கிட்ட கேக்க காரணம்…. இவளோ தான முகில் அது உங்களுக்கு கெடைச்சிட்டா என்ன முழுசா நம்புவீங்க அப்படி தான… சாரி முகில்என்ன இழந்து தான் என் காதலை நீங்க உணருவீங்க னா.. அப்படிப்பட்ட காதல் எனக்கு வேணாம்.. நீங்க சொன்ன மாதிரி நடந்துக்க என்னால முடியாது எங்க வீட்டில என்ன அப்படி வளர்க்கல…கண்களில் வலியோட சொன்னாள்
ஓ… இது தான் உன் முடிவா மயூ…
ஆமா…..
சரி உன் இஷ்டம் … இதுக்கு அப்பறம் நான் எதுவும் சொல்லுறதுக்கு இல்லை.. நான் கிளம்பறேன்… இது என் நம்பர் உனக்கு என் முடிவு சரி னு பட்டா இந்த நம்பர்க்கு கால் பண்ணு …. நா எங்க இருந்தாலும் வந்துடுவேன்… பை டேக் கேர் மயூ… பட் ஸ்டில் லவ் யு … சொல்லிட்டு விறு விருனு திரும்பியும் பார்க்காமல் கிளம்பிசென்றுவிட்டான்..
முகிலன் போவதையே வெறித்து பார்த்தாள்.. எல்லாம் போயிடுச்சி இனி எதுவும் இல்லை… மனதி பாரம் தாங்க முடியாமல் அழுத்தியது
அப்படியே சரிந்துஅமர்ந்து முகிலனை நினைத்து கதறி அழுதால்…என்ன பாத்து இப்படி கேட்டுட்டாரே.. என் மேல இவளோ தான நம்பிக்கை என் காதல் உண்மையா னு நிரூபிக்க இது தான் வழினு நெனைச்சிட்டீங்களா முகில்….. கதறினால்…….