கல்லூரியில் கடைசி நாள் தேர்வு முடிந்து பலரும் தங்களுக்குள் இருக்கும் பாசத்தை பொழிந்து கொண்டிருந்தனர்.
சிவா மட்டும் தான் பல நாட்களாக கொடுக்க நினைத்த காதல் கடிதத்தை எடுத்துக்கொண்டு நிவேதாவை தேடிச்சென்றான்.
இரண்டு ஆண்டுகள் சொல்ல நினைத்து பயத்தால் ஒருதலை காதலாகவே மனதோடு இருந்த காதல் வெற்றி பெற வேண்டும் என்பது அவன் எண்ணம் இல்லை. சொன்னால் மட்டும் போதும் என்பதே..
நிவி, “நான் உன்ன லவ் பண்றேன். இந்தா..” என்று கடிதத்தை நீட்டினான்.
“நீங்க என்னை ஒன்றரை வருசத்துக்கும் மேல பாலோ பண்ணுறீங்கனு தெரியும். ஆனா நீங்க சொல்லவே இல்லை காதலை. அதனால …..!!!” என்று இழுத்தாள்.
“எதுவா இருந்தாலும் சொல்லு நிவி. ப்ளீஸ்…”
“உங்க ப்ரண்ட் அசோக் கூட நேத்து தான் நான் கமிட் ஆனேன். அதனால உங்க காதல ஏத்துக்க முடியாது அண்ணா” என்றாள்.
கூடவே இருந்து ஒன்னத்தையும் சொல்லாம விட்டுட்டானே என்று இதயம் நொறுங்கி போனது அவனுக்கு.
- சேதுபதி விசுவநாதன்