ராமின் தந்தையுடன் வந்திருக்கும் நபரைப்பார்த்தவுடன் விஷ்ணுவிற்க்கு வாயடைத்துப்போனது. தொண்டைக்குள் ஏதோ சிக்கியது போன்று ஆனது. இருக்காதா பின்னே !. தான் கனவில் பார்த்த அதே நபர் நேரில் வந்தால் பாவம் அவன் என்ன செய்வான். தன்னிச்சையாகவே அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது….. ஷாக்சாத் அவன் கனவில் வந்த ராஜசிம்மனின் தோற்றத்திலேயே இருந்தான் . ஆனால் இப்பொழுது நவநாகரீக உடையில் இருந்தான் .

ஈஷ்வரபாண்டியனும் அவனும் வீட்டின் கூடத்திற்க்கு வந்தனர். அங்கு வந்தவுடன் ஈஷ்வரபாண்டியன் அங்கிருந்த விஷ்ணு , வேதா , ராம் , கௌரி ஆகியோரை புதிதாக வந்தவனுக்கு அறிமுகப்படுத்தினார் .

பின்பு புதியவனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார் . ராம் , இவர்தான் ராஜீவ் நம்ம அருணாச்சலம் இருக்காருல்ல அவரோட பையன் . இங்க பக்கத்து ஊரில் அவங்க சொந்தகாரர் வீட்டில் கல்யாணமாம் அதில கலந்துக்கிறதுக்காக வந்துருக்காரு என ஈஷ்வரபாண்டியன் கூறினார்.

உடனே கௌரி ” அருணாச்சலம் அண்ணாவின் பையனா அதான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன் . அப்படியே அண்ணாவின் ஜாடை என கூறிக்கொண்டே அவனிடம் அப்பா எப்படி இருக்காருப்பா ? அவர் உங்க கூட வரலியா “ என அவனிடம் கேட்டார் .

“ இல்ல ஆன்டி அவர்தான் இங்க வருவதாக இருந்தது . ஆனால் திடீர்னு ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு அதான் என்ன இங்க அனுப்பிட்டார் என கூறினான் .

பின்பு ராமிடமும் விஷ்ணுவிடமும் சம்பிரதாயத்துக்கு கைகுலுக்க அவர்களிடம் வந்தான் . ஆனால் விஷ்ணுவிடம் வரும்போது , விஷ்ணு அவனையே வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான் . அப்போது ராம் டேய் விஷ்ணு அவன் எவ்வளவு நேரமா கையை நீட்டிட்டு இருப்பான் . இப்படி அவனை சைட் அடிக்கிறதை நிறுத்திட்டு கையை குடுடா மானம் போகுது பக்கி “ என விஷ்ணுவின் காதோரம் யாருக்கும் கேட்கா வண்ணம் கூறினான் .

சட்டென சூழலை உணர்ந்த விஷ்ணு அவனுக்கு சிரித்த முகத்துடன் கைநீட்டினான். ஆனால் மனதுக்குள் பிரளயமே நடந்து கொண்டிருந்தது . சற்று நேரம் வெளியில் சென்று வந்தால் தேவலாம் போல இருந்தது . மேலும் அவன் அப்பொழுது அங்கு இருக்கவும் விரும்பவில்லை .

சிறிது நேரம் கழித்து ராமிடம் வந்த விஷ்ணு , “ ராம் நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்டா . வீட்டிலேயே இருக்க ரொம்ப போர் அடிக்குது . By நான் போய்ட்டு வரேன் “ என கூறினான் .

“ டேய் என்னடா நீ ? . தனியா எப்படி போக விடமுடியும் ? காலையிலதானே மயங்கி விழுந்த இப்ப நான் வெளிய போகனும்னு சொன்னா எப்படிடா அனுப்பமுடியும் ? ஒன் ஹவர் வெய்ட் பண்ணு நானும் வரேன் “ என சொன்னான் .

“ டேய் நான் டாக்டர்டா . பேஷண்ட் மாதிரி ட்ரீட் பண்ணாதே . என்னை பார்த்துக்க எனக்கு தெரியும் . ப்ளீஸ்டா நான் தனியாவே போய்ட்டு வரேன்” என சற்று காட்டமாகவே கூறினான் விஷ்ணு .
“ ஓகே ஓகே காம் டவுன்டா . நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி கத்திட்டு இருக்க . இந்த ஊர் உனக்கு புதுசு வேற எப்படி உன்னை தனியா அனுப்பறது . அதனாலதான் கொஞ்சம் தயங்கறேன் “ என்றான் .

“ இல்ல மச்சி அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் . எதுவும் ஆகாது . நான் நைட் ஆகறதுக்குள்ள வந்துட்றேன் “ என கூறியவன் ராம் அரைமனதாக சம்மதித்தவுடன் தன் காரை கிளப்பிக்கொண்டு பறந்தான்.

அந்த பிற்பகல் வேலையில் விஷ்ணுவின் வாகனம் காற்றை கிழித்துக்கொண்டு சென்றது . நினைவு தெரிந்த வயதிலிருந்து அவன் இந்த அளவிற்க்கு எந்த விஷயத்திற்க்கும் மனதை போட்டுக் குழப்பிக்கொண்டதில்லை . ஆனால் கடந்த சில நாட்களாக நடந்த நிகழ்வுகளினால் அவன் மனதில் குழப்பம் மட்டுமே பிரதான இடத்தைப் பிடித்திருந்தது .

எவ்வளவு தூரம் வந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை . “ கார் “ போன போக்கில் போய்க்கொண்டிருந்தான் . சிறிது தூரம் சென்றபின் கார் டயரிலிருந்து டமார் என சப்தம் கேட்டது . காரை விட்டு இறங்கி பார்த்தான் . “ ஹ்ம்ம் நல்லது , ட யர் வெடிக்கிற சௌன்ட் வரும்போதே நினைச்சேன் இப்படி பஞ்சர் ஆகிருக்கும்னு . என் நேரம் அவ்வளவு நல்லா இருக்கு போல “ என எண்ணியவன் காரில் கைவசம் வைத்திருக்கும் ஸ்டெப்னியை எடுக்கச் சென்றான் .

அவனின் கார் நின்றதோ ஜனசஞ்சாரமே இல்லாத ஒரு சாலையில் . அந்த சாலையின் இருமருங்கிலும் இருந்த மரங்கள் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதை மறைக்கும் வண்ணம் நன்றாக உயர்ந்து வளர்ந்து பருத்திருந்தன . மெல்ல மெல்ல வெளிச்சம் மங்கிக் கொண்டே வந்த அந்த மாலை வேளையில் சுவர்க்கோழிகளின் ரீங்காரச்சப்தம் விஷ்ணுவிற்க்கு சற்று அச்சத்தை கொடுத்தது என்னவோ உண்மைதான் . ஆனால் பயம் ஒன்றே நம் பலவீனத்திற்க்கு முதன்மையான தோழன் என்று எங்கேயோ படித்த வசனம் அவன் நினைவிற்க்கு வர தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு விறுவிறுப்பாக வேலையைச் செய்ய ஆரம்பித்தான் .

ஸ்டெப்னியை வண்டியில் மாட்டிவிட்டு எழுந்து காரின் கதவை திறக்கும்போது தன் தோளில் யாரோ கைவைப்பதை உணர்ந்தவன் சட்டென திரும்பினான் . ஆனால் அங்கே யாரும் இருந்ததற்க்கான அடையாளமே தெரியவில்லை . இது நமது இல்யூஷனாகத்தான் இருக்கும் என நினைத்தவன் மறுபடியும் கதவைத்திறக்க போகும்போது அவனின் பெயரை யாரோ கூப்பிட்டது போல் உணர்ந்தான் . திரும்பிப்பார்க்கும் பொழுது அவன் நின்ற இடத்திற்க்குப் பக்கத்தில் உள்ள புதரில் ஏதோ சலசலத்தது . அங்கு படபடக்கும் இதயத்துடன் சென்று பார்த்தான் .

அங்கும் ஏதும் இருந்ததாக அவனுக்கு தெரியவில்லை . அந்த இடமே ஒரு அசாத்திய மௌன நிலையை தத்தெடுத்துக்கொண்டிருந்தது . சரி திரும்பி போய்விடலாம் என அவன் எண்ணினாலும் அவனின் கால் அந்த இடத்திலிருந்து நகரவில்லை ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது . தூரத்தில் ஏதோ ஒளி மின்னி மின்னி மறைந்துகொண்டிருந்தது . அதன்பால் ஈர்க்கப்பட்ட விஷ்ணு அதை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

அதன் அருகில் செல்ல செல்லத்தான் தெரிந்தது அது ஒரு குகை என்று . குகையினுள் ஏற்றி வைத்த விளக்கு வெளிச்சம்தான் நாம் முன்னர் பார்த்த ஒளியாக இருக்கும் என்று ஊகித்தான் . அவன் இதற்க்கு முன்னர் இம்மாதிரி இடங்களை கதைகளிலும் திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்திருந்தான் . இப்போது அதை நேரில் காண்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக அவனுக்கு இருந்தது .

குகைக்குள்ளே போகலாமா? வேண்டாமா ? என ஒரு வினாடி யோசித்தவன் “ போய்த்தான் பார்ப்போமே., இந்த ஹாண்டட் ப்ளேஸ் மாதிரி இருக்கிற லொகேஸன்ல வாழற அந்த தைரியசாலிய பார்த்திடலாம் “ என்ற நினைப்புடன் அக்குகையினுள்ளே சென்றான் .

குகைக்குள் நுழையும்போதே ஒரு விதமான சகந்தமான நறுமனம் நாசியைத்துளைத்தது . இவன் குகையினுள் ஒரு நான்கு அடி எடுத்து வைத்ததும் பின்னால் ஏதோ பாறை புரளும் சப்தம் பின்புறமாக கேட்கவே வந்த வழியே திரும்பிப் பார்த்தான் . பார்த்தவனின் விழிகள் பயத்தில் விரிந்தது . ஏனெனில் குகையின் வாயிலே தெரியவில்லை . பாறையால் குகையின் வாயில் மூடப்பட்டிருந்தது . வேகமாக அங்கு சென்று அந்த மூடிய பாறையை அகற்ற அவன் செய்த எந்த முயற்ச்சியும் பலனளிக்கவில்லை . என்னதான் உடற்பயிற்சி செய்து உடம்பை முறுக்கேற்றி கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலும் பாறையையே தள்ளும் அளவிற்க்கு அவன் தயாராகவில்லை .

“ இப்படியே செய்துகொண்டிருந்தால் தன் ஆற்றல்தான் வீணாகும் . துனிந்து இறங்கிவிட்டோம் இனி வருவது வரட்டும் . முன்னே சென்று அப்படி இங்கே யார்தான் இருக்கிறார்கள் என்று பார்த்துவிடலாம் “ என்ற அசாத்திய துணிச்சல் அவனுக்குள் ஊற்றெடுக்க அவன் முன்னேறி சென்று கொண்டிருந்தான் .

அந்த குகையின் அமைப்பும் அங்கு ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்த தீப்பந்தங்களினால் தெளிவாக தெரிந்தது . அந்த குகை சற்று விசாலமாகவும் நீண்டதாகவும் இருந்தது . அதன் சுவற்றில் சில கடவுளர்களின் உருவங்களும் பழைய சங்ககால தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருந்தன . அந்த சுகந்த நறுமணம் மட்டும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே வந்தது . அங்கு ஒருவிதமான குளுமையை அவனால் உணரமுடிந்தது .

கிட்டத்தட்ட பத்து நிமிட நடைபயணத்தில் அவன் கால் ஓரிடத்தில் நின்றது . “ வா விஷ்ணு , உனக்காகத்தான் இத்தனை காலமாக நான் காத்திருக்கிறேன் . உன்னை இவ்விடத்திற்க்கு வரவழைக்க எனக்கு எத்தனை நாட்கள் ஆகிவிட்டது “ என்ற மென்மையான சற்று வயதான ஆணின் குரல் கேட்டது .

குரல் வந்த திசையை நோக்கியவன் அங்கிருந்தவரைக்கண்டு அதிசயித்துத்தான் போனான் . அப்பைத்தியக்காரன் முற்றிலும் வேறு விதமான தோற்றத்துடன் அமர்ந்து கொண்டிருநதான். அசாத்திய ஒளி வீசும் கண்கள் , நெற்றியில் விபூதிப்பட்டை , தூக்கிக்கட்டிய ஜடாமுடி , இடுப்பில் ஒரு காவித்துண்டு , மெலிந்த தேகம் என பார்ப்பதற்க்கு அக்மார்க் சித்தபுருஷர் போன்ற தோற்றத்தில் காட்சியளித்தார் . அவர் இடத்தில் இருந்த வெட்டிவேர்தான் அந்த சுகந்தத்திற்க்கு காரணம் என நொடியில் ஊகித்தான் .

அவரைக் நோக்கியவனின் கண்களில் அரைடஜன் கேள்விக்குவியல்கள் உள்ளதை அவர் கண்டுகொண்டாரோ என்னவோ ? அவனைப்பார்த்து புன்னகைபுரிந்துகொண்டே இருந்தார் . பின்பு “ நீ என்னிடம் கேட்க நினைத்ததை கேள் விஷ்ணுவர்மா “ என கூறினார் .

முதலில் தயங்கியவன் பின்பு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “யார் நீங்க… எதுக்கு என்னையே சுத்தி சுத்தி வரீங்க.. உங்களுக்கு என்ன வேணும். ஊருக்குள்ள பிச்சைக்கார வேஷம்… இங்க முனிவர் வேஷம்… ஏன் இப்படி என்னை மென்டல் ஆக்குறீங்க … இங்க என்னதான் நடக்குது …” ஆதங்கத்துடன் கேள்வி மேல் கேள்வி கேட்டான். விஷ்ணு .

“நான் ஒரு சந்நியாசி . இதுதான் என் இருப்பிடம் . இபொழுது இது மட்டும் போதும் .நீ கேட்கும் மற்ற கேள்விகளுக்கெல்லாம் நிச்சயமாக கூடியவிரைவில் உனக்கு பதில் கிடைக்கும் . அதற்க்கான பதில் உன்னிடமே உள்ளது “ எனக்கூறி மேலும் அவனை குழப்பினார் .

“ அட என்னய்யா இது இருக்குற தொல்லை பத்தாதுன்னு இவர் வேற நம்மைப்போட்டு இப்படி படுத்துறாரே “ என உள்ளுக்குள் குமைந்தான் விஷ்ணு .

அவன் அமைதியாக இருப்பதைப்பார்த்து தொடர்ந்த அவர் ஒரு சிறிய புன்னகையினூடே தன் பேச்சினைத் தொடங்கினார் . “ விஷ்ணுவர்மா , சமீப காலமாக உன் மனதில் ஒரு பிரச்சனை இருந்துகொண்டு அது உன் நிம்மதியை அரித்துக்கொண்டே இருப்பது உண்மைதானே ? கனவில் கண்ட காட்சிகளை எண்ணி நீ குழம்பிக்கொண்டிருப்பது உண்மைதானே ? என கூறியவுடன் விஷ்ணுவிற்க்கு தூக்கி வாரிப்போட்டது.

“ இந்த கனவைப் பற்றி நான் என் ஃப்ரண்ட்ஸ் கிட்டவே சொல்லல . இன்ஃபாக்ட் நான் யார்கிட்டவும் இதைப்பற்றி சொல்லலையே அப்புறம் எப்படி இவருக்குத் தெரியும் . இம்பாசிபிள் இது எப்படி சாத்தியமாகும் . “ என யோசிக்க ஆரம்பித்தான் . அவன் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான் . ஆனால் அதற்க்காக அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புபவன் அல்லவே . அதனால் அவரை நம்ப சிறிது தயக்கமாக இருந்தது அவனுக்கு .

“ உடனே அப்பெரியவர் உன் நண்பர்களிடம் கூட நீ சொல்லாத விஷயம் எனக்கு எப்படி தெரியும் என்றுதானே நினைக்கிறாய் . கவலைப்படாதே உன் அனைத்து கேள்விகளுக்கும் விடை நாளை பொழுது முடிவதற்க்குள் உனக்குத் தெரிந்துவிடும் . இப்புவியில் ஜனித்த அனைத்து உயிர்களும் ஏதோவொரு முக்கிய நோக்கத்திற்காகவே பிறந்துள்ளன . சில மனிதர்கள் அவற்றைப் புரிந்துகொள்ளாமல் காலத்தை வீணடிக்கின்றனர் . உன்னுடைய ஜனனமும் முக்கியமான நோக்கத்திற்க்காக சிருஷ்டிக்கப்பட்டது . கண்களை மூடிக்கொண்டு அந்த இறைவனை மனத்தில் நிறுத்தி , மனதை ஒருமுகப்படுத்தி நீ யார் என்றும் உன் பிறப்பின் நோக்கம் என்ன என்றும் உன்னை நீயே கேட்டுப்பார் “ என கூறினார்

அவரின் மேல் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வர ஆரம்பித்தது அவனுக்கு . இவரிடம் இதற்க்கு ஒரு தீர்வு இருக்கும் என எண்ணிய விஷ்ணுவோ “ என்னால இதெல்லாம் ரொம்ப அப்நார்மலா இருக்கு . என்னை சுத்தி நடக்கிறது எல்லாம் வித்தியாசமா இருக்கு ,எனக்கு ஏன் இப்படி நடக்குதுன்னு நான் இப்பொவே தெரிஞ்சுக்க முடியாதா ?” என கவலையுடன் கேட்டான் .

அதற்க்கும் புன்னகையேயே பதிலாக அளித்தவர் நீ வந்த வழி இப்பொழுது திறந்திருக்கும் . விரைவாக உன் இருப்பிடத்திற்க்கு செல் எனக் கூறியவர் அவரின் இருக்கையிலிருந்து எழுந்து அவனுக்கு எதிர்ப்புறமாக செல்ல ஆரம்பித்தார் . விஷ்ணுவும் “ இனி இவர்கிட்ட எதுவும் கேட்க முடியாது” என நினைத்து வந்ந வழியே திரும்பி நடந்தான் .

அவர் கூறியது போல அந்த குகையின் வாயில் தற்போது திறந்தே இருந்தது . இவன் வெளியே வந்தவுடன் அது மறுபடியும் பழைய நிலைக்குச் சென்றது . ஏதோ மாயாபஜாருக்குள் நுழைந்து வெளியே வந்தது போல் இருந்தது அவனுக்கு .

இப்பொழுது நன்றாக இருட்டி இரவு வந்து விட்டது என்பதை நட்சத்திரங்கள் கண்ணைச் சிமிட்டிக் காட்டிக்கொண்டிருந்தன . விஷ்ணுவின் மனதும் இப்பொழுது ஏனோ சற்று நிம்மதியாக இருந்தது .

வீட்டிற்க்குள் நுழைந்த விஷ்ணுவை முதலில் எதிர்கொண்ட ராம் “ டேய் எரும மாடு , அறிவு கெட்டவனே , பன்னி , குரங்கு எங்க போய் தொலைஞ்ச . எத்தனை முறை கால் செய்யறது . அட்லீஸ்ட் மெசேஜ் பண்ணியா பக்கி . எவ்வளவு நேரம் வெய்ட் பண்றது உனக்காக “ என சகட்டு மேனிக்கு திட்டிக்கொண்டே சென்றான் .

“ லோ பேட்டரி ஆகிடுச்சு மச்சி , மேட்டர சொல்றதுக்குள்ள தையாதக்கானு குதிக்கிறியே . அதான் இப்போ வந்துட்டேன் இல்ல அப்புறம் என்ன? என சொன்னான் விஷ்ணு .

” என்னவோ பண்ணி தொலை . நீ என்ன பண்றன்னு ஒன்னுமே புரியமாட்டேங்குது . ஒரு மார்கமாதான் சுத்திட்டு இருக்க ” என கூறினான் ராம் .

” டேய் போதும்டா ரொம்ப அலட்டிக்காத . ஓவர் சென்டி உடம்புக்கு ஆகாது மச்சி ” . என அவனை கேலி செய்தான் விஷ்ணு .

சற்று நேரத்திற்க்குப்பின் தன் அறைக்குள் நுழைந்த விஷ்ணு அந்த குகையில் பார்த்த அவர் சொன்னது போல் செய்ய ஆரம்பித்தான் .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Madhumathi Bharath

Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

Share
Published by
Madhumathi Bharath

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago