Home Blog
Story Link
https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. எத்தனையோ முறை சரி செய்தும் பலனில்லை. அதனால் தான் இந்த முடிவு. லிங்க் கீழே கொடுத்து இருக்கிறேன். இனி கதைகள் தொடர்ந்து புது பிளாகில் பதியப்படும்.
https://madhutamilnovels.blogspot.com/
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தனது அருமை கணவர் சித்தார்த்தின் முகத்தை தான்.
சித்தார்த்தின் கண்களோ அவள் முகத்தை விட்டு இம்மியும் நகரவில்லை. தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்தவனின் வியர்வை ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் அவன் வெகுநேரமாக இப்படி இதே நிலையில் தான் பயிற்சி செய்து கொண்டிருக்கிறான் என்பதை சொல்லாமல் சொல்ல பயத்தில்...
அத்தியாயம் 4
பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம் போன பிறகு தான் கவனித்தாள். அவளது பின்னாடியே ஒரு போலேரோ (Bolero) கார் தொடர்ந்து வருவதை... இந்த ஊரில் யார் அவளை தொடர்ந்து வருவது? யோசிக்க பிரமாதமான மூளை ஒன்றும் தேவை இல்லையே...
இப்பொழுது இறங்கி அவனிடம் சண்டை போடுவதை விட விஷ்வாவை போய் பார்த்து அவனது உயிரை பாதுகாப்பது...
அத்தியாயம் 3
விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி.
‘அவன் இங்கே வந்தது எதேச்சையாகவா அல்லது திட்டமிட்டா? திட்டமிட்டு வருவதென்றால் அவனுக்கு இந்த இடம் எப்படித் தெரியும்? கண்டிப்பாக நிவேதிதா சொல்லி இருக்க மாட்டாள்’.
அப்பொழுதும் தோழி மீது இருந்த நம்பிக்கை அவளுக்கு குறையவில்லை.
‘எதேச்சையாகத் தான் வந்திருக்க வேண்டும்... நான் தான் அவனைப் பார்த்ததுமே பயந்து நடுங்கி இப்படி ரூமுக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டு இருக்கேன்’ என்று தன்னை...
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின் மனம் அந்த அழகில் நிலைக்கவில்லை. மாறாக அன்றைய தினத்தை நோக்கி பயணித்து தோழிக்காக வருந்திக் கொண்டிருந்தது..
அன்று அந்த புதியவனை அறைந்த பிறகு தான் இருக்கும் சூழல் உறைக்க... தன்னை சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். அங்கே இருந்த அத்தனை பேரின் பார்வையிலும் அவள் மீதான பரிதாபமே தொக்கி நிற்க......
இளங்காலைப் பொழுதில் தன்னுடைய கார் பயணத்தை சுகமாக ரசித்து அனுபவித்தபடியே பயணித்துக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. இன்னும் சூரியனின் கதிர்கள் பூமியை தொட்டு... தன்னுடைய ஆட்சியை செலுத்தி இருக்காததால் , லேசான குளிருடன் இருந்த அந்த காலைப் பொழுது அவளது வாழ்வையே மாற்றப் போவதை அறியாமல் காரின் ஜன்னலின் வழியே வந்து கொண்டிருந்த காற்றை ஆழ்ந்து சுவாசித்து மகிழ்ச்சியுடன் நுரையிரலில் நிரப்பிக் கொண்டாள்.
இன்னும் சற்று நேரத்தில் அவளுடைய குடும்பத்துடன்...
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே இருந்தாலும் அவர் வீட்டுக்குள் எந்த பயலாலும் நுழைய முடியாது”என்றார் பெருமையாக.
“ஹுக்கும்... செவுத்துல கரண்ட் ஷாக் வச்சா அப்புறம் எவன் வருவான்’ என்று உள்ளுக்குள் திட்டித் தீர்த்தாள் வானதி.
அவள் மௌனமாக சாப்பிட அவளுக்கு உணவு பரிமாறிய வண்ணம் அவளிடம் ஈஸ்வர் புகழ் பாடத் தொடங்கினார் பவுனம்மா.
“தம்பி ரொம்ப நல்ல...
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும் புரிஞ்சுதா?” என்றார் குரலில் கண்டிப்புடன்.
“முதல்ல அவன் என்ன செஞ்சான்னு தெரியுமா?”
“எடு விளக்கமாத்த.... இன்னும் கொஞ்ச நேரத்தில் இரண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகப் போகுது... இன்னமும் என்ன கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம அவன், இவன்னு பேசிக்கிட்டு இருக்கே...” என்று அவளை வறுத்து எடுத்த காமாட்சியின்...
தீண்டாத தீ நீயே.... சில துளிகள்
“சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி இருக்கான்.ஒருவேளை நீங்க தேடுறதை நிறுத்திட்டா...அவங்களுக்கு பதிலா வேற பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டா இந்தப் பிரச்சினையில் இருந்து ஈஸியா வெளி வந்திடலாம்.அதுவும் இல்லாம...”சம்ஹார மூர்த்தியின் இமைக்காத பார்வையில் ஒரு நொடி தயங்கியவன் மீண்டும் பேசத் தொடங்கினான்.
“அந்தப் பொண்ணைத் தேடுறதுக்காக இவ்வளவு செலவு செய்யணுமா? இத்தனை விமானம்...இத்தனை ஆட்களுக்கு சம்பளம்...அது தவிர...