நல்லவனின் கிறுக்கி
கிறுக்கல் 1
பயணிகளின் அன்பான கவனத்திற்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் டெல்லி எஸ்பிரேஸ் இன்னும் சற்று நேரத்தில் பிளாட்போர்ம் நம்பர் 6 ல் இருந்து புறப்பட உள்ளது
20 21 22 23 24 தோ என் சீட் ஹலோ இது என் சீட் கொஞ்சம் எழுந்திரி…என்றான் நம் கதையின் நாயகன் உதய்..
உன் ஏஜ் என்ன… என்றால் அவள்..
வாட் ?? எதுக்கு கேட்குற …
சொல்லு சும்மா தான்
25 …. என்றான் உதய்
நான் 28 இப்படி தான் யார்னு தெரியாத பொண்ணுகிட்ட பேசுவியா…
ஓஹ் கொஞ்சம் எழுந்திரிக்கிங்களா மேடம்…
இது ஓகே..இது என்னோட சீட் உன் சீட் இது இல்ல என்றால் அவள்..
இது s4 தான என்றான் உதய் அதற்கு அவள் பதில் கூறாமல் போன் நொண்டி கொண்டு இருக்க..
ஹலோ மேடம் உங்களை தான் கேட்குறேன் சொல்லுங்க..
ஓஹ் இது s3 என்றால் அவள்..அவனை பார்க்காமல்
ரொம்ப திமிர் தான் இவளுக்கு அப்படி என்னதான் பண்ரா இவ என்று அவன் எட்டி அவள் போனே பார்க்க .. அவள் மும்மரமாக முக புத்தகத்தில் யாரிடமோ சாட் செய்து கொண்டு இருந்தாள்..
மறுபடியும் அவளிடம் ஏதோ கேட்க முயல அவள் பதில் சொல்லாமல் இருக்க கடுப்பான ஹீரோ பக்கத்தில் உள்ள வேறு நபரிடம் அண்ணா இது s4 தான என்று கேட்க..
ஆமாம் பா s4 தான்.. அப்போ இவ தான் நம்ப சீட் ல உட்கார்ந்து இருக்கா..
ஒய் இது என் சீட் …
உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா .. ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசு
சரிங்க மேடம் இது என் சீட்..
அது எனக்கும் தெரியும் அங்க ஜெண்ட்ஸ் இருக்காங்க அங்க என்னால உட்கார முடியாது சோ நான் உங்க சீட் ல உட்காந்துக்குறேன் சரியா..
மம்ம்ம்ம் சரி சரி…
நன்றி.. என்று மறுபடியும் போன் நோண்ட ஆரம்பித்தாள்..
உங்க பேர் என்ன ..
என் பேரு கார்த்திகா … அப்போ அங்கு டிக்கெட் செக்கர் வர உதய் சென்று அவன் டிக்கெட் பார்க்கும் சாக்கில் அவளின் பெயர் மட்டும் வயதை பார்க்க அது 23 என்று இருக்க .. பிராட் பொய் சொல்லி இருக்கியா நீ இரு டி .. இன்னும் 3 நாள் என்கூட தான் நீ ட்ராவல் பண்ண போற .. உண்ண என்ன பன்றேன் பாரு என்று அவன் மனதில் நினைக்க … பாவம் அப்போது அவனுக்கு தெரியவில்லை இவளிடம் அவன் மாட்டி பட போகும் பாடு..
கார்த்திகா நீங்க என்ன படிச்சி இருக்கீங்க
ம்ம்ம் 12 த் …
ஓஹ் ஏன் அதுக்கு மேல படிக்கல..
இல்லை நின்னுட்டேன்..
ஓஹ் ஏன் படிப்பு வரலையா
எப்படி சார் இவளோ கரெக்ட் ஆஹ் சொல்றிங்க…
உண்மையவா…
ஆமாம் 10 தடவை 10 வது புடிச்சேன் .. 12 தடவை 12 வது படிச்சேன்…
உண்மையவா…
உண்மை தான் ..
என் பொய் சொன்னிங்க உங்களுக்கு 23 வயசு தான..
ம்ம்ம்ம் நீங்க மட்டும் ஏன் வா போ னு பேசுனிங்க .. அதான் பொய் சொன்னேன்
நீ பார்க்க சின்ன பொண்ணு நினைச்சு பேசிட்டேன்..
எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஒரு பையன் இருக்கான்…
ஓஹ் சூப்பர்.. ஏன் இவளோ சீக்கிரம் பண்ணிக்கிட்ட..
ம்ம்ம்ம் வேண்டுதல் …
ஒய் சும்மா சொல்லு நான் ஒன்னும் மத்த பசங்க மாதிரி கிடையாது..
ம்ம்ம்ம் சும்மா தான் என்று மறுபடியும் செல் போன் நோண்ட ஆரம்பித்தாள்..
மணி 11 ஆகுது இந்த டைம் ல ஏன் சாட் பண்ற …
எனக்கு நெறய அண்ணா இருக்காங்க அவுங்களுக்கு நான் குட் நைட் சொல்லலைன தூங்க மாட்டாங்க…
மொக்க போடாம போய் தூங்கு .. அன் டைம் சாட் பண்ணாத…
ஓஹ் ரொம்ப நன்றி கிரேட் அட்வைஸ் .. நான் எப்போதும் 11 மணிக்கு மேல ஒன்லைன்ல இருக்க மாட்டேன் … பை என்று சொல்லி மேல ஏறி படுக்க சென்றால்..
நான் எதுக்கு இவ கிட்ட சொன்னேன் .. அவளோட ப்ரைவசி குள்ள நான் எதுக்கு போனேன்..
ஹே கிருத்திகா சாரி .. நான் ஒன்னும் சொல்ல எனக்காக நீ போன் ஆஃப் பண்ண வேணாம் .. நீ சாட் பண்ணு…
இட்ஸ் ஓகே..
அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது..ஐயோ நைட் அவளை டென்ஷன் ஆக்கிட்டோம் இப்போ பேசுவளா னு தெரிலயே… டேய் உதய் கண்டிப்பா அவ உண்ண உதைக்க தான் போரா எதுக்கும் அவ கிட்ட பேசாத
அம்மு குட்டி ல அம்மா நாளைக்கு வந்துடுவேன் அழாதிங்க.. அப்பா கூட சமத்தா இருக்கனும்.. ஒய் செல்லம் இங்க பாரு வீடியோ கால் வா அம்மா வை பாரு..இப்போ என்று கால் கட் செய்து வீடியோ கால்ஆன் செய்தால் ..
யாரு என்று உதய் செய்கையில் கேட்க
என் பையன் பேசுரியா.. என்று இவளும் ஒருமையில் அழைக்க
ஹாய் அஜி தங்கம் அம்மாவோட ஃபிரின்ட் உன்கிட்ட பேசானுமாம் இந்தா…
ஒய் ஏண்டி என்கிட்ட கொடுக்குற …
சும்மா தான் பேசுங்க அவன் கிட்ட ..
ஹாய் அஜி எப்படி இருக்கீங்க..
நான் நல்லா இருக்கேன் மாமா… நீங்க குட் பாய் தான எதுக்கு அழுகுறிங்க ..
நான் அழுகல ஜாலியா தான் இருக்கேன்..
சரி இந்தாங்க உங்க அம்மாகிட்ட பேசுங்க..
செல்லக்குட்டி நீ நான் இல்லாம ஜாலியா இருக்கியா .. நீ மட்டும் தானா இல்ல உங்க அப்பாவுமா … இன்னும் 2 நாள் தான் நான் வந்து இருக்கு உங்க 2 பேருக்கும்..
அடுத்த அவள் அண்ணா வுக்கு போன் செய்து நேற்று நடந்தது ஒன்று விடாமல் சொல்ல.. 1 மணி நேரம் ஆகியும் அவள் போன் கிழ வைத்த பாடில்லை…
(வாய் திறந்தா முடவே மாட்டா போல… எப்படி தான் பேசிட்டே இருக்கானு தெரில்ல…) அடுத்த கால்… அவளின் அம்மாவிடம் இருந்து…
அம்மா நான் என்ன குழந்தையா எனக்கு தெரியும் நான் பத்திரமா போய்ட்டு வரேன் 2020 என்னோட சாதனை இது தான்.. சரி நான் அப்புறம் பேசுறேன்…
ஒய் பேசி முடிச்சிட்டியா உன்ன பத்தி சொல்லு..
எதுக்கு ???
நீ தான் எல்லார்கிட்டையும் நல்லா மொக்கை போடுறியே … உன்கிட்ட பேசுனா ஈசியா டைம் பாஸ் ஆகும் சொல்லு
நீங்க கேளுங்க நான் சொல்லறேன்..
என்ன படிச்சி இருக்க …
நான் 12 த் இப்போ தான் படிக்க போறேன்..
உன் ஹஸ்பண்ட் என்ன பன்றார்
அவரு ஒர்க் பன்றார்..
ஹே அது எனக்கு தெரியாதா எங்க ஒர்க் பன்றார் சொல்லு..
ஹலோ பாஸ் கேட்குற கேள்வியை தெளிவா கேட்கணும்…
சரி மா இனி தெளிவா கேட்குறேன் ..
உங்க வீட்டுக்காரர் எங்க ஒர்க் பன்றார்..
அவர் ஒரு கம்பெனி ல மேனஜர்..
ம்ம்ம் நீ என்ன பண்ற..
நான் எங்க அப்பா கடைய எடுத்து நடத்துறேன்..
ம்ம்ம்ம் …
உங்க இன்டெர்வியூ முடிஞ்சிதா … இல்ல இன்னும் இருக்கா…
ஹா ஹா இன்னும் இருக்கு.. கொஞ்சம் பொறு மா..
ம்ம்ம்ம் சரி சரி..
நீ எந்த ஊர்..
ஏன் எங்க வீட்டுக்கு வர போறீங்களா..
சும்மா தான் சொல்லு..
எங்க ஊர் சென்னை பக்கமா போய் பாண்டி தாண்டி கடலூர் தாண்டி ஒரு ஊர்…
ஒய் ஒழுங்கா சொல்லு …
ம்ம்ம் கடலூர் தான்..
பொய் சொல்லாத நீ பிராடு எனக்கு தெரியும்..
ஹலோ நம்புனா நம்புங்க இல்லாட்டி விடுங்க..
சரி சரி நம்புறேன் ..
எதுக்கு டெல்லி போற..
ம்ம்ம் சும்மா தான் எங்க வீட்ல என்ன தனியா எங்கயும் அனுப்புணது இல்ல .. சோ தனியா போல்ட் ஆஹ் உலகத்தை எதிர்த்து ஒரு ட்ரிப் …
ம்ம்ம்ம் சூப்பர்..
அப்புறம்…
என்ன???
இல்ல உங்க இன்டெர்வியூ ல நான் பாஸ் ஆகிட்டேன இல்லயா..
ம்ம்ம்ம் யோசிச்சு சொல்றேன்…
ஓஹ் யோசிங்க யோசிங்க .. நல்லா யோசிங்க.. உங்களை பத்தி சொல்லுங்க..
நீ கேளு நான் சொல்லறேன்..
ஓஹ் சரி லெட்ஸ் ஸ்டார்ட் மை இன்டெர்வியூ
உங்க பேர்…
உதய குமார்
ஊர்
திருச்சி
படிப்பு
மல்டிமீடியா..
ஓஹ் குட் எங்க ஒர்க் பண்றிங்க…
private கம்பெனி ல customer relationship officer…
ம்ம்ம்ம் ஓகே
சரி சரி உண்ண பத்தி சொல்லு… நெறயா
நான் கிருத்திகா வீட்டுக்கு செல்ல பொண்ணு எனக்கு 2 அக்கா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்று ஆரம்பித்தவள் அவளின் பேச்சை விடவே இல்லை…
கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு பேசு வாய் வலிக்க போகுது…
ம்ம்ம்ம் கொஞ்சம் தாகம் இருக்கு தான் பட் பாதியில் நிறுதிட்டா அப்புறம் புளோ வா சொல்ல வராது…
அம்மாடி நான் உன்கூட இன்னும் 28 மணி நேரம் ட்ராவல் பண்ண போறேன் சோ மெதுவா சொல்லு..
ம்ம்ம் ஓகே
சரி நான் யாருன்னு தெரியாம எப்படி என்ன நம்பி எல்லாத்தையும் சொல்ற.. இப்படி தான் முன்ன பின்ன தெரியதவங்க கிட்ட பேசுவியா நீ…
ம்ம்ம் குட் கொஸ்டின்…
நேத்து நைட் சார் மட்டும் என்ன பண்ணிங்க.. இப்படி தான் முன்ன பின்ன தெரியாத பொண்ணுகிட்ட அட்வைஸ் பண்ணுவிண்களா…
அது வந்து அது…
சொல்லுங்க எந்த உரிமையில அப்படி சொன்னிங்க.. நீங்க சொல்லும் போது நான் உங்களை திட்டி இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க..
நீ திட்டி இருக்க மாட்ட.
ம்ம்ம் அதை தான் நானும் யோசிச்சேன் உங்களை ஏன் நான் திட்டமா விட்டேன்.. நீங்க என் மேல உள்ள அக்கறை ல தான் சொல்லி இருக்கீங்க.. இந்த உலகத்தில் இப்படி ஒரு நல்லவனை நான் பார்த்தது இல்ல சோ உங்களை நம்பி சொல்லலாம் னு தோணுச்சு அதான் சொல்லறேன்..
ம்ம்ம்ம் சரி சொல்லு கிறுக்கி..
ஒய் என்ன சொன்ன…
உனக்கு கீர்த்தி பேர் விட கிறுக்கி னு பேர் வச்சா சூப்பர் இருக்கும்…
டேய் வேண்டாம் நல்லவனே ..
ஒய் அது என்ன நல்லவன்..
ம்ம்ம் நீ எப்போதும் எனக்கு நல்லவன் தான்..
ம்ம்ம் சரி
இருவரின் நட்பும் பிரியும் நேரமும் வந்தது
ஒய் கிறுக்கி இது என் நம்பர் கால் பண்ணு
முடியாது நீ பண்ணு..
எப்படி டி பண்றது .. நம்பர் சொல்லு பன்றேன்…
என் நம்பர் உனக்கு தெரியும் நல்லவனே கண்டுபிடி… கண்டு பிடிச்சி எனக்கு கால் பண்ணு சரியா பை…
அத்தியாயம் 2
இவ நம்பர் எப்படி கண்டு பிடிக்குறது 2 நாள் இவளை பத்தியே யோசிக்குறோமே... ட்ரெயின் ட்ராவல் ப்ரின்ட்ஸ் அவ ஏதோ பண்ணிட்டா உண்ண உதய்..
ம்ம்ம் அவளோட ஐ டி ல போய் சாட் பண்ணலாம் .. முத ரெக்யூஸ்ட் கொடுப்போம் ...
ஹோய் நல்லவனே இன்னும் என் நம்பர் நீ கண்டு பிடிக்கலையா சோ சாட்... நான் பேசும்போது ஒழுங்கா கதை கேட்டு இருந்தா இந்நேரம் கண்டு பிடிச்சி இருப்ப
ஒய் கிறுக்கி ஒழுங்கா நம்பர் சொல்லு டி 2 நாள் இதை பத்தி யோசிச்சு யோசிச்சு மண்டை வெடிச்சிடும் போல.
கூகுள் ஆண்டவர் கிட்ட கேளு அவர் சொல்வார்… அடியே உன் நம்பர் எப்படி இருக்கும்
123456789 இப்படி இருக்கும் நல்லவனே.. சரி டாடா .. எனக்கு டைம் ஆச்சு…
23 வருஷம் அவ வாழ்க்கையில் நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டா ஒரு நம்பர் அதை கொடுக்க எவளோ சீன் போடுற நீ..
வந்தேன் வை உன் தலையிலே கொட்டுவே ன்
வா வா … மொத நம்பர் கண்டு பிடி..
அடுத்த நாள் காலையில் அவன் அவளுக்கு போன் செய் அடுத்த நொடி அதை அட்டெண்ட் செயதால் ..
சொல்லு நல்லவனே
ஒய் கிறுக்கி எப்படி டி கண்டு பிடிச்ச அன்னைக்கு நான் நம்பர் கொடுக்கும் போது நீ வாங்கிகல ..
ஒய் நீ நம்பர் சொல்லும் போதே மன பாடம் பண்ணிட்டேன் அப்போவே சேவ் பண்ணிட்டேன்..
எப்படி இருக்க ..
எனக்கு என்ன சூப்பர் ஆஹ் இருக்கேன் நீ..
ம்ம்ம் நானும் நல்லா தான் இருக்கேன் இரு அம்மா கிட்ட கொடுக்குறேன் அம்மா ..
ஒய் ஒய் இரு இரு ..
ஹலோ எப்படி மா இருக்க..
நான் நல்லா இருக்கேன் மா.. நீங்க
நானும் நல்லா இருக்கேன் .. இவன் வந்தது இருந்து உண்ண பத்தியே தான் சொல்லிட்டு இருந்தான்.. எத்தனை பசங்க டா உனக்கு ..
ஒரு பையன் அம்மா என்று ஆரம்பித்தவள் ஒரு அரை மணி நேரம் அவர்களிடம் பேசிவிட்டுத்தான் வைத்தால்..
ஒய் நல்லவனே நான் எவளோ ஹாப்பி தெரியுமா … இதுவரைக்கும் நான் இவளோ சந்தோஷமா இருந்ததே இல்ல.. இன்னைக்கு ரொம்ப ஹாப்பி எங்க டா இருந்த இத்தனை நாள் .. ஏன் டா எனக்கு சொல்ல வார்த்தை வரல.. 23 வருஷமா நானும் ஒரு பிரின்ட் காக வெய்ட் பண்ணி இருக்கேன் என் பிரின்ட் எனக்கு மட்டும் பிரின்ட் அஹ அவன்கிட்ட உரிமையா பேசணும் .. நெறய சண்டை போடணும் அப்படின்னு.. கடவுளா பார்த்து உண்ண அனுப்பி இருக்கார் னு நினைக்குறேன்… u r my பெஸ்டி டா
ஒய் கிறுக்கி என்ன டி ஏன் ரொம்ப பீல் பண்ற…
யாரு நானா.. நான் ஒன்னும் பீல் பண்ணல .. நான் சொன்னதைலம் மறந்துடு.. சரியா.. நீ எனக்கு யாரோ..
எனக்கும் சென்டிமென்ட்கும் ஒத்து வராது..
சரி சாமி மறந்துட்டேன்… யார் நீங்க…
என் டா மறுபடியும் பிர்ஸ்ட் ல இருந்து என் கதையை சொல்லட்டுமா…
சொல்லு கிறுக்கி சொல்லு…
எப்படி டா நான் போடுற மொக்கையை தாங்குற…
ஏதோ முன் ஜென்ம தொடர்ச்சி போல .. உன்கிட்ட மாடிக்கிட்டு முழிக்கணும்னு இருக்கு…
டேய் நல்லவனே…
சொல்லு கிறுக்கி …
என் டா இவளோ நல்லவனா இருக்க …
அடியே உனக்கு மட்டும் தான் டி நான் நல்லவன் …
ம்ம்ம் ஆமாம் உனக்கு ஏன் அம்மாகிட்ட இன்ட்ரோ கொடுக்கணும் தோணுச்சு..
தெரில்ல டா .. ஏதோ நீ எனக்கு வித்தியாசமா தெரிஞ்ச..ஒய் கிறுக்கி நான் என்னைக்காவது லூசு தனமா உன்கிட்ட சண்டை போட்டுட்டு போய்ட்டா என்கிட்ட ஈகோ பார்த்து நீயும் பேசாம இருத்துடத்த் டி..
ஐயோ அது எப்படி நல்லவனே உண்ண விடுவேன் சொல்லு இந்த ஜென்மம் முழுவதும் என் மொக்கை கேட்க ஆள் வேண்டாமா..
ம்ம்ம்ம் கண்டிப்பா …
நீயே போனாலும் உண்ண விட்டு போகமாட்டேன்… ஈகோ பார்க்க நான் உன் காதலி இல்ல நான் உன் நண்பி.. சாகுற வரை உன்ன விட மாட்டேன்…
ம்ம்ம்ம் சரி
கிருக்கள் 3
டேய் போன் எடு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இப்படி சண்டை போட்டு பேசாம இருக்காத.. இப்ப நீ போன் எடுக்கல அம்மாக்கு கால் பண்ணிடுவேன்..என்று மேசேஜ் அனுப்பினால்
சண்டை க்கு காரணம் சொல்லு . உனக்கு மட்டும் ஏன் டா டன் கணக்குள கோவம் வருது..
(அட கடவுளே எவளோ கேத்தா இருந்த பொண்ணு நான் இவன் நம்மள இப்படி கெஞ்ச விடரானே.. ) எங்க ஊர்ல வந்து பார்த்தா தான் தெரியும் இவனுக்கு
ஒய் இப்போ நீ போன் எடுக்கல நான் லைஃ லாங் பேச மாட்டேன் டா.. இது என் மேல ப்ராமிஸ்...( ம்ம்ம் வேர பெட்டர் அஹ யோசிக்கனும் போலயே )
இப்போ உன் கோவம் என்ன உனக்காக நான் போட்ட போஸ்ட் டெலிட் பன்னது தான இனிமே பண்ண மாட்டேன் ஏதோ தெரியாம பண்ணிட்டேன் டா சாரி …
ஹே ரொம்ப பண்ற … போ போ ..
2 மணி நேரம் சென்று மீண்டும் போன் செய்தால் … அந்த முறையும் அவன் எடுக்க வில்லை… 22 முறை தொடர்ந்து போன் செய்தால்… அவன் எடுக்க வில்லை…
என் என்னால இவனை தூக்கி போட்டு போக முடில்லை நான் ஏன் கெஞ்சனும் இவன் கிட்ட… எதுக்கு இவன் மேல இவளோ பாசம் கண்ணுலாம் வேர்குது .. வீட்ல யாராவது பார்த்தா கண்டு பிடிச்சிடுவங்க( நம்ப கிட்ட கேட்டா எல்லாத்தையும் உளரிடுவோம் )அவன் கால் பண்ணா பார்ப்போம் இல்லை தூங்கி எழுந்து நம்பலே மறுபடியும் பண்ணுவோம்..
சரியாக 1 மணி நேரம் சென்று உதய் அவளுக்கு கால் செய்தான்..
ஹோய் சொல்லு நல்லவனே…
என்ன பண்ற..
ம்ம்ம்ம் இப்போ தான் எழுந்தேன் என் டா என் பேசாம இருந்த உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் .. என்ன அழ வச்சிடல … ஒரு வேலை நானும் பேசாம இருந்தது இருந்தா என்ன டா பண்ணி இருப்ப…
ம்ம்ம் எனக்கு உண்ண பத்தி தெரியும் கிறுக்கி நானே போன் பண்ணலைநாளும் நீயே பண்ணி இருப்ப ..
ரொம்ப நம்பிக்கை தான் டா என் மேல உனக்கு ஆன நீ வேணா பாரு என்னைக்காவது நான் போய்ட்டா என்ன பண்ணுவ..
நீ போக மாட்ட கிறுக்கி ..
நான் போய்ட்டா
மாட்ட
எனக்கு கோவம் அவளோ சீக்கிரம் வராது பட் வந்தா நான் கண்டிப்பா அவளோ சீக்கிரம் பேசமாட்டேன்…
பார்க்கலாம் டி…
மம்ம்ம்ம்ம்
இவர்களின் நட்புகும் ஒரு நாள் பிரிவு வர காத்து கொண்டு இருந்தது….
கிருக்கள் 4
ஒய் எவளோ சூப்பர் அஹ கவிதை எழுதி அனுப்புறேன் பாராட்டுரியா நீ சரியான… வேணாம் வாயில நல்லா வருது…
பாராட்ட கேட்டு வாங்குறியே டி நீ… ?
இப்போ நீ சூப்பர் சொல்லுவியா மாட்டியா….
செம டா சூப்பர்..?
பத்தாது இன்னும் உன்கிட்ட நிறையா எதிர் பார்க்குறேன்...
சான்செய் இல்ல டி செம.. உண்மையவே சூப்பரா இருக்கு..???
இன் என்ற சொல் அப்பாவிற்கோ
இல்லை கணவனுக்கு மட்டும் தான்
பொருந்துமா என் நண்பனுக்கும்
பொருந்தும் ...
நான் ........... மகள்
............. மனைவி
நல்லவனின் கிறுக்கி
ம்ம்ம்ம் உண்மையவா நல்லவனே..
ஆமாம் கிறுக்கி...
ம்ம்ம் அப்போ எனக்கும் ஒரு கவிதை எழுதி அனுப்பு…
அனுப்புறேன் டி
ஒய் அப்பா அம்மா போட்டோ அனுப்பு ..
மம்ம்ம்ம் அனுப்புறேன் …
அவனும் அவன் தாய் தந்தை போட்டோ அனுப்பினான்…
டேய் நல்லவனே அம்மாவை மட்டும் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ஒரு வேலை எங்க சொந்தக்காரங்கலா இருப்பார்களோ…
ம்ம்ம் தெரில்ல இருக்கலாம்
கொஞ்ச நேரத்தில் அந்த போட்டோவை எடுத்து கிருத்திகா அவள் அம்மாவிடம் காட்டி கேட்க அதை தேட அந்த போட்டோ டெலிட் செய்ய பட்டு இருந்தது…
ஏன் டா டெலிட் பண்ண என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா… அம்மா அப்பா போட்டோ வை நான் என்ன பண்ண போறேன் சொல்லு…என்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்ட டா … நான் உன்னை ரொம்ப பெஸ்ட் அஹ நினைச்சா நீ என்ன தள்ளி வச்சி பார்க்குற ..
ஒய் கிறுக்கி அப்படிலாம் இல்லடி .. எப்போவும் எல்லார்க்கும் அனுப்பிட்டு டெலிட் பண்றது என் பழக்கம் அதான் அப்படி பண்ணிட்டேன்..என் டி இன்னொன்னு அனுப்புன்னு உரிமையா கேட்க வேண்டி தான..
வேண்டாம் டா உன்கூட பேச எனக்கு விருப்பம் இல்லை இனி என்கூட பேசாத..
ஒய் கிறுக்கி ...
போடா போ ...
உண்மையா போயிடுவேன் டி
போ டா என் பாசம் உனக்கு தெரில்ல... நான் என்ன நடந்துச்சோ அதை எல்லாம் உன்கிட்ட உளராம தூக்கம் கூட எனக்கு வராது ஆன நீ என்கிட்ட ஒரு போட்டோ கூட ஷார் பண்ண மாட்ற...
ஒய் கிறுக்கி நான் உன்னை மாதிரி கிடையாது டி … அவளோ சீக்கிரம் என்னோட பர்சனல் யார் கிட்டயும் சொல்லிட மாட்டேன் … ஆன என்னையும் நீ சொல்ல வச்சிட்ட…
இப்போ சொல்றேன் கேட்டுக்கோ என்னோட கிறுக்கி ய தள்ளி நிறுத்தி பழக மாட்டேன் .. அவ என்னைக்கும் என்னோட கிறுக்கி தான்.. உண்ண என் குடும்பத்துல ஒருத்தியா தான் பார்க்குறேன் டி..
நீ என்ன சொன்னாலும் உண்ண என்னால மன்னிக்க முடியாது போடா
போகாட்டுமா டி .. உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் ல
இனி நான் உன்கூட பேச விரும்பல போ
இருவரும் ஒரு வாரம் பேசி கொள்ள வில்லை…
ஒரு போன் பண்ரான பாரு கல் நெஞ்சு காரன் நான் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருப்பான்… ஆன்லைன் பக்கம் கூட வர மாற்றான்… என்ன ஆச்சு னு தெரிலயே … இவன் கிட்ட பேசாம இருந்தா ஒவ்வொரு நிமிடம் அவனை பத்தியே யோசிக்குறோமே..
டேய் நல்லவனே உண்மையவே கிறுக்கு புடிக்க வச்சிட்ட… உண்ண என்ன பன்றேன் பாரு என்று அவள் நினைக்க…
எப்படி கிறுக்கி என்கிட்ட உள்ளாராம உன்னால் இருக்க முடியுது … நானும் பார்க்குறேன் இன்னும் எத்தனை நாளைக்கு பேசாம இருக்கனு…
அன்று அவன் பிறந்த நாள்… இரவு 12 மணிக்கு போன் செய்தால்…
இவன் வேண்டும் என்றே கட் செய் …
மீண்டும் செய்ய.. போன் எடுத்து ஹலோ யார் என்று அவன் கேட்க
டேய் என் நம்பர் கூட டெலிட் பண்ணிட்டியா நீ உண்ண .. நல்லாவே இருக்க மாட்ட நீ…
அடியே birthday அதுவுமா சாபம் விடாத டி…
நான் இல்லாம் ஒரு வாரம் சந்தோஷமா இருந்த போல… ஒரு பொண்ணு நம்ப கிட்ட பேசலயே ஏதாவது பீல் பண்ணியா நீ.. ஒரு போன் பண்ணி சாரி கேட்டியா நீ… எவளோ கொழுப்பு டா…
ஒய் இப்போ திட்ட தான் போன் பண்ணியா…
இல்ல உனக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்கணும் அதான் போன் பண்ணேன் ..
பட் உனக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன்
கிறுக்கி …
மம்ம்ம்ம்
என் கிறுக்கி தான நீ… நீ என் லவ்வர் இல்ல டி உன்கிட்ட நான் கெஞ்ச ..அதுக்கும் மேல நீ எனக்கு… இதை விட என் பாசத்தை உனக்கு எப்படி சொல்றதுன்னு தெரில்ல டி … நீ வேணும் உன்னோட டார்ச்செல் நான் சாகும் வரை வேணும்…
ம்ம்ம்ம் am just born for disturb u நல்லவனே…உண்ண விட மாட்டேன்… சொர்கத்தில் வந்தும் டார்ச்செல் பண்ணுவேன்…
வா வா இன்னைக்கு மட்டும் இல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் நண்பி…
டேய் ஐ hate சென்டிமென்ட் எல்லாத்தையும் மறந்துடு… இப்போ நீ யாரோ நான் யாரோ…
to be continued….