ஒரு ஸ்வீட்டான டேஸ்ட்டான எல்லாரும் ரொம்ப புடிச்ச ரெசிப்பி தான் பாக்க போறோம்
ஆனா செய்ரது?? போங்கப்பா வேலை ரொம்ப ஜாஸ்தி நம்மாலாகாது னு நாம ஒதுக்குற ஐட்டம எப்டி ஈசியா பண்ணலாம் னு பாக்கலாமா??
அவல் புட்டு
தேவை:
கெட்டி அவல் : 200 கிராம்
சர்க்கரை : 7-8 ஸ்பூன்
தேங்காய் : கால் மூடி
ஏலக்காய் : 1சிட்டிகை
உப்பு: 1சிட்டிகை
நெய் : 2 ஸ்பூன்
செய்முறை:
கெட்டி அவலை லேசாக வருத்து கொர கொரப்பாக பொடித்து அதில்
சிட்டிகை உப்பும், ஏலக்காய் பொடியும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
கால் கப் தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து கிளறிக்கொள்ளவும்.
புட்டுக்குழல்
புட்டு குழலில் அடுக்கடுக்காக புட்டு மாவு, தேங்காய், சர்க்கரை என போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கி பரிமாறவும்..
இட்லி பானை
இட்லி பானையில் நெய் தடவி ஒவ்வொரு கிண்ணத்திலும் மாவை நிரப்பி 8 நிமிடம் வேகவைத்து இறக்கி ஆறியதும் தேங்காய் சர்க்கரை சேர்த்து பரிமாறவும்…
மொத்த செய்முறை நேரம் 20-30 நிமிடம் தான்….
ட்ரை பண்ணி பாருங்க….