முகிலன் யோசிச்சான்..
ஹ்ம்ம் இது தான் கரெக்ட்… நேர காலேஜ் போனான் ..
அங்க பங்க்ஷன் நடந்த அன்னைக்கு எந்தெந்த காலேஜ் கலந்துக்கிட்டாங்க னு எல்லாம் செக் பண்ணான்..
அதில் கார்த்திக்.. சிவா . சுந்தரம் மூனுபேரும் திக் பிரண்ட்ஸ் னும் புரிந்து கொண்டான்.
சிவா முகிலன் கிட்ட இருந்து எப்படியோ தப்பித்து ஒரு வழியா ஹாஸ்டல் வந்து சேர்ந்தான்
வாடர்ன்அக்கா ..
சிவா உன்ன தேடி ஒருத்தர் வந்தார்..
வார்டன் சொல்ல சிவாவுக்கு திக்கென்று ஆனது..
அய்யயோ .. ஒரு வேல முகிலான இருப்பானோ… சே ச் சே அவனுக்கு எப்படி தெரியும் நான் இந்த ஹாஸ்டல் தான் தங்கி இருக்கேனு..
இருந்தாலும் டவுட்டோட வே கேட்டான் யார் அக்கா வந்தாங்க …ஆல் எப்படி இருந்தாங்க .
உன் வயசு தான் இருக்கும்…
ஓ…
ஆன நான் அப்படி யாரும் இல்லன்னு சொல்லி அனுப்பிட்டேன் ..
ஓ .. தேங்ஸ்.. அக்கா..
ஹ்ம்.. எதுக்கு தம்பி உன்ன தேடிட்டு வந்தாங்க… நா பாத்தா வர நீ நல்ல பையனா தான் தெரியிற அதான் அந்த பையன் வந்து கேக்கும் போது எதுவும் சொல்லல …. என் நம்பிக்கை யை கெடுத்துடாத தம்பி இது முதலும் கடைசியுமா இருக்கட்டும்…
ஏன் தெரியுமா உன்ன வார்னிங் பண்றேன் அந்த பையன் … உன்ன பத்தி விசாரிச்ச விதம் என்ன இப்படி பேச வைக்குது… புரிதா பாத்து நடந்துக்க… தம்பி அவளோ தான் சொல்லிட்டேன் எங்க சுந்தரத்தை காணோம்…..?
அப்பதான் அவன் நினைப்பே வந்தது சிவாவுக்கு இவனை எப்படி மறந்தேன்… அய்யயோ . எங்க போயிருப்பான்… கண்டிப்பா முகிலன் கிட்ட மாட்டி இருக்க மாட்டான்னு தெரியும் வேற எங்க போயிருப்பான்.. யோசித்து கொண்டே ரூம்க்கு சென்றான்..
ரூம் கதவு திறந்து இருக்க .. என்ன கதவு திறந்து இருக்கு ஒருவேளை சுந்தரம்தான் வந்து இருப்பானோ …
உள்ள போனதும் கதவு மூடிதானாய் மூடிக்கொள்ளவும்
அதன் மேல் சாய்ந்து கொண்டு முகிலன் நின்று கொண்டிருந்தான்…
என்ன ….
தப்பிச்சிடோம் நினைப்பா முகிலன் முறைத்துபடி கேட்க..
சிவாவுக்குபயத்தில் வேர்த்து கொட்டியது நாக்குலாம் தந்தி அடித்துதது… வாடர்ன் அக்கா எதுவும் சொல்லல னு சொன்னாங்களே…
என்ன டா..
யோசனைபண்ணுற.. ஒ.. வார்டர்ன் அக்கா எதுவும் சொல்லல னு சொன்னாங்களே அப்பறம் எப்படி இவன் வந்து நிக்குறானேன்னு டவுட் டா இருக்கா..
உன் வார்டன் கிட்ட அப்படி சொல்ல சொன்னதே நான் தான் …
ஆஹான்.. வாய் பிளந்தான்..
உன்கிட்ட
என் வாய் பேசாது சொல்லியபடியே விட்டான் அறை அவன் கோவம் தீரும் வரை அடிச்சான் ஒழுங்கா சொல்லிடு அனுகும் உனக்கும் என்ன சம்பந்தம்..
அய்யோ அம்மா.. ஆ ஆ..
உண்மையாவே எனக்கும் அந்த அனுக் கும் எந்த சம்பந்தமும் இல்லங்க….
என்னடா…
நா கேட்டுட்டே இருக்கேன் நீ சொன்னதே சொல்லிட்டு இருக்க .. கண்ணுமுன்னு தெரியாமல் அடித்தான்…
வலி தாங்க முடியாமல் … சொல்லிறேன் அடிக்காதிங்க ப்ளீஸ்.
.சொல்லு …. ஆத்திரம் மாறாமலே கேட்டான்.
கடைவாயில் ரத்தம் கொட்டியது … நீங்க சொல்லுற அனுனு யாருனுனே தெரியாதுங்க…
என்னடா.. சொன்ன ஓங்கி எட்டி உதைச்சான்…
ஆ.. அம்மாமா மா..
அடிவாங்கியும் அவன் அதையே தான் சொன்னான்…
நான் சொல்லுறது உண்மைதாங்க.. அனு யாருனு தெரியாது …. ஒரு வேல கார்த்திக் க்கு தெரிஞ்சி இருக்கலாம்..
அது யாரு கார்த்தி…
அவனால தான் உங்க கிட்ட மாட்டிட்டு அடிவாங்கிட்டு இருக்கேன்….
டேய் என்ன கொலைகாரனா ஆக்கிடாத… ஒழுங்கா உண்மைய சொல்லு… ஆத்திரத்தோட கத்தினான்…
உண்மையா கார்த்திக்காலதான் இவளோ ப்ரோப்லம்…
அவன் யாரு அவனுக்கும் அனுக்கும் என்ன சம்பந்தம்…
அவனுக்கும் அனுகும் ஒரு சம்பந்தமும் இல்லை…
டேய்ய்ய்ய்..உன்னை .கோவத்தில் கழுத்தை நெறித்தான்…
ஹ்ம்ம்ம்.. ஆஆஆ…
நான் சொல்லுறத முழுசா கேளுங்க …. ஆஆ….. அனுவா தெரியாது ஆன மயூரி ய தெரியும்….
என்ன……????அதிர்ந்தான் கழுத்தில் இருந்து தானாவே கை விலகியது .. தொய்யுந்து போய் தொப்புனு கட்டில் உக்காந்து.. தலையில் கைவைத்து கொண்டே …. இதுல மயூ எங்க வந்தாள் மயூரிக்கும்.. கார்த்திக்கும் என்ன சம்பந்தம்….
தேவை இல்லாம மயூ பெயரை இழுத்தேன்வை உன்ன உண்மையாவே கொன்னுட்டு ஜெயிலுக்கு போய்டுவேன்… ஜாக்கிரதை ஒழுங்கு மரியாதை யா
சொல்லுடா… கோவமாய் கேட்டு கர்ஜிக்கவும்..
சிவாவுக்குபயத்தில் வயிற்றில் புளி கரைத்தது… இவன்செய்ஞ்சாலும் செய்ஞ்சிடுவான்… எல்லாம் இந்த கார்த்திக் னால வந்தது… மனதில் நொந்து கொண்டான்..
காலேஜீஜில் ல இருந்து ஹாஸ்பிடல் வரை நடந்து எல்லாம் சொல்லிமுடித்ததும்…
முகிலன் முகத்தை பார்க்க…
அவன் அதிர்ச்சியோட பார்த்துக்கொண்டிருந்தான் … அப்படினா இது அனுக்கு நடந்துருக்க வேண்டியது இல்லை.. இவனுங்க பிளான் மயூ தான்.. அது ல மாட்டிகிட்டது அனு ஒ மை காட்…
ஆத்திரத்தில் என்ன பண்ணுறோம்னு தெரியாமல் கண்முன் தெரியாமல் அடித்தான் …
ஏன்டா ஒரு பொண்ண அடைய இப்படியா கேவலமான வேலையா செய்விங்க உங்களால்லா ஒரு உயிர் உயிர் விட போராடுதே டா…. உங்களை எல்லாம் உயிரோட விட்ரதே தப்பு.
. எங்கடா இருக்கான் அந்த கார்த்திக்…..
ஹாஸ்பிடல்ல…..??
என்னது…. ஹாஸ்பிடல்லயா…???
ஆமா … ஆக்ஸ்ரெண்ட் ஆகிடுச்சு அவனுக்கு…
இன்னும்…
செத்து போகலல ல..
பாவம் பண்ண இப்படி தான் .. அனுபவிக்கனும்….
எந்த ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்க அவன…
நீங்க அனுவை சேர்த்து இருக்குற ஹாஸ்பிடல் தான் அவனையும் சேர்த்து இருக்கோம்…
ஓ….. சரி
கிளம்பு ..
எங்க …. கிளம்பனும்….? அதான் எல்லாம் சொல்லிட்டேனே…
ஆஹான்… உனக்கு ரொம்ப அடிபட்டு இருக்கு ல அதான்..
சிவா அவனை விசித்திரமா பார்க்கவும்…
என்ன அப்படி பாக்குற.. ஓ என்னடா மாட்ட அடிக்குற மாதிரி அடிச்சிட்டு அவனே ஹாஸ்பிடல் கூப்பிட்றானே னு பாக்கறியா…
நா ஒன்னு ம் உனக்காக வர சொல்லல கார்த்திக் யாருனு எனக்கு தெரியணும் அதுக்கு தான் உன்ன கூப்பிடுறேன்… வா…
ஹ்ம்ம்…
ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போய் கார்த்திக்கை காட்டினான்… அவன் மயக்கத்தில் இருக்கவும் ….
ஹ்ம் சரி நீ போய் டாக்டர்ரா பாத்துட்டு வா நா இங்க இருக்கேன் போ…
ஹ்ம்… அடிக்கறதுலாம் நல்லா அடிச்சிட்டு …. பேச்சை பாரு … மனசுக்குள்ள முனகினான்….
என்ன அங்க முனுமுனுப்பு…..
ஆஹ்ன் ஒண்ணுமில்ல… விட்ட அடிக்க வந்துடுவான் போல ஒழுங்கா கிளம்பிடு டா சிவா இதுக்கு மேல அடி வாங்குன உன் உடம்பு தாங்காது…… விட்ட போதும்னு டாக்டர் பாக்க ஓடிவிட்டான்…
கார்த்திகே பார்த்து கொண்டே அருகில் வந்தான் … அவன் மயக்கத்தில் இருந்து எழுந்துகொள்ளவும் …. பளீர் விட்டான் அறை…
கண்கள் சிவக்க முகிலனை முறைத்து பார்த்தான்
என்ன முறைக்குற..கொன்னேபோட்டுடுவேன் நீயெல்லாம் ஒரு மனுஷனா டா ச்சே… ஒரு பொண்ண அடைய கேவலமான வேலையெல்லாம் பண்ணிருக்க… உன்னை உங்க அம்மா நல்லா முறையில தான பெத்தாங்க…. …
அவன் அம்மாவை சொன்னதும்.
டேய்ய்… பார்த்து பேசு கோவம் வந்தது கார்த்திக் க்கு…
ஆஹ்ன் கோவம் வருதா உனக்கு…
உன் நல்லா நேரம் ஹாஸ்பிடல்ல படுத்து இருக்க இல்லை உன்ன என்ன பண்ணிருப்பேனு எனக்கே தெரியாது….
உன் கூட பொறந்தவளா இப்படி யாராச்சும் பண்ணிருந்தா நீ சும்மா விட்டுருப்பியா…
தலைகுனிந்து கொண்டான் .
பாவம் டா அனு …. அவங்கல சாகிற அளவுக்கு கொண்டு வந்துட்டியே பாவி ..
வா வந்து பாரு … அப்பதான் புரியும் உனக்கு நான் சொல்லுறது… எப்படிதுறு துறு னு சுத்திட்டு இருந்த பொண்ண நாரா கிழிஞ்சி போய் படுத்து இருக்கா போய் பாரு …
கார்த்திக் கோவத்தில் கத்தினான் … ஹேய் யார் கிட்ட பேசிட்டு இருக்க னு பாத்து பேசு..
ஓ நல்லா தெரியுமே … ஒரு பொண்ண கேவலமான முறையில ஏமாத்தி கெடுத்தவன் னு நல்லாவே தெரியும்…
ஹேய்… இடியட் என் அப்பா யாருனு தெரியுமா…அவர் பேர சொன்னாலே நடுங்குவாங்க ……
ஹேய்…… கிய் னு சொன்ன பல்ல தட்டி கையில கொடுத்துடுவேன் ஜாக்கிரதை..
நீ யார இருந்தா எனக்கெண்டா.. எவளோ பெரிய அப்படக்கராவே இருந்துக்கோ ஐ டோன்ட் கேர்… ஒழுங்கா அந்தப்பொண்ண உன் வீட்டு ல சொல்லி கல்யாணம் பண்ணுற வழிய பாரு..
ஹாஹா …. நான் கெடுத்த பொண்ணுகலாம் கல்யாணம் பண்ணனும்னா கணக்கே இல்லாம தான் கல்யாணம் பண்ணனும் நெக்லா சிரித்தான்…
முகிலன் கைமுஷ்டி இறுக்கியது…
பளார்….. அறை விழவும் … அதிர்ச்சியோட பார்த்தான்…
மயூரிஜிவு ஜிவு கோவத்தில் சிவந்து நின்றுகொண்டிருந்தாள்..அவள் கையே எரிந்தது கொண்டிருந்தது … அடித்த பிறகு..
.யார்க்கு தெரியக்கூடாது னு நெனைத்திருந்தானோ அவளே வந்து நிக்கவும்… அதிர்ச்சியில் பேச்சே வராமல் உறைந்து நின்றான்…….
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…