என்னடா ..?? உளர்ரான்..
சரி வண்டிய எடு எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்… சிவா சொல்லவும் ..
ஹ்ம்” .. சரி
கார்த்திக் பினாத்திட்டே இருந்தான் .. மயூ லவ் யு டி … நீ எனக்கு வேணும்டி அந்த முகிலன் லாம் உனக்கு செட்டே ஆக மாட்டான் டி ..
சிவாவும் சுந்தரமும் நினைத்து கொண்டார்கள்; என்னமோ தப்பு நடந்து இருக்கு நெனைக்கிறேன்.. அதான் கார்த்திக் இந்த அளவுக்கு டென்ஷன்ஆக காரணம்… காலையில் இத பத்தி பேசியே ஆகணும்… டா.
டேய் சுந்தர் இவன் நிறைய குடிச்சிருக்கான்டா இப்படியே அவன வீட்டுக்குள்ள கூட்டிட்டு போனோம்னு வை அவங்க அப்பாஅவனோடவே சேர்த்து நம்மளையும் கொன்னே போட்டுடுவார்… என்னடா பண்ணுறது இப்போ….?
ஹ்ம்..
என்ன பண்ண சொல்லுற விடிய விடிய நாம கார்லயே இருக்க வேண்டியது தான்..வேற வழி இல்ல.
ஐ வே ரோட்டோரமர காரை நிறுத்திட்டு காரிலயே இருவரும் தூங்கினார்கள்.
கார்த்திக்கு சட்னு முழிப்பு வரவும் எங்க இருக்கோம்னு யோசிக்க முடியாமல்
அப்படியே சுத்தி பாத்துட்டே வந்தவன்.. சிவாவும் சுந்தரரும் துங்கறத பாத்ததும் இவனுங்க எப்படி நம்ம ரூமுக்குள்ள வந்தானுங்க….. யோசிச்சிட்டே இருந்தவன் அப்பதான் கவனித்தான் நாம இருக்கறது வீடு இல்லை கார்லனு …
போதை தெளிஞ்சும் தெரியாமலும் காரை விட்டு இறங்கினான்…
நிதானமே இல்லாமல் தள்ளாடிட்டே நடந்து போனான் …
அவன் நினைவு முழுவதும் மயூரி மட்டுமே நிறைந்திருந்தாள். மயூ … மயூ தப்பு பண்ணிட்டேன் மயூ என்ன விட்டு போயிடாத…. இப்படியே பொலம்பிட்டே வந்தவன் எதிர்ரே வண்டி வரது கவனிக்காமல் தள்ளாடியபடியே போகவும் …
அது ஐ வே ரோடு … கன ரக வண்டிகள் அதிகமா போகும் சாலை.. அதில் தள்ளாடிய படியே நடந்து போய் கொண்டிருந்தான்…
சிவாவிற்கு முழிப்பு வரவும் கொட்டாவி விட்டபடி பின்னாடி திரும்பி பார்த்தான் … அங்கே கார்த்திக் இல்லாததை கண்டதும் அதிர்ந்தான்
உடனே சுந்தரை எழுப்பி டேய் சுந்தர் எழுந்திரு கார்த்திகை காணோம் டா எழுந்திரு…பயத்தில் அலறினான்….
சுந்தரும் அடிச்சு புடிச்சு எழுந்துகவும்… எங்க டா போனான்… இருவரும் காரை விட்டு இறங்கி வெளியே தேடவும்….
ரோட்டில் நிதானமே இல்லாமல் நடந்து போய்கொண்டிருக்கும் கார்த்திக்கை கண்டதும் சிவாவும் சுந்தரரும் அதிர்ந்து படி பின்னாடி யே கத்தி கொண்டு ஓடினர்…
கண் இமைக்கும் நேரத்தில் கார்த்திக் மேல் வேகமா வந்த சுமோ மோத மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டான் கார்த்திக்.
நெத்தியில் காயம்பட்டுதும் மயக்கம் அடைந்து விட
பின்னாடியே ஓடிவந்த சிவாவும் சுந்தரும் கார்த்திகை பார்த்ததும் அதிர்ச்சியில் நின்றுவிட்டார்கள்.. சிவா வும் சுந்தரும் அருகில் ஒண்டினார்கள் கார்த்திக் கார்த்திக் எழுந்திரு டா …. கத்தினான்….
சிவா தூக்குடா கார்த்திக் கை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம் தூக்கி கார் பின் சீட்டில் படுக்க வைத்து விட்டு ஆஸ்பத்திரி நோக்கி விரைந்தனர்.
அனு அட்மிட் ஆகிருக்கும் அதே ஆஸ்பத்திரியில் கார்த்திகை யும் கொண்டு வந்து சேர்த்தனர்…
என்னாச்சு … டாக்டர் கேட்க… டாக்டர் ரோடு கிராஸ் பண்ணும் போது வண்டி இடிச்சிடுச்சு….
ஓ…… போலீஸ் கேஸ் கம்பளைண்ட் குடுத்துட்டு வாங்க…
நான் கொடுக்கறேன் டாக்டர் நீங்க ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க ப்ளீஸ் டாக்டர் .
சிவா கார்த்திக்கோட அப்பா பெயர் சொன்னதும்…
ஓ…. அவர் பையனா …..
கார்த்திக் உள்ளே கொண்டு போனதும் வெளியில் பயத்தோட உக்காந்துஇருந்தார்கள்..
ஏன் டா இப்படி பண்ணான் சிவாவை கேட்டுகொண்டு இருந்தான் சுந்தர்…
என்ன கேட்ட ….எனக்கென்ன தெரியும்.
உன்ன கேக்காம வேற யார கேப்பாங்க நீ தான அவன் கூட போன…
ப்ச்.. டேய் நா கூட போனேன் தான் இல்லனு சொல்லல
பவர் கட் பண்ண மட்டும் தான் என் வேல உள்ளே போனது அங்க என்ன நடந்தது எதுவும் எனக்கு தெரியாது டா .. நா கேட்டும் அவன் என்கிட்ட எதுவுமே சொல்லல …..
இங்க வந்து எப்படி டென்ஷனா நடந்துக்கிட்டானோ அப்படி தான் என்கிட்டயும் நடந்துக்கிட்டான்…
ஹ்ம்ம்…சுந்தரம் யோசிக்கவும்
சிவாவிடம் பேசியபடியே திரும்பியவன் ..
அதிர்ந்தான்…
அதிர்ச்சியோட டேய்ய் அங்க இருக்கறது முகிலன் தான….
எங்க டா…
அதோ பாரு அந்த ஓரத்துல சேர்ல உக்காந்து இருக்கான்…
அட ஆமா டா முகிலன் தான் … அவன் ஏன் இங்க இருக்கான் …
தெரில டா ஒரு வேல மயூரிக்காக வந்து இருப்பானோ…
ஹ்ம்… ஆமா அப்படி தான் இருக்கும்..
அவனுக்கு இங்க என்ன வேல.
வா டா… கிட்ட போய் பாக்கலாம்…
ஹ்ம்..
இருவரும் முகிலன்க்கு தெரியாமல் மறைந்து நின்று நோட்டம் விட்டனர்.
சிவா .. அவன் முகத்தை பார்த்த ஏதோ சீரியஸ் மாதிரி தெரிது..
எனக்கும் அப்படி டா தான் தெரிது .
இரு டா பாப்போம் இவன் மயூரிக்காக வந்து இருந்தா .. கார்த்திக் ஏன் டென்ஷன் ஆனான்…??
அந்நேரம் பார்த்து மயூரி வெளிய வரவும் … சிவாவும் சுந்தரும் அதிர்ந்தனர்..
என்னடா மயூரிக்கு ஒன்னும் ஆன மாதிரி தெரிலயே..
அப்போ அட்மிட் ஆனது யாரு?
சிவா சைலன்ட்.. என்னமோ பேசுறாங்க பாரு … இன்னும் கிட்ட போன அவங்க என்ன பேசுறாங்கனு கேக்கலாம் …
வா… முகிலன் அருகில் வந்ததும் என்ன பேசுறாங்கனு கேக்க முடிஞ்சது….
மயூ … ப்ளீஸ் நம்பு அனுவ நான் சகோதரியா தான் பாக்குறேன் … நா எப்படி மயூ யோசிக்கவே மாட்டியா.. என்ன புரிஞ்சிக்கிட்டது அவ்வளோ தானா விரக்தியா சிரித்தான்..
ஓகே மயூ உனக்கு எப்போ என்மேல நம்பிக்கை வருதோ அப்போ என்ன தேடி வா என்கிட்டே பேசு உனக்காக நான் எப்பவும் காத்திருப்பேன்…. நீயா வரும் வரை நான் உன்ன தேடி வரமாட்டேன் …
உதட்டை கடித்து அழுகையை கட்டு படுத்தினாள்..
அனுக்கு ஒரு வழி சொல்லிட்டு போங்க முகிலன் நீங்க பாட்டுக்கு போறேனு சொன்னாக்க என்ன அர்த்தம், அனு லைப் என்ன ஆகுறது…
அவன் முகத்தை பார்க்காமல் சலனமற்ற முகத்தோட பேசினாள்…
எந்த ஆதாரமும் இல்லாமையே என்மேல சந்தேகம் பட்டுட்ட மயூ
முகிலன் உடைந்து போனான்..
. நான் சொல்லுறத நம்பவே மாற்றாலே.. உண்மையான அன்புக்கு ஆயுசு கம்மி போல… மயூ மனச உடைச்சேன்ல பதிலுக்கு என் மனச உடைச்சிட்டாள் பாறை போல இறுகினான்… ஹ்ம்ம் மயூரி … உன் தோழிக்கு இந்த நிலைமை வர நான் காரணம் இல்லை…
மயூ தடுத்து பேச வர…
போதும் மயூ நீ பேசுனதுலாம் போதும், என் மனசு ரணம் ஆகிடுச்சு. இதுக்கு மேல நீ பேசுனா அத தாங்குற சக்தி எனக்கு இல்லை…
உள்ளம் உடைந்து போனான்… நா பேசிடுறேன்.. இப்பவும் சொல்லுறேன் அனு எனக்கு சகோதரி தான் அத நான் அவங்க கிட்டயே சொல்லிருக்கேன் ….
இப்போ அவங்க உடம்பும் மனசும் சரியில்லை. கொஞ்சம் நாள் போனா அவங்களே யோசிப்பாங்க இந்த தப்பு நான் பண்ணிருக்க மாட்டேன்னு. ஆனா கண் கலங்கியது முகிலனுக்கு.. நீ என்ன சந்தேகபட்டது என்னால தாங்க முடியல.
முகிலன் பேச பேச மயூரி மனசளவில் நொறுங்கி போனாள்…
பேச்சு வராமல் திணறினான்… மயூரி… இல்லாத லைப் அவனால் நினைச்சு கூட பார்க்க முடியவில்லை… கலங்கினான்… எல்லாம் ஒரு நொடி தான் .. மறுநொடி இறுக்கமான முகத்தோட பேசினான்…
அனுவ இந்த நிலைமைக்கு ஆளாக்கினவன.. கண்டுபிடிச்சு உன் முன்னாடி நிறுத்துறேன்… என் மேல விழுந்த கரைய நான் தானே சுத்தம் பண்ணனும்…
முகிலன் பேசி கொண்டிருக்கும் பொழுது,
நர்ஸ் ஓடிவந்தாள் 5அம் நம்பர் பேஷண்ட் அட்டெண்டர் யாராவது இருக்கீங்களா..
மயூ ….நான் தான் சிஸ்டர்..
அந்த நர்ஸ் சிடுசிடுனு மூஞ்சியை காட்டினாள்.. எங்கம்மா போய் தொலைஞ்ச.. அந்த பேஷண்ட் ஓயாம கத்திகிட்டே இருந்துச்சு.. அதட்டல் போடலாம்னு போய் பாத்தா பக்கத்துல இருக்குற கத்திய எடுத்து கைய வெட்டிக்கிச்சு…..
அய்யோ … மயூ அலறினாள்..
நல்ல வேலை ஆழமா வெட்டிக்கல.. நான் போய் டாக்டர கூட்டிட்டு வரேன் .. நீங்க போய் அந்த பொண்ணோட இருங்க… ச்சே எங்க இருந்து தான் எனக்குன்னு வந்து சேருதுங்குங்களோ.. பொலம்பிட்டே போனாள்.. அந்த நர்ஸ்..
மயூ அனுவை பார்க்க ஓடினாள்..
முகிலனும் அனுவின் நிலைமை பார்த்து வருத்தப்பட்டான்.. உடனே அவனும் அனுவை பார்க்க நினைத்தான் ஆனால் இப்போ போய் பார்த்தா விபரீதமா அனு முடிவு எடுத்துடுவா… வேணாம்..
முதல்ல அனுவ இப்படி பண்ணவனை கண்டு பிடிக்கணும்…எப்படினு தனக்குள் பேசிய படியே திரும்பியவன் .. சிவாவும் சுந்தரையும் பார்த்துட்டுட்டான்.
முகிலன் சட்னு திரும்புவான்னு சிவாவும் சுந்தரமும் எதிர் பார்க்காததால் பயந்து போனார்கள்..
முகிலன்
இருவரையும் பார்த்ததும் … சந்தேகம் வந்தது..
இவங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கே.. எங்க பாத்தேன் யோசனையில் இருக்க..
அய்யோ…. பார்த்துட்டான் டா அப்படியே நைசா நழுவிடு…
அவர்கள் போறதையே பாத்துட்டு இருந்தவன்..மைன்டில் சடார் னு மின்னல் வெட்டியது..
அந்த ரெண்டு பேர்ல ஒருத்தன அன்னைக்கு காலேஜ்ல என் மேல மோதினவன் போல இருக்கே அவன் யோசித்து கொண்டிருக்கும் போதே..
சிவாவும் சுந்தர்ரும் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே நைசா நழுவி போறதை பார்த்ததும்.. முகிலன்க்கு சந்தேகம் வந்தது..
நிச்சயம் அனுவுக்கும் இவன்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு…
அவன்களும் திரும்பி பார்த்துட்டே போகவும்..
சந்தேகமே இல்லாமல் முகிலன்க்கு தெரிந்து போனது… . அவங்க பின்னாடியே போனான் …
முகிலன் பின்னாடியே வருவதை பார்த்ததும் சிவாவும் சுந்தரமும் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடினார்கள் ..
சிவாவை துரத்தி கொண்டே ஓடினவன்… கால் தடுக்கி கிழே விழ.. அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கொண்டு ஓடிவிட்டான் … ச்சே மிஸ் பண்ணிட்டோமே…
தப்பே செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் வலி கொடியது.. . ?
…….. உயிர் துடிக்கும்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…