நாளை வார விடுமுறை என்ற எண்ணமே உற்சாகத்தை தந்தது சத்யாவுக்கு இருப்பினும் ஓய்வு எடுக்க முடியாது. மாவு அரைப்பது ,துணி துவைப்பது , வீடு கழுவுவது போன்ற வேலைகள் முடித்தால் தான் அடுத்த ஒரு வாரம் சமாளிக்க முடியும் என்று தோன்றவே உற்சாகம் வடிந்தது அவளுக்கு .
சத்யா ;கணேசன்-சித்ரா வின் ஒரே செல்ல மகள் . படிப்பில் படு சுட்டி. காலேஜில் கோல்டு மெடலிஸ்ட். தவிர அனைத்து தனி திறமைகளும் உண்டு. பள்ளி,கல்லூரி விடுமுறை நாட்களில் வீட்டில் சும்மா இருப்பதை விரும்பாதவள் . ஏதாவது புதுசாக கற்க வேண்டும் என்று விரும்புவாள் அல்லது ஓவியம் வரைவதில், கவிதைகள் எழுதவதில் நேரத்தை செலவிடுவாள் . அதை வார மலர்க்கு அனுப்புவது போன்ற விஷயங்கள் அவளுக்கு மிகவும் பிடித்தாமனவை..
கல்லூரி படிப்பின் போதே கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டாள் . ஐடி கம்பெனியில் ஒரு வருடம் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அவளுக்கு திருமணம் நடைபெற்றது .
சரண் – அவனும் ஒரே மகன் நாரயணன்- லட்சுமி தம்பதிக்கு .. தந்தை ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர் . கோவையில் சொந்த வீடு உள்ளது.. சரணின் அப்பா வழி மாமா கணேசனின் நண்பர் . அவர் மூலமாக இரு வீட்டாரின் சம்மததுடன் சத்யா-சரண் திருமணம் இனிதே நடைபெற்றது.
திருமண விடுமுறை முடிந்து இருவருமே சென்னையில் புது வாழ்க்கையை தொடங்கினர்.
சரண் மிகவும் நல்ல மனிதன் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை. மனைவி சத்யாவை மிகவும் நேசித்தான். இருவரும் ஆனந்த கடலில் மூழ்கினர். குறைவின்றி குடும்ப வாழ்க்கையை இனிதே கழித்தனர் அவ்விருவரும் .
ஒருநாள் மாலை வேளையில் என்னங்க எங்க அலுவலக கட்டிடத்துக்கு கீழேயே புதுசா ஒரு மிருதங்க வகுப்பு ஆரம்பிச்சு இருக்காங்க . நான் அதுல சேரலாம்னு இருக்கேன் என்று கூறினாள். அவனோ பாரு சத்யா, நான் உன்னை டிஸ்கரேஜ் பண்றேனு நினைக்காதே . இதே நீ கால்ல பம்பரம் கட்டிட்டு ஓடுற. உன்னை பார்க்கவே பாவமா இருக்கு. நான் வாங்குற சம்பளத்துக்கு நீ வேலை பார்க்கணும்னு அவசியமே இல்லை . இருந்தாலும் உன் ஆசைக்காக அதை அனுமதிக்கிறேன். இதுல இந்த மாதரி நேரத்தை வீணடிக்கற வகுப்புலாம் வேண்டாம். சத்யாவுக்கு தூக்கி வாரி போட்டது . நேரத்தை வீணடிக்றதா ம்ம்ம் மனைவியை வேலைக்கு அனுப்புவதே பெரியது என்று நினைக்கும் இந்த தியாகச் செம்மலிடம் வேறு என்னத்த பேச என்று அமைதியானாள்.
அலுவலக நேரத்தில் லன்ச்ஸடைம், டீம் அவுடிங் போது கிடைத்த நேரத்தை வீணடிக்காது ஒரு பிளாக் உருவாக்கினாள். அது மிகுந்த வரவேற்பை பெற்றது. என்னங்க இந்த வருஷத்துக்கான பிளாக்கர்ஸ் அவார்டில் என்னை தேர்வு செஞ்சு இருக்காங்க என்றாள் கணவனிடம். ஓ ,வாழ்த்துக்கள் சத்யா , அப்புறம் நீ அரைத்த தோசை மாவில் உப்பு கொஞ்சம் அதிகமா போட்டு அரைச்சு இருக்க . நீ ஒன்னும் கவலை படாதே நான் பக்கத்து
கடையில தோசை மாவு வாங்கி கலந்து உனக்கு சரி பண்ணித் தந்துரேன் ,என்றான். சத்யாவிற்கு சிரிக்கவா , அழவா என்று இருந்தது ..
ஒருமாதம் கழிந்த நிலையில் கணவனை நன்றாக புரிந்து கொண்டிருந்தாள் சத்யா.. அவன் மிகவும் நல்லவனே . ஆனால் மனைவியின் தனித்திறமையை ரசிக்கத் தெரியாதவன். அவள் வார்க்கும் தோசைகளை ஆவலுடன் ஆசையாய் உண்பவன் . எனினும் அவள் சமீபத்தில் மாவட்ட அளவில் நடந்த சமையல் போட்டியில் முதல் பரிசு பெற்றதை பாராட்டமல் இருப்பவன். அவளை ஊக்குவிக்கும் எண்ணமோ வாழ்த்தும் எண்ணமோ துளியும் இல்லை அவனிடம். ஆனால் அவர்களுடைய ஓய்வு பொழுதில் அவளை சினிமாவிற்கு அழைத்து செல்வது , வீட்டு வேலையில் அவனால் இயன்ற சிறு சிறு உதவிகளை அவளுக்கு செய்வது என்று இருந்தான்.. மிகுந்த யோசனைக்குப் பிறகு அவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.
மறுநாள் மேனேஜரிடம் சார் நான் என் வேலையை விடலாம்னு இருக்கேன் இன்னேக்கே பேப்பேர் போட போறேன். ஏம்மா சத்யா திடிரீன்னு இந்த முடிவு . ஆமா சார் வெறும் பணத்துக்காக மட்டும் நான் இங்க வேலை பார்க்கலை . நிறைய கத்துக்கணும்னு நினைச்சேன் . ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் அவ்வளவு நேரம் பெண்களுக்கு கிடைக்காது ன்னு புரிஞ்சுகிட்டேன் என்று சொல்லி கிளம்பினாள் .மேனேஜர் குழம்பி போய் அவள் செல்வதேயே பார்த்தார்.
அவளோ தன் மனதிற்குள் என் கணவர் மிகவும் நல்லவர்தான். ஆனால் என்னுடைய தனிப்பட்ட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தெரியவில்லை .நானாவது அவர் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவரை புரிந்து நடந்து கொள்கிறேன் . திறம்பட குடும்பம் நடத்துவதும் , பெற்ற பிள்ளைகளை நல்ல மானுடனாய் வளர்த்து இச்சமுதாயத்திற்கு அளிப்பதும் மிகப் பெரும் சாமர்த்தியம் தான் என்று நினைத்தவாறே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள் .. நூற்றுக்கும் மேற்பட்ட விருதை வாங்கிய தன்னை காட்டிலும் தனக்காக தன் அப்பாவிற்காக சகலத்தையும் தியாகம் செய்த அவளுடைய அம்மாதான் இப்பொழுது அவளுக்கு உயர்வாகத் தோன்றினாள்..
Never hesitate to say you are a housewife.. Always feel proud to be say am a housewife ..
இக்கதை எல்லா இல்லத்தரசிகளுக்கும்
சமர்ப்பணம்.. அம்மாதரசி பெற்ற நல்மைந்தர்களுக்கும் சமர்ப்பணம்.