காதல் மட்டும் புரிவதில்லை 11
மாலதியின் வளைகாப்பு வைபவம் ஆரம்பமானது ..
அழகிய கிளி பச்சை நிற சேலையில் கவனமெடுத்து செய்யப்பட்ட அலங்காரத்தின் உதவியோடு ஜொலித்தாள் …மண்டபத்தை வளைய வந்தவளின் பின்னே அரவிந்தனின் இரு ஜோடி கண்களும் வளைய வந்தன.. அதை அறிந்தும் அறியாததுபோல் இருந்தாள் பிரபா …
வளைகாப்பு வைபவம் முடிந்ததும் மாலதி இளைப்பாற உதவி செய்துகொண்டு விருந்தினர்களை கவனித்துக் கொண்டிருந்தாள் பிரபா..
வீட்டுக்கு வந்ததில் இருந்து பிரபாவின் பெயரை 10 முறை ஏலம் விட்டான் அரவிந்தன் …
எத்தனை தடவை கூப்பிடுவீங்க? என்றாள் பிரபா ..
பத்து தடவை…
எண்ண வேற செஞ்சீங்களா !!!
முதல் தடவை கூப்பிடும் போதே வந்து இருந்தா நான் ஏன் இத்தனை தடவை கூப்பிடுறேன்???
வருவேன் ல .வராமல் எங்க போவேன் ?எல்லாரும் கிளம்பின பிறகு வரலாம்னு நெனச்சேன்…..
அவங்க எப்ப கிளம்றது?நீ எப்ப வர்றது?
சார் பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கே!!
இனி எல்லாம் அப்படித்தான் !!!
அப்படியா ???
அப்படித்தான்!!
சரி!! சரி !!
எல்லாரும் கிளம்பிட்டாங்களா?
கிளம்பிட்டாங்க!!
சித்ரா ?!?
ம்..கிளம்பியாச்சு ..
சித்ராவைப் பற்றி அரவிந்தனிடம் கேட்டறிய இதுவே சரியான தருணம் என நினைத்தாள் பிரபா…
என்ன சித்ராவைப் பற்றி மட்டும் ஸ்பெஷல் விசாரிப்பு!! என்றாள்…
ஸ்பெஷலாம் ஒன்னும் இல்ல …எப்பவும் அவள் கிளம்பினா பஸ் ஏத்தி விடுவேன்.. அதான் கேட்டேன் …
இது வேறயா!!!
ம்.. அதனால என்ன??
அதனால ஒன்னும் இல்ல…
உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்!?
கேளு!!! நீ கேட்டால் எது வேணாலும் தருவேன் …என கொஞ்சினான்..
அவனது மனநிலை யை அறியாது சித்ரா வைப் பற்றி விசாரிப்பில் ஆர்வம் காட்டினாள்…
எதுக்கு சித்ரா அன்னைக்கு கோபமா இருந்தாங்க??
என்னைக்கு ??
உங்களுக்கு ஞாபகம் இல்லையா?
இல்ல!
சரி விடுங்க!!
கேட்க வந்ததை முழுசா கேளு பிரபா. கோபம் காட்டினான் குரலில் ….
உங்களுக்கும் சித்ராவுக்கும் லவ்ஸா!!?? என்று விளையாட்டு போல் கேட்க முயன்றாள்…
ஒருவேளை ஆமாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையுடன்….
அரவிந்தனின் பதிலுக்கு காத்து இருந்த ஒவ்வொரு நொடியும் யுகமானது பிரபாவுக்கு ….
ஆத்திரத்துடன் அரவிந்தன் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றான் பதிலேதும் சொல்லாமல்…
மனம் மட்டும் கொதிகலனாய் …
மனம் முழுக்க இவளை மட்டும் நிரப்பி உருகி உருகி மனசுக்குள்ள காதலிக்கிறேன் இவ என்னடான்னா இப்படி கேள்வி கேட்கிறா… என்று புலம்பினான் மனதினில் ….
புரிதலுள்ள காதலுக்கு மௌனம் கூட மொழிதான் !!!
புரியாத காதலுக்கும் புரிபடாதகாதலுக்கும்மௌனமும் வலி தான்!!!
காதல் மட்டும் புரிவதில்லை!!!!