இன்னிக்கி எங்க வீட்டுல ஆரஞ்சு பழம் வாங்கிட்டு வந்தோம். தோல் உறிச்சதும் எனக்கு இந்த ரெசிப்பி தான் நியாபகத்துக்கு வந்துச்சு. நாளைக்கு எங்க வீட்டுல பண்ணபோறேன். யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம் னு தான் உங்களுக்கும் அந்த ரெசிப்பிய சொல்ல வந்தேன்…
ஆரஞ்சு தோல் பச்சடி
தேவையான பொருள்:
ஆரஞ்சுபழ தோல்- 5 பழத்தோட தோல்
இஞ்சி -1 அங்குல துண்டு
ப.மிளகாய்- 2
புளி – 1 எ.பழம் அளவு
வெல்லம் – 10 கி.
ம.பொடி -கால் ஸ்பூன்
சாம்பார் பொடி -1.1/2 ஸ்பூன்
உப்பு -தேவைக்கேற்ப
தாளிக்க
நல்லெண்ணெய் – 75-100 மி.லி
கடுகு- அறை ஸ்பூன்
கா. மிளகாய்
க.வேப்பிலை -2 கொத்து
கட்டி பெருங்காயம் – 1 சின்ன துண்டு
ஆரஞ்சு தோல நல்ல பொடியா நறுக்கிக்கனும். இஞ்சி, பச்சமிளகாயும் நைசா நறுக்கிக்கனும். புளிய 2 டம்ளர் தண்ணில கரைச்சி வெச்சிகனும்.
அடுப்புல வாணலி வச்சு எண்ணெய் விட்டுக்கனும். நான் இங்க குறிப்பா நல்லெண்ணெய் னு சொல்றது எதுக்குனா அது தான் வாசனை, சுவை கூடுதலா தரும்.
எண்ணெய் சூடானதும் கட்டி பெருங்காயத்த போட்டு பொரிச்சு எடுத்துக்கனும். தூள் பெருங்காயத்த விட கட்டி பெருங்காயம் ஒரு அலாதி மணத்த தரும்.
பிறகு, கடுகு, காஞ்ச மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய இஞ்சி, பச்சமிளகா போட்டு வதக்கி பின்ன நறுக்கின ஆரஞ்சு தோல் சேர்த்து பச்ச வாசனை போகும் வர வதக்கனும்.
தோல் வதங்கினதும் புளி கரைசலை விட்டு சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து 10 நிமிஷம் கொதிக்க விடனும்.
தோல் வெந்து, புளி, சாம்பார் பொடியோட பச்ச வாசனை போய் பச்சடி நல்ல கெட்டியாகி வரும் போது வெல்லத்த போட்டு 2 நிமிஷம் கொதிக்க விடனும்.
எல்லாம் ஒன்னா சேர்ந்து கொதிச்சி எண்ணெய் பிரிஞ்சி வந்ததும் இறக்கி வெக்கனும்.
இது இட்லி தோசைக்கு ரொம்ப நல்லா இருக்கும். தயிர் சாதத்துக்கு ரொம்ப ஜோரா இருக்கும். ஒரு பிடி எக்ஸ்ட்ரா உள்ள போகும்.
இது என் அம்மா பண்றதுலேயே ரொம்ப ஃபேவரிட் ஐட்டம்.
உடம்பு சரியில்லாத நேரம் தான் கண்டிப்பா செய்வாங்க. குறிப்பா ஜொரத்தால வாய் கசப்பா இருக்குற நேரம் இது இருந்தா நல்லாவே சாப்பாடு உள்ள போகும்.
செஞ்சி சாப்ட்டு பாத்துட்டு சொல்லுங்க மக்களே…..
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…