காதல் புடிக்கும்னா மட்டும் இந்த பதிவை படிக்க ஆரம்பிங்க ப்ரண்ட்ஸ்.
என் பெயர் கெளதம்.சொந்த ஊர் கோவை.இப்ப சென்னைல இருக்கேன்.இந்த உலகத்த வெறும் கண்களால் பாக்க புடிக்காதுங்க எனக்கு காரணம் நான் ஒரு கேமரா மேன்.சின்ன வயசுல இருந்தே கேமரா மேல பைத்தியம் எனக்கு .அப்பாக்கு புடிச்ச மாதிரி படிச்சிட்டு எனக்கு புடிச்ச மாதிரி தமிழ் சினிமால பேமஸ் கேமரா மேன்ட அசிஸ்டண்டா இருக்கேன். இப்ப நான் திருச்சில இருக்கேன் ஒரு கல்யாண மண்டபத்தில் முன் வரிசையில் இருக்கேன்.
இந்த கல்யாண மண்டபத்தில் யாருமே என்ன கண்டுக்கலங்க ஏன்னா? என்ன யாருக்குமே தெரியாது என்ன யாருமே கூப்புடவும் இல்ல அப்புறம் ஏன் வந்தேன்னா என் தேவதைய பாக்கத்தாங்க.அவ வர இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் போல அதுக்குள்ள அவள பத்தி என் காதல பத்தி சொல்லிற்றேன். சென்னையில இதே மாதிரி ஒரு கல்யாண வீட்ல தான் அவள பாத்தேன்.கல்யாணம் முடிஞ்சதும் முறை பொண்ணுங்களும் பசங்களும் ஒருத்தருக்கொருத்தர் விரட்டி விரட்டி கன்னத்துல சந்தனம் பூசி விளையாடிட்டு இருந்தாங்க.அங்கயும் என்ன யாருமே கண்டுக்கல.என் கன்னத்தில் சட்டுன்னு சில்லுன்னு ஒரு உணர்வு.என் கன்னத்தில் சந்தனம் அப்பிட்டு ஒரு பொண்ணு ஓடிட்டு இருந்தாள்.
அவள பாக்க ஆர்வம் தூண்டி விட துரத்த ஆரம்பிச்சேன்.மணப்பெண் அறையில தனியா மாட்டுனா.கைய புடிச்சு திருப்பி பார்த்தேன்.அழகிங்க அவ தேவதை.ஷாக் அடிச்ச மாதிரி கைய உதறிட்டு ஓடிட்டா. கல்யாண வீடு பூரா அலசி அவ அட்ரஸ புடிச்சேன்.அப்புறம் என்னங்க மறுநாள்ல இருந்து விரட்ட ஆரம்பிச்சேன்.அவ கண் பார்வை படுற இடத்துல எல்லாம் காத்திருந்தேன். இரண்டும் மாசத்துக்கு அப்புறம் அவளும் பாக்க ஆரம்பிச்சா.
மூணு மாசத்துக்கு அப்புறம் காதல சொன்னேன்.ஒரு வாரத்திற்கு பிறகு தான் அவளும் காதல சொன்னா.புதுசா இறக்கை முளைச்ச பறவை மாதிரி தோணுச்சு. சென்னையில ரோம்ப கஷ்டத்தில் இருந்தேன்.அவ என் கைய புடிச்சான்னா எல்லாம் பறந்து போயிரும் சில சமயம் பசி கூட. சினிமாவில் சில அவமானங்கள் கண்ணீரை வரவழைத்து விடும் நான் கண்ணீர் சுமந்தால் அவள் மடியில் சாய்த்து எளிதில் தேற்றிடுவாள் அன்னையை போல.காதலி பல சமயம் நண்பனா சில சமயம் அம்மாவ இருந்திருக்கா. நல்ல கதையில வழக்கமான ட்விஸ்ட் அவுங்க அப்பா என்ன பாக்க வர சொன்னாரு .நானும் போயிருந்தேன்.சின்ன அமைதிக்கு பிறகு”தம்பி நான் காதல எதுக்கல.உங்க தொழிலையும் வெறுக்கல.உங்க காதலிய தாண்டி இன்னும் இரண்டு பொண்ணுங்க இருக்காங்க.ஒரு அப்பாவா எனக்கு நிறைய கடமை இருக்கு.அதனால சீக்கிரத்தில் நல்ல செய்தியோட உங்க அப்பா அம்மாவ கூட்டிட்டு வாங்க “என்று புறப்பட்டார் .அவரின் நிலை புரிந்தது . வேகமாக வாய்ப்பு தேட ஆரம்பித்தேன் .முதல் படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது .
என்னோட முழு உழைப்பையும் போட்டு வேல செஞ்சேன் .ஒரு படம் ஓட கேமரா மேன் மட்டும் போதுமா? ஆமாங்க படம் தோல்வி .எதிர்காலத்த நோக்கி பெரிய கேள்வி குறி இருந்துச்சு .அவ வீட்டுக்கு போயிருந்தேன்.எல்லோரும் இருந்தாங்க.அவுங்க அப்பா கைய புடிச்சு”சார் உங்க பொண்ணு தேவதை ஆனா என்ன எனக்கு தான் சேர்ந்து வாழ குடுத்து வைக்கல.என் எதிர்கால போரட்டத்தில் உங்க பொண்ணயும் உங்களயும் கஷ்டப்படுத்த மனசு வரல.உண்மையா காதலிச்சா காதலி கஷ்டபடுறத பாக்க முடியாது சார்.அவளுக்கு ஒரு வாழ்க்கைய அமைச்சு கொடுங்க ப்ளிஸ் “அடுத்த நொடி அவள திரும்பி கூட பாக்காம ரூம்க்கு வந்துட்டேன்.நிறைய அழுதேன்.ஊருக்கு போயிட்டு வந்தேன்.அம்மா மடியில படுத்து மனச சரி செஞ்சுகிட்டேன்.இப்ப அவ கல்யாணத்துல முத வரிசையில் கையில் பரிசோட உட்காந்திருக்கேன்.அவ வந்துட்டாங்க நல்ல படியா கல்யாணம் முடிஞ்சதுங்க.திருப்தியா சாப்டேன்.அவளுக்கு கிப்ட் கொடுத்தேன்.அவ என்ன அவ கணவருக்கு அறிமுகம் செஞ்சு வச்சா நண்பனா.கிளம்பி மண்டபம் தாண்டும் போது ஒரு கை என்னை தடுத்து நிறுத்தியது.
என் எதிரில் அவள் என் கண்களையே உற்று பார்த்தவள் என் மருதாணி கைகளுக்குள் மடக்கி வைத்திருந்த சில 500 ரூபாய் நோட்டுகளை என் பாக்கெட்டில் திணித்தாள்.அடுத்த நொடியில் “சீக்கிரமா இங்கிருந்து போயிரு.நான் அழுதுருவேன்.நல்ல சாப்புடு.டையத்துக்கு தூங்கு.புது டிரஸ் வாங்கிக்கோ.”என்றவள் மேற்கொண்டு வார்த்தை இன்றி அழுகையின் பிடியில் செல்ல நான் வேகமாக வெளியேறினேன்.தெரு முனை தாண்ட முடியாமல் ஒரு வீட்டின் சுவரில் சாய்ந்து மனம் தேறும் வரை அழுதுவிட்டு மூணு மணி வாக்கில் ஒரு இயக்குனரை சந்திக்க கிளம்பினேன் மீண்டும் வாய்ப்பு தேடி!
[முற்றும் ]
[சில காதல் தோத்தாலும் அழகு தாங்க]கருத்துக்களை பகிரவும்.]
நான்
உங்கள்
கதிரவன் !
(என்னோட வாட்ஸ்அப் நம்பர் 9600532669 )