சிறிது நேரம் அவன் சொன்னதையே அவள் மனதுக்குள் ஓட்டிப் பார்த்தவாறு நிற்க,

“இன்னும் எவ்வளவு நேரம் தான் நிற்க போற??? லைட்டை ஆஃப் பண்ணிட்டு தூங்கு” அவன் சத்ததில் வேகமாக அவன் சொன்னதை செய்தாள் அந்த பாவை. கோபமாக கூறினாலும் அவன் வார்த்தை அவளை காயப்படுத்தவில்லை மாறாக நிம்மதியை அளிக்க, கண்ணயர்ந்தாள் அவள்…

இசை தூங்கிவிட அமுதன் தூக்கம் வராமல் கொட்ட கொட்ட முழித்திருந்தான்.. இவ்வளவு நாள் அவன் தனி மனிதன்… பெரிதாக எதுவும் அவன் சேர்த்து வைத்ததில்லை.. ஏதோ விவசாயத்தில் வரும் பணத்தை பேங்கில் அவன் பெயரில் போட்டு வைத்திருந்தான்.. பெற்றோர் வாழ்ந்த வீடு என்பதால் அவனுக்கு வீட்டை மாற்றும் எண்ணமும் தோன்றவில்லை…

ஆனால் இன்று தன்னை நம்பி ஒருத்தி வந்துவிட்டாள்… அதுவும் யாருக்காக அவன் இந்த ஊரை விட்டு போகாமல் இருந்தானோ அவளே தன்னிடம் வந்ததில் அவனுக்கு சந்தோஷம் பிறக்கவில்லை… வருத்தமே எஞ்சியது… அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு அவன் ஊரை விட்டு செல்ல நினைக்க, விதி அவளை அவனோடு கட்டிப்போட்டு விட்டதை என்னவென்று கூறுவான்…

வெகுநேரம் என்ன செய்வது என்று யோசித்தவன் மனதுக்குள் ஒரு முடிவு எடுத்த பின்னே தூங்க ஆரம்பித்தான்…

மறுநாள் காலை எழுந்தவனின் கண்கள் தாமாக கட்டிலை பார்க்க, அது வெறிச்சோடியிருந்தது. அவசரமாக எழும்பியவன் வெளியே வர, அங்கு காலையிலே குளித்து தலையில் ஈரத் துண்டைக் கட்டிக் கொண்டு அவன் வாங்கிக் கொடுத்திருந்த உடையிலிருந்த புடவையை அணிந்து, புதுத் தாலி மினுமினுக்க வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் மலரிசை..

அவளை அப்படி பார்த்ததும் அமுதன் எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கே புரியவில்லை.. அவன் வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று அவன் கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை..

அவள் கட்டியிருந்த புடவை அவளை பெரிய பெண்ணாக காண்பிக்க, தலையில் துண்டு கட்டியிருந்தாலும் அதையும் தாண்டி அவள் முகத்தில் விழுந்த முன்னுச்சி முடிக்கற்றை, அதை நாசூக்காக அவள் வலக்கை மணிக்கட்டால் விலக்கிய விதம் என அதைத்துமே அவனை மூச்சடைக்க வைத்தது… அவள் சிறு பெண் என்பதையும் மறந்து தன் மனைவியாக பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென்று அதிர்ந்தான்..

“என்னப் பண்ற அமுதா.. அவ சின்ன பொண்ணு.. அவக்கிட்ட பெரிசா கற்பனை பண்ணாதன்னு சொல்லிட்டு நீ என்னப் பண்ணிட்டு இருக்க???” அவன் மூளை அவனை அதட்ட, தன் தலையில் தட்டிக் கொண்டான்… அதற்குள் கோலத்தை முடித்தவள் அவனை பார்த்ததும் தயங்கி தயங்கி அவன் அருகே வந்தாள்..

“வீட்ல கோலப்பொடி இல்ல மாமா, அதனால அரிசி மாவுல கோலம் போட்டுட்டேன்.. சாரி..” அவன் அவளை முறைப்பது போல் பார்க்கவும் அவள் பயந்து அப்படி கூற, அவன் அருகில் தங்க சிலை போல் நிற்பவளை காணாமல் முகத்தை திருப்பிக் கொண்டு,

“உன்னை யார் புடவை கட்ட சொன்னது??? நான் தான் பாவாடை சட்டை வாங்கி தந்திருக்கேனே.. அதை போடு” தன் மேல் எழுந்த கோபத்தை அவள் மீது காட்டிவிட்டு அவன் குளிக்க செல்ல, அவள் முகம் கூம்பி போனது,..

“இந்த டிரெஸ்க்கு என்ன?? இன்னும் சின்னபுள்ள மாதிரி பாவாடை சட்டை போட்டா பார்க்கிறவங்க சிரிக்க மாட்டாங்களா???” அவனிடம் நேரடியாக கேட்கும் தைரியம் இல்லாமல் தனக்குள் கேட்டுக் கொண்டவள், சமையலறைக்கு சென்று சமைக்க ஆரம்பித்தாள்.. அவளுக்கு இது புது இடமென்றே தோன்றவில்லை.. ஏதோ காலம்காலமாக இங்கு வாழ்ந்தது போல் இருக்க இயல்பாகவே வேலைகளை செய்தாள்.

குளித்து வந்தவன் சமைப்பதற்க்காக அடுக்களைக்குள் நுழைய அங்கு அவனுக்கு அடுத்த கட்ட சோதனையை வைத்திருந்தாள் அவனது மனைவி.. சேலையை இழுத்து மேலே சொருகிவிட்டு பம்பரமாக சுழன்று வேலை செய்துக் கொண்டிருந்தாள் அவள்..

தான் அவளுக்கு காவலனாக மட்டுமே இருக்க வேண்டும் என முடிவெடுத்திருந்தவனை தன் இயல்பான செய்கையால் காந்தமாக இழுத்துக் கொண்டிருந்தாள் இசை… அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் அவன் கிளம்பிவிட்டான்..

சரியாக சாப்பிடும் நேரத்திற்கு மீண்டும் வந்தவன், அவள் சமைத்து வைத்திருந்ததை அமைதியாக சாப்பிட்டான். தனியே சமைத்து சாப்பிட்டு பழகியவனுக்கு இன்று தனக்காக ஒருவர் சமைத்து தருவது புதுவித அனுபவமாக இருந்தது. சாப்பிட்டவன் வெளியே சென்றுவிட, இசையும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

அதன் பின் வந்த வாரத்தில் அவளுக்காக தங்கத்தில் அத்தியாவசிய நகைகள் வாங்கி கொடுத்தான். அவன் அதிகம் பேசுவது இல்லை என்றாலும் அவனது கண் பார்த்து நடக்க கற்றுக் கொண்டாள் இசை.. அதில் அவளை குறித்து அவளுக்கே ஆச்சரியமே… காலை அவனுக்கு முன்பாகவே எழுபவள் குளித்து தயாராகி சமையலை தொடங்கிவிடுவாள்.. அவள் என்ன செய்து கொடுக்கிறாளோ அதை குற்றம் சொல்லாமல் உண்டுவிட்டு செல்வான் அவன். முதல் நாள் அவன் அதட்டிய பின் அவள் புடவை கட்டுவது இல்லை… எப்போதும் பாவாடை சட்டையில் தான் இருப்பாள்..

அமுதன் அவளிடம் தேவைக்கு பேசினான் என்றால் இசையோ அவனிடம் நிறைய பேசினாள். அவன் கவனிக்கிறானா இல்லையா என்பதையெல்லாம் அவள் கண்டுக்கொள்வதே இல்லை. மலர் மாமா என்று அவள் அழைக்கும் போதெல்லாம் அவனுக்கு உருகும், ஆனாலும் வெளியே விறைப்பாக நிற்பான்..

தன்னிடம் இதுவரை அவள் தங்களின் திருமணத்தை பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லை என்பதே அவனுக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. அவனை அவனாகவே ஏற்று அன்பு காட்டியவளை அவனுக்கு நிரம்ப பிடித்தது.

அதே சமயம் அமுதனும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கடுமையாக உழைத்தான்.. இதுவரை அவனது நிலத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தான் ஆனால் இனி அது மட்டும் போதாதே… இசை ஆசைப்படும் படிப்பை படிக்க வைக்க வேண்டும். அவள் பெற்றிருக்கும் மதிப்பெண்களுக்கு உதவித்தொகை கிடைக்கும் தான் என்றாலும் அவள் லட்சியத்தை அடைய அது மட்டும் போதாது..

அதனால் கையில் இருக்கும் காசை வைத்து பக்கத்து ஊரில் லீசுக்கு வரும் ரைஸ் மில்லை வாங்க நினைத்தான்…பத்து நாட்கள் அலைந்து திரிந்து அந்த ரைஸ் மில் உரிமையாளர் பாண்டியனை சந்தித்து அவனிடம் இருக்கும் தொகைக்கு பேசி முடித்தான்.

பத்திர பதிவு நாளன்று அவன் பாண்டியனுக்காக காத்திருக்க, அவர் தாமதமாகவே வந்தார். வந்தவர் மாசியுடன் வர அவன் புருவங்கள் முடிச்சிட்டது..

நிதானமாக அவனிடம் வந்தவர், “தம்பி நீ சொல்ற தொகைக்கு தோதுபடாதுப்பா.. இவர் அதை விட அதிகம் பணம் தர்றதா சொல்லியிருக்கார் அதனால அவருக்கே கொடுத்துடலாம்னு இருக்கேன்…” பாண்டியன் நயமாக பேச,

அமுதன் உள்ளுக்குள் கொந்தளித்தாலும் வெளியே கம்பீரமாகவே நின்றான்..

“சரிங்க ஐயா.. நீங்க அவருக்கே கொடுத்திடுங்க… அவர் வயசில் பெரியவர்… நான் வேற இடம் பார்த்துக்கிறேன். ஆனா நீங்க முன்னமே சொல்லியிருந்தா நான் ஒதுங்கியிருப்பேன்.” என்றவன் விட்டுக்கொடுப்பது போல் பேச மாசியின் முகம் கடுத்தது..

அவன் தோற்று தலைகுனிந்து செல்வதை பார்க்க வேண்டும் என்பதற்காகவே தான் அவர் இந்த ரைஸ் மில் விஷயமறிந்து இடையிட்டது. ஆனால் அவன் பெருந்தன்மையாக நடந்துக்கொள்வது போல் பேசவும் அங்கு அவர் தான் சிறுமைபட்டு போனார்.

பாண்டியனுக்கும் ஒரு மாதிரியாகிவிட, அமுதன் புன்னகை முகமாவே அங்கிருந்து கிளம்பிவிட்டான்..

நேராக வீட்டிற்கு சென்றவனுக்குள் அத்தனை ஆத்திரம்.. அங்கேயே மாசியை அடித்து நொறுக்கியிருப்பான் ஆனால் அவனது கோபம் எதிராளிக்கு வெற்றியை நிலைநாட்டி விடும் என்பதால் அமைதியாக இருந்தான். தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தவன் தன் கோபத்தை அடக்கும் வழி தெரியாது கனன்று கொண்டிருக்க, அது தெரியாதா இசையோ அவனை அந்த நேரத்தில் காணவும் உற்சாகமாக கையில் வைத்திருந்த நாய்க்குட்டியோடு அவனை நெருங்கினாள்.

அவளருகில் அமுதன் அவள் காலை சுற்றி வாலாட்டிக் கொண்டிருந்தது.

“மலர் மாமா இங்க பாருங்க நான் என்ன கொண்டு வந்திருக்கேன்னு..” என்றவள் அவனிடம் தன் கையில் இருந்த நாய்குட்டியை காண்பிக்க அவன் அதை திரும்பி கூட பார்க்கவில்லை..

“மாமா..மாமா.. நாய்க்குட்டி அழகா இருக்கா??? நம்ம வயல்ல தான் தனியா இருந்துச்சு மாமா… எப்படி வந்துச்சுன்னு தெரியல.. தனியா நின்னுட்டு இருந்துச்சா அதனால நான் தூக்கிட்டு வந்துட்டேன்.. பாவம் மாமா.. நான் பால் வச்சதும் அப்படியே என்கிட்ட ஒட்டிக்கிச்சு.. அதுல இந்த அழகனுக்கு ரொம்ப கோவம்.. இந்த குட்டியை நம்ம கூடவே வச்சிப்போமா???” ஆசையாக அவள் கேட்க அவன் அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லை…

“இசை போ இங்கிருந்து…” கோபத்தை அடக்கி கொண்டு அவன் அதட்ட, வெகுநாள் கழித்து பழைய உற்சாகத்தோடு பேசிக் கொண்டிருந்தவளுக்கு அவன் கோபம் புரியவில்லை..

இசையின் மலராவான்…….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago