சூரியன் ஒரு நாள் கூட நீ உறங்கி பார்த்ததில்லை….
நிலவிற்கோ அரையிரவு கடக்கும் வரை உடனிருக்கும் தோழி நீ…
சரியான வேளைவில் நீ உண்டு பார்த்ததில்லை நாங்கள்…
நன்னாளில் அழகாய் அணிந்து
வளைய வரக் கண்டதில்லை ஊரும்..
உழைத்து உழைத்து
காப்பு காச்சிய கைகள்…
ஓடி ஓடி பித்தவெடிப்புகளுடன்
தேய்ந்து போன கால்கள்…
எங்கள் எதிர்காலம் எண்ணி எண்ணி
நிகழ்காலம் தொலைத்த
இளநரை தலை…
கனிவை மட்டுமே காட்டத்
தெரிந்த கண்கள்…
அன்பை மட்டுமே தரும் உதடுகள்..
தியாகத்தை மட்டுமே அறிந்த மனது..
எல்லாருக்கும் அன்னை உண்டு…
எனினும் உன்னுடன் ஒப்பிட
ஒருவரும் பிறக்கவில்லையே..
எண்ணற்ற தியாகங்களால்
எங்களை வளர்த்து ஆளாக்கினாய்..
இன்றும் என்றும் எங்கள்
நலனன்றி வேறு கேட்டதில்லை
இறைவனிடம்…
என்ன கைம்மாறு செய்ய முடியும்?
என்னை ஈன்றெடுத்த வலிக்கு கூட
ஈடு செய்ய இயலாது எனும்போது..
என்றும் உன் அன்பை
நெஞ்சில் இருத்தி..
உனைப்போலவே அன்பு செலுத்த
முயலுவதை விட வேறேதும் செய்ய இயலாது..