தாயே !!!
தனக்காக வாழத் தெரியாமல் தனயனுக்காகவும்
தவப்புதல்விக்காகவும் வாழும் உன்
தவ வாழ்க்கை
ஒரு பத்து மாதமா!??
பாலூட்டி
நிலாச்சோறூட்டி
தாலாட்டுப்பாட்டு பாடி (சரி ..சரி ..யாருங்க இந்த காலத்தில பாட்டு பாடுறா னு நீங்க சொல்றது கேட்குது… மொபைல் யாவது பாட்டுகாட்டு றோம்ல….)
தனக்காக ஒரு முறையும்
தன் மக்களுக்காக ஒருமுறையும்
பள்ளிப் பாடம் படித்து
ஏட்டுக் கல்வியோடு
ஏழெட்டு பயிற்சி வகுப்புக்கும் சென்று பதின்பருவத்தில்
பக்குவமாய் வளர்த்து
கல்லூரிக்காலத்தில்
கவனிப்பது தெரியாமல்
கண்காணித்து
வீடு எனும் கூட்டைவிட்டு
வெளியேற
வேண்டிய வயதில்
வெளியுலகைக்கைகாட்டி
தன் மக்கள்
தன் காலில் நிற்பதை
ரகசியமாய்
ரசித்து
தகுந்த துணையுடன்
கைகோர்ப்பது
கண்டு
கண்ணில் வேர்த்து (அதாங்க …ஆனந்தக் கண்ணீர்)
தன் பேரப் பிள்ளைகளின்
அதட்டலுக்கு
அடிபணிந்து
கணப்பொழுதும்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கடவுளிடம்
தனக்காக வேண்டாமல்
தன் நன் மக்களுக்காய்
வரம் கேட்கும் தாயே !!!!
உன் தவ வாழ்க்கை
ஒரு பத்து மாதமா!!??