உண்ண மறந்தேன் ஆடை
உடுக்க மறந்தேன்-கண் இமை மூடாமல்
உறங்க மறந்தேன்
உன்னில் என்னை தொலைத்துவிட்டு -செய்வதறியாது உறைந்து நிற்கிறேன் – ஆமாம்? உனக்கும் எனக்கும் என்ன உறவு? – நிச்சயம் உன்னதமானதாகத்தான் இருக்கும்.
நான் இஷ்டப்பட்டுத்தான் இருத்தேன் -உன் இஷ்டமானவளாக – ஏனோ உன் நினைவு அவ்வபோது வந்து என்னை கட்டிபோடுகிறது
சொல்லி புரியவைக்க முடியுமா அலைபாயும் மனதுக்கு ஐந்தாறு திங்கள் பொறுத்திரு என் மனமே – உன் சிந்தையை ஆட்கொண்டவன் ஆகாயத்தில் பறத்துவருவன் – உன் கலி போக்க என்று!!!!
அறுவது வயதை தாண்டினாலும் – நீ ஆரத்தழுவும் போது அத்தனையும் மறந்து போகும் – உன் வயதும் கூட
மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் – உனக்கும் எனக்கும் உன்னில் பாதி நான் – ஆம் என் வயது உங்களின் அனுபவம் – ஆமாம்? எப்படி ஆட்கொண்டாய் என்னை? – புரியாத புதிராகவே இருக்கின்றது இன்னும்.
என் நாடி நரம்புகளின் மூலம் செல்களில் பாய்ந்தோடும் குருதியில் கலந்து – என் மார்பு கூட்டுக்குள் மையம் கொண்ட புயலாய் – என் எண்ண சிதறல்களில் நிலை கொண்டாய்.
ராமனின் கால் பட்டதும் கல்லும் பெண்ணானது போல் துஷ்யந்தனின் கை பட்ட மோதிரத்தால் சகுந்தலையின் வாழ்வில் ஒளி பெற்றது போல் உன் கை பட்டு எனக்குள் இருந்த – நீ சட்டன வெளிப்பட்டு – என்னில் சதுரங்கம் ஆடுகிறாய்.
காத்து இருக்கிறேன் – உன்
கைகளுக்குள் தஞ்சம் புகுந்து
தவிக்கின்ற மனதுக்கு மருந்தாக – நீ
கொடுக்கும் முத்தத்திற்காக!!!!!!!